உங்கள் ரெயின்கோட்களை சுத்தம் செய்து பாதுகாக்க சரியான வழி

உங்கள் ரெயின்கோட்களை சுத்தம் செய்ய சில யோசனைகளைத் தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவ சில குறிப்புகள் இங்கே உள்ளன!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

The Right Way to Clean and Store Your Raincoats
விளம்பரம்
Surf Excel Matic Liquid

இப்போது பருவமழை முடிந்தது, உங்கள் ரெயின்கோட்களை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டிய நேரம் இது. மழை சில நேரங்களில் கணிக்க முடியாததாக இருக்கும், அதற்காக எப்போதும் தயாராக இருப்பது சிறந்தது. வயது வந்தவராக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், மழையிலிருந்து பாதுகாத்து கொள்ள, ரெயின்கோட் மிகவும் பயனுள்ள முறையில் உதவுகிறது. ரெயின்கோட்கள் நீரிலிருந்து மட்டுமல்ல; சாலைகளில் பயணிக்கும்போது, ​​குறிப்பாக குட்டைகளுக்கு மேல் தெறிக்கக்கூடிய அழுக்கு மற்றும் மண்ணிலிருந்து அவை நம்மைப் பாதுகாக்கின்றன. ரெயின்கோட்டுகளை எவ்வாறு சரியான முறையில் சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ரெயின்கோட்களிலிருந்து வரும் நீர் மற்றும் மண் கறைகளை சுத்தம் செய்து அவற்றை முறையாக பராமரிக்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றவும்

படிநிலை 1: வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்து அதற்குள் உங்கள் ரெயின்கோட்டை வைக்கவும். 

படிநிலை 2: திரவ சோப்புத்தூள்

ஒரு கப் திரவ சோப்பு எடுத்து, வாளியின் உள்ளே ஊற்றி, நன்கு கலக்கவும். ரெயின் கோட்டை 1 மணி நேரம் ஊறவைக்கவும். 

விளம்பரம்
Surf Excel Matic Liquid

படிநிலை 3: பிரஷ்

இப்போது ரெயின்கோட்டை எடுத்து மென்மையான பிரஷை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். மண் கறைகளை விரைவாக அகற்றுவதற்காக, மென்மையான பிரஷ் கொண்டு வட்ட வாக்கில் தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.

படிநிலை 4: வெற்று நீரில் கழுவவும்

இப்போது ரெயின்கோட்டை ஓடும் நீரின் கீழ் கழுவவும் அல்லது அவற்றை ஒரு வாளி சாதாரண நீரில் நனைத்து அதிகமாக இருக்கக்கூடிய சோப்பு மற்றும் கறைகளை முழுவதுமாக அகற்றவும்.

படிநிலை 5: காற்றில் உலர்த்தவும்

ரெயின்கோட்டை சிறிது கசக்கி, அவற்றைப் பரப்பி, சூரிய ஒளியின் கீழ் தொங்க விடுங்கள். வெளியில் மழை பெய்தால், விசிறி / டேபிள் விசிறியின் கீழ் உலர அனுமதிக்கவும்.

படிநிலை 6: உலர்த்தும் பகுதிக்கு அடியில் பாய் / துணியை வைக்கவும்

வீட்டிற்குள் அவற்றை உலர்த்தினால், தொங்கும் ரெயின்கோட்டுக்கு கீழே ஒரு பாய் அல்லது துணியை விரிக்கவும், ஏனென்றால் நீர்த்துளிகள் தரையில் சொட்டி, தரையை ஈரமாகிவிடும்.

படிநிலை 7: கறைகளைத் துடைக்கவும்

ரெயின்கோட்டை வாஷ் செய்யவும், உலர்த்தவும் உங்களுக்கு நேரம் இல்லையென்றால், பின்வரும் குறிப்புகளை பின்பற்றவும்.

  • ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து, சோப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை நிரப்பவும்.

  • ரெயின்கோட்டில் இருக்கும் மண் கறைகளில் தெளிக்கவும், வட்ட இயக்கங்களில் பிரஷ் செய்யவும்.

  • அழுக்கு மற்றும் சோப்பு ஆகியவற்றை சுத்தமான ஈரமான துணியால் துடைக்கவும்.

  • காற்றில் உலர விடவும்.

அவ்வளவுதான், உங்கள் ரெயின்கோட் மீண்டும் பயன்படுத்த தயாராக உள்ளது.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது