உங்கள் ரெஃப்ரிஜிரேட்டரில் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி என்பதற்கு எளிய குறிப்புகள்

நீங்கள் எப்போதாவது உங்கள் ரெஃப்ரிஜிரேட்டரை திறக்கும் போது அதில் இருந்து தூர்நாற்றமான சகிக்க முடியாத நெடி வெளிவருவதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த பிரச்சினையை சுலபமாக சமாளிக்க இந்த குறிப்புகளைப் பயன்படுத்துங்கள் போதும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Simple Tips to Bid the Unpleasant Odour in Your Refrigerator Goodbye
விளம்பரம்
Vim Dishwash Gel

காலை உணவு ஒரு நாளில் மிக முக்கியமான உணவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ஃப்ரிட்ஜை திறந்த உடன் துர்நாற்றம் அடித்தால்  உடனடியாக உங்கள் பசி மறைந்து விடும். யாருமே அவர்களின் சீஸ், முட்டைகள் போல நெடி அடிப்பதையும் அல்லது அவர்களின் முட்டைகள்  கறி போல் நெடி அடிப்பதையும் விரும்ப மாட்டார்கள்.

ஃப்ரிட்ஜை திறப்பதற்கு நீங்கள் சோம்பல்பட்டு மற்றும்  2 நாட்களுக்கு முன்பாகவே சமைத்த உணவின் நெடி அடித்தால் இவற்றை போக்கி நீங்கள் உங்கள் ரெஃப்ரிஜிரேட்டரை சுத்தமாக, சுகாதாரமாக மற்றும் ஃப்ரெஷ் ஆக மணம் வீசும் விதத்தில் வைத்திருக்க உதவ இதோ நாங்கள் சில சிறந்த குறிப்புகளை வழங்குகிறோம்.

ரெஃப்ரிஜிரேட்டரின் உள்ளே சுத்தம் செய்ய ஒரு போதும் பிளீச் செய்யாதீர்கள். இதனால் உங்கள் உணவுப் பொருட்கள் நாசமாகி விடும். உணவுப் பொருட்களை சுற்றிலும் பயன்படுத்த பாதுகாப்பான தயாரிப்புகளை மட்டுமே வையுங்கள்.

1) டிஷ்வாஷிங் லிக்விட் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துதல்

உங்கள் ரெஃப்ரிஜிரேட்டரை சுத்தம் செய்வது நீங்கள் நினைப்பதை விட மிக சுலபமானது. முதலில்  உங்கள் ஃப்ரிட்ஜை காலி செய்ய ஆரம்பியுங்கள். தேவையற்ற பொருட்களை எல்லாம் எடுத்து விடுங்கள். ஷெல்ஃப்கள் மற்றும் டிராயர்களை கழற்றுங்கள். ஒரு வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் டிஷ்வாஷிங் லிக்விட் 3 -4 துளிகள் விட்டு சுத்தப்படுத்தும் கரைசல் ஒன்றை தயாரியுங்கள்.  இந்தக் கரைசலில் ஒரு சுத்தமான ஸ்பாஞ்சை முக்கி உங்கள் ஃப்ரிட்ஜின் உட்புற பகுதியை முழுவதுமாக நன்கு துடைத்து விடுங்கள். இது துர்நாற்றத்தின் மூலக் காரணத்தை போக்கி விட உதவும். நினைவிருக்கட்டும், எந்த ஒரு தயாரிப்பையும் பயன்படுத்தும் முன்பு முதலில் குறிப்புக்களைப் படியுங்கள். அதன் பின் ஃப்ரிட்ஜின் ஒரு சிறு பகுதியில் அதை பரிசோதியுங்கள். எப்போதுமே லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி செய்வது முக்கியம்.

விளம்பரம்

Vim Dishwash Gel

2) ஃப்ரிட்ஜில் நெடியை நீக்கும் சக்திமிக்க தயாரிப்பை பயன்படுத்துங்கள்.

உங்கள் ரெஃப்ரிஜிரேட்டரை நீங்கள் முழுவதுமாக நன்கு சுத்தம் செய்த பின்பும் கூட ஒரு சிறு நாற்றம் தொடர்ந்து அடிப்பதை நீங்கள் கவனித்தாலும்  கவலைப்படாதீர்கள். இந்த விடாப்பிடியான நாற்றங்களையும் விரட்ட உங்கள் ஃப்ரிட்ஜினுள் ஒரு சிறு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை வையுங்கள். இது அந்த நாற்றத்தை உறிஞ்சிவிடும். இதற்கு பதிலாக நீங்கள் ஒரு கமர்ஷியல் தயாரிப்பைக் கூடப் பயன்படுத்தலாம்.

3) காலாவதி ஆன பொருட்களை எடுத்து விடுங்கள்

உங்கள் ரெஃப்ரிஜிரேட்டரில் துர்நாற்றங்களை போக்க காலாவதியான பொருட்களை எடுத்து விடுவது முக்கியம். இது மிக சுலபம். வாரந்தோறும் ஒரு சில நிமிடங்கள் உங்கள் ஃப்ரிட்ஜினுள் முழுவதும் பாருங்கள். காலாவதி ஆகிவிட்ட ஏதேனும் உணவுப் பொருட்கள் இருந்தால் அதை எடுத்து விட்டால் போதும். மேலும் அழுகிய உணவு பொருட்கள் என்றால் அது துர்நாற்றங்களை வெளிப்படுத்துவதோடு இதர பொருட்களையும் கூட அது அசுத்தப்படுத்தி விடும்.

4) நன்கு பத்திரப்படுத்துங்கள்

ஃப்ரிட்ஜினுள் ஒரு பொருளை வைப்பதற்கு முன்பு அந்த உணவுப் பொருளை நன்றாக சுற்றி வைப்பதால் அல்லது ஏர் டைட் கன்டெய்னர்களில் வைத்து உள்ளே வைப்பதால், எந்த நெடியும் வௌியேறாமல் தடுக்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது