
சல்வார் சூட்டான இந்திய உடைக்கு, துப்பட்டாக்கள் கூடுதல் அழகை சேர்க்கின்றன. துப்பட்டாக்கள் வெவ்வேறு பாணிகளில் வெவ்வேறு இடங்களில் மற்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக இந்தியா முழுவதும் பெண்களால் அணியப்படுகின்றன. இது தலைமுடியை மறைப்பதற்கான மரியாதைக்குரிய அடையாளமாக , அல்லது முகத்தை மறைக்க ஒரு சூரிய கவசமாகவ ும் பயன்படுத்தப்படுகிறது, இது பல்வேறு நோக்கங்களுக்கு உதவுகிறது, இதன் விளைவாக அவற்றில் தூசி, அழுக்கு, வியர்வை மற்றும் நாற்றம் எளிதில் பற்றிக் கொள்கின்றன.
உங்கள் துப்பட்டாக்களை சுத்தம் செய்து அவற்றை நல்ல வாசனையாக மாற்ற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Step 1: வண்ணங்களுடன் கவனமாக இருங்கள்
நாம், துணியின் தன்மை குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் சில துப்பட்டாக்கள் துவைக்கும்போது சாயங்களை வெளியேற்றலாம், எனவே அவற்றை மற்ற ஆடைகளுடன், குறிப்பாக வெள்ளை ஆடைகளுடன் துவைக்க வேண்டாம்.
Step 2: லேசான சோப்புத்தூள்
நீங்கள் துப்பட்டாவை கைகளால் துவைக்கிறீர்கள் என்றால், ஒரு கப் லேசான அல்லது நீர்த்த சோப்பை, ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நன்கு கலக்கவும். துப்பட்டாக்களை உள்ளே ஊறவைத்து 10 நிமிடங்கள் அங்கேயே வைக்கவும். அதன் பிறகு, வெளியே எடுத்து நன்றாக அலசவும்.

Step 3: மெஷின் வாஷ்
உங்கள் துப்பட்டாக்களை மெஷின் வாஷ் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், மெஷினில் ஒரு கப் லேசான சோப்புத்தூள் சேர்க்கவும், “மென்மையான” சலவை சுழற்சியை தேர்வு செய்யவும்.
Step 4: துணி கண்டிஷனர்
சோப்பினால் சலவை செய்த பின், துப்பட்டாக்களை எடுத்து துணி மென்மையாக்கி கொண்ட 1/2 வாளி தண்ணீரில் நனைக்கவும். உங்களுக்கு பிடித்த மணம் மிக்க அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் வாளியில் சேர்க்கவும். துப்பட்டாவை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் துப்பட்டாவை வெளியே எடுத்து சாதாரண நீரில் நன்றாக அலசவும்.
Step 5: காற்றில் உலர்த்தவும்
துப்பட்டாவில் இருந்து கூடுதல் தண்ணீரை பிழிந்து, அதை நன்றாக விரித்து, இயற்கையாக உலர்த்துவதற்காக சூரிய ஒளியின் கீழ் தொங்க விடுங்கள்.
Step 6: அவற்றை பத்திரமாக வைக்கவும்
துப்பட்டா காய்ந்ததும், அவற்றை உலர்ந்த, விசாலமான இடத்தில் மடித்து வைக்கவும். வாசனை மிகுந்த அத்தியாவசிய எண்ணெயில் ஒரு பருத்தி பந்தை நனைத்து, உங்கள் துப்பட்டாக்களை இன்னும் நறுமணமாக வைத்திருக்க, அதை அலமாரிக்குள் வைக்கலாம்.
இனி வியர்வை மணம் கொண்ட துப்பட்டாக்கள் இல்லை! இப்போது அருமையாகவும் நறுமணம் மிக்கதாகவும் மாறிவிட்டன!