
துருப்பிடிக்காத ஸ்டீல் பாத்திரங்கள், ஒவ்வொரு வீட்டிலும் பெரும்பாலும் சமையலுக்கு உபயோகிக்கும் பொருட்களாகும். ஆனால் இவற்றின் இடைவிடாத பயன்பாட்டின் காரணமாக இவை கருப்பாகவும், பழையது போலும் மாறுகின்றன. இவற்றை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க சில எளிய குறிப்புகள் இங்கே.
படிநிலை 1: சூடு ஆற விடவும்
சமைத்த பிறகு, சிறிது நேரம், சூடு குறையும் வரை காத்திருக்கவும். நேரமில்லை என்றால், சிறிது குளிர்ந்த நீரை அதனுள் ஊற்றி வைத்தோ அல்லது மின்விசிறியை இயக்கியோ சில நிமிடங்களில் குளிர வைத்து விடலாம்.
படிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும்
ஒரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைச் சேர்த்து, வாளியின் உள்ளே பாத்திரங்களை ஒவ்வொன்றாக வைக்கவும்.

படிநிலை 3: ஊற விடவும்
பாத்திரங்களை 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
படிநிலை 4: துலக்கவும்
பாத்திரங்களை வெளியே எடுத்து அவற்றை ஸ்க்ரப்பிங் பேட் மூலம் துலக்கவும்.
படிநிலை 5: கழுவவும்
குழாய் நீரின் கீழ் அவற்றை நன்றாக கழுவவும்.
படிநிலை 6: வினிகரைப் பயன்படுத்துங்கள்
சிறிது வெள்ளை வினிகரை எடுத்து மென்மையான பருத்தி துணியில் ஊற்றவும். பாத்திரங்களில், அந்தத் துணியை வைத்து நன்றாக தேய்க்கவும்.
படிநிலை 7: 5 நிமிடங்கள் காத்திருக்கவும்
இது 5 நிமிடங்கள் இருக்கட்டும்.
படிநிலை 8: கழுவவும்
குழாய் நீரின் கீழ் அவற்றை மீண்டும் கழுவவும்.
படிநிலை 9: துடைக்கவும்
உலர்ந்த பருத்தி துணியால் அவற்றை துடைக்கவும்.
உங்கள் பாத்திரம் இப்போது புதியது போல்
நன்றாக இருக்கும்!