
உங்கள் வீட்டில் உங்கள் படுக்கையும் ஒரு அங்கம். அதை தீபாவளிக்கு முன்பு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். பண்டிகையை நீண்ட நேரம் கொண்டாடிய பிறகு உங்களுக்கு அமைதியான ஓய்வு அவசியம் இல்லையா? இந்த முறைகளைக் கையாண்டு உங்கள் வீட்டு பெட் லினன்களையும் கர்ட்டன்களையும் சுத்தம் செய்து தீபாவளிக்கு தயாராக்குங்கள்.
பெட்ஷீட்டுகள், கர்ட்டன்கள், ரக்ஸ், தலையணை உறைகள் மற்று மிதியடிகள் போன்றவற்றை தனித்தனியாக ரகம் பிரித்து துவைப்பது அவசியம்.
1) பெட்ஷீட்ஸ்
உங்கள் பெட்ஷீட்டுகளை வாசிங் மெஷினில் நீங்கள் சுத்தம் செய்யலாம். அதற்காக கேர் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வெப்ப நிலையை நீங்கள் செட் செய்ய வேண்டும். நீங்கள் பாலியெஸ்ட்டர் துணிகளுக்கு வெந்நீரையும், காட்டன் துணிகளுக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்தலாம். துவைக்கும்போது ஒரு கப் வினிகரை விடவும். இது பாக்டீரியாவை கொல்வதற்கு உதவும். அவற்றை கயிற்றில் இயற்கையான வெயிலில் உலர விடவும்.
டார்க் நிறத் துணிகளையும், லைட் நிறத் துணிகளையும் தனித்தனியாக துவைக்கவும்.

2) குஷன் கவர்கள்
வாஷ் கேர் லேபிளில் ட்ரை க்ளீன் மட்டும் என்று எழுதி இருக்காவிடால் நீங்கள் குஷன் கவர்களை வீட்டு வாஷிங் மெஷினிலேயே துவைக்கலாம். இதற்கு மென்மையான டிடெர்ஜென்ட் போட்டு குளிர்ந்த நீரில் குறைவான நேரம் மட்டும் துவைக்கவும். அவ்வற்றை வெயிலில் காற்றில் உலர விடவும்.
3) கர்ட்டன்கள்
கர்ட்டனை எடுத்து அதில் இருக்கும் ஹூக்குகள் அல்லது ரிங்குகளை நீக்கவும். நீங்கள் கர்ட்டன்களை மெஷினிலும் துவைக்கலாம். அதற்கு குளிர்ந்த நீரில் மென்மையான டிடெர்ஜென்ட் விட்டு துவைக்கவும். இது நாசூக்கான துணி என்பதால் அவற்றை தனியான மெஷ் பைகளில் வைத்து வாஷிங் மெஷினில் போடவும். துவைத்த பிறகு அவற்றை நான்-ஹீட்டிங் செட்டிங் (மெஷினில் கொடுக்கப்பட்டிருந்தால்) மூலம் உலர விடவும். அல்லது நிழலில் கயிற்றில் போட்டு காற்றில் உலர்த்தவும். சூடு அல்லது இஸ்திரி போடுதலைத் தவிர்க்கவும்.
வெல்வெட் கர்ட்டனாக இருந்தால், நம்பகமான லாண்டரியில் கொடுத்து சலவை செய்யவும். இதன் மூலம் சேதத்தை தவிர்க்கலாம்.
4) ரக்ஸ் மற்றும் மிதியடிகள்
நீங்கள் ரக்ஸ் மற்றும் மிதியடிகளை ஒன்றாக துவைக்கலாம். ஆனால் மற்ற துணிகளிலிருந்து தனியாக பிரித்து துவைக்கவும். அவற்றை உங்கள் மெஷினில் வெந்நீர் செட்டிங் வைத்து அதில் டிடெர்ஜென்ட் மற்றும் ஒரு கப் வினிகர் விட்டு துவைக்கவும். இதன் மூலம் அவற்றிலுள்ள அழுக்கையும், பாக்டீரியாக்களையும் ஆற்றலுடன் நீக்க முடியும்.
இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டின் எனர்ஜியை மேம்படுத்துங்கள். புத்துணர்வுள்ள பெட் லினன் மற்றும் கர்ட்டன்களுடன்!