
தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள், காரங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும்தான்! பெரும்பாலும் இந்த சுவைமிகு பண்டங்களை செய்த பின், உங்கள் சமையல் அறை களேபரமாகி இருக்கும்.
தீபாவளி ஸ்னாக்குகள் செய்த பின்பு, உங்கள் சமையல் அறையை சுத்தம் செய்ய இந்த குறிப்புகளை நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.
1) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்
நீங்கள் ஸ்னாக்ஸ் செய்யப் பயன்படுத்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான தண்ணீர் 1 கப், 2 தேக்கரண்டி டிஸ் வாஷிங் லிக்விட் மற்றும் 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். ஸ்கோரிங் பேடு மூலம் பாத்திரங்களை நன்கு தேய்த்து தண்ணீரால் அலசி விடுங்கள். ஏதேனும் கடினமான கறைகள் இருந்தால், பாத்திரங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் முக்கி 30 நிமிடங்கள் காத்திருங்கள். அதன் பின் மீண்டும் இதேபோல சுத்தம் செய்யுங்கள்.
2) சமையல் மேடை
ஒரு துணி மூலம் சமையல் அறை கவுண்டர் டாப்பில் பட்டிருக்கும் உணவு துணுக்குகளை அகற்றி விடுங்கள். இதற்காக ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் 1 த ேக்கரண்டி டிஸ்வாஷிங் லிக்விட் சேர்த்து கலக்குங்கள். இந்தக் கரைசலில் ஒரு சுத்தமான துணியை முக்கி எடுத்து மிகுதியான தண்ணீரை பிழிந்து விட்டு அந்த பரப்பு முழுவதும் நன்கு தேய்த்து துடையுங்கள். தேவையெனில் மீண்டும் துடையுங்கள். பின்பு அந்த சமையல் மேடையை சுத்தமான உலர்ந்த துணியால் ஒற்றி எடுத்து உலர விடுங்கள்.

3) காஸ் ஸ்டவ்
உங்கள் காஸ் ஸ்டவ் மீது படிந்துள்ள எண்ணெய் கறைகளை அகற்ற 1 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி லெமன் ஜூஸ் மற்றும் 3-4 துளிகள் டிஸ் வாஷிங் லிக்விட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். லெமன் ஜூஸ் பிசுபிசுப்பு மற்றும் ஆயில் கறைகளை இளக்கும். டிஸ்வாஷிங் லிக்விட் உடனே அதை போக்கி விடும். இதை நேரடியாக கறைபட்ட இடங்களில் ஊற்றி 10 நிமிடங்கள் காத்திருங்கள் (இந்தக் கரைசல் கேஸ் பர்னருக்குள் நுழைந்து சேதப்படுத்தி விடாமல் கவனமாக இருங்கள்). பின்பு ஓரு டிஷ் ஸ்க்ரப்பரால் தேய்த்து சுத் தமான துணியால் துடைத்து விடுங்கள்.
4) டைல்கள்
உங்கள் சமையல் அறை டைல்களில் ஏதேனும் பிசுபிசுப்பான கறைகள் இருந்தால் அதை அகற்ற இதோ ஒரு சிறந்த வழி. ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் 1தேக்கரண்டி பேக்கிங் சோடா போட்டு வெதுவெதுப்பான தண்ணீரையும் ஊற்றி கலக்குங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கறைபட்ட இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். 10 நிமிடங்கள் காத்திருந்த பிின்பு, ஸ்க்ராச் உண்டாக்காத ஸ்க்ரப்பிங் பேடு மீது டிஸ்வாஷிங் லிக்விட் 2-3 துளிகள் ஊற்றி தேய்த்து சுத்தம் செய்ய ஆரம்பியுங்கள். வட்டமாக தேயுங்கள்; மேலிருந்து கீழே தேயுங்கள். கீழே சொட்டும் தண்ணீரை உறிஞ்ச பிளாட்ஃபார்மில் டவல்களை விரியுங்கள். சுத்தமான துணியால் நன்கு துடையுங்கள்.
5) ஸிங்க்
கறைகள் படிந்த கிச்சன் ஸிங்க்கை சுத்தம் செய்ய அதன் மீது சீராக 1 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா தூவுங்கள். 5 நிமிடங்கள் காத்திருங்கள். பின்பு 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 மேஜைக்கரண்டி டிஸ்வாஷிங் லிக்விட் ஊற்றி ஒரு சுத்தப்படுத்தும் கரைசலை தயார் செய்யுங்கள். ஸ்கரப்பிங் பேடு மூலம் அந்தப் பகுதி முழுவதும் நன்கு தேய்த்து பின்பு சாதாரண தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்.
6) சிம்னி
உங்கள் சிம்னியை சுத்தம் செய்ய 1 கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி புளி விழுதை (பல்ப்) போட்டு, ஒரு மணி நேரம் காத்திருங்கள். கரைசலை நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரு சுத்தமான ஸ்பாஞ்ச்-ஐ இந்தக் கரைசலில் முக்கி நன்கு துடையுங்கள். நீங்கள் இவ்வாறு சுத்தம் செய்த பின் சாதாரண தண்ணீரில் ஒரு சுத்தமான ஸ்பாஞ்சை முக்கி அதை வைத்து புளிக் கரைசலின் அடையாளங்கள் அனைத்தையும் துடைத்தெடுத்து விடுங்கள்.
சமையல் அறையில் ஆ ங்காங்கே படிந்துள்ள கறைகளை சுத்தம் செய்வதை பற்றி கவலைப்படாதீர்கள். இந்த தீபாவளிக்கு சுவையான ஸ்னாக்ஸ்களை செய்யுங்கள், இனிய நினைவுகளை பற்றி சிந்தியுங்கள், கலோரிகளை அல்ல.