உங்கள் சமையலறையை பூஞ்சைகள் ஆக்கிரமித்துள்ளதா? அவற்றை இப்போதே நீக்கிடுங்கள்!

அடுத்த முறை நீங்கள் சின்க்கை சுற்றியுள்ள பகுதிகளில் பூஞ்சைகளைப் பார்த்தால் இந்த குறிப்புகளை பயன்படுத்தி அவற்றை சுத்தம் செய்யுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Mould Invading Your Kitchen? Evict It Now!
விளம்பரம்
Vim Dishwash Gel

வீட்டிலுள்ள எந்த ஒரு ஈரமான பகுதிகளிலும் பூஞ்சைகள் உருவாகும். சமையலறையில் அதிக ஈரம் இருந்தால் அது பூஞ்சைகள் இனபெருக்கம் செய்ய வசதியாக இருக்கும்.

எனவே சமையலறையில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பராமரிக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக சுவர்களின் ஒரங்கள் மற்றும் சின்க்

இது நீங்கள் நினைப்பது போல அதிக நேரம் எடுக்கும் வேலை அல்ல. சமையலறையில் பூஞ்சைகள் இல்லாமல் வைக்கும் சில எளிய குறிப்புகளைப் பார்க்கலாம்.

சுத்தம் செய்த இடத்திலுள்ள ப்ளீச்சை முழுமையாக சுத்தம் செய்து, உங்கள் உணவு மாசுபடுவதை தவிர்க்கவும்.

1) பூஞ்சைகளை எதிர்க்க வினிகர் பயன்படுத்துங்கள்.

விளம்பரம்

Vim Dishwash Gel

ஒரு கிண்ணத்தில் 4 கப் வினிகருடன் 1/4 கப் உப்பு சேர்த்து அதோடு 2 டீஸ்பூன்  லிக்விட் டிஷ் சோப்பை கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த கரைசலை ஸ்ப்ரேயரில் விட்டு பூஞ்சைகள் மற்றும் பாசிகள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்யவும். அந்த இடம் முழுவதும் ஸ்ப்ரே செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்கவும். பிறகு ஒரு துடைகும் துணியால் அதை நன்கு தேய்த்து துடைத்துவிட்டு, பிறகு உலர்ந்த துணியால் துடைக்கவும். அப்படியும் அங்கு கொஞ்சம் பூஞ்சைகள் இருக்கக்கூடும். கவலை வேண்டாம். மீண்டும் அந்த கரைசலை அந்த இடத்தில் ஸ்ப்ரே செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டு வைத்து விட்டு, பிறகு துடைத்து எடுத்துவிடவும்.

2) பூஞ்சைகளை நீக்க ப்ளீச் பயன்படுத்தவும்.

2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 கப் ப்ளீச் சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்ப்ரே செய்யவும். பிறகு துணியால் துடைத்து சுத்தம் செய்யவும். உடனடி பலன் தெரியாவிட்டால், மீண்டும் இந்த கரைசலை ஸ்ப்ரே செய்து 15 நிமிடங்கள் விட்டு வைத்து பிறகு தேய்க்கவும். பிறகு துணியால் துடைத்துவிட்டால் பெரும்பாலான பூஞ்சைகள் போய்விட்டிருக்கும்.

வீட்டிலுள்ள பூஞ்சைகளை விரைவில் நீக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது