
பெரும்பாலான இந்திய இல்லங்களில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் மிகப் பெருமையானவையாக இருக்கின்றன. இருந்தாலும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்திய பிறகு ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டல் அவற்றில் அழுக்கு சேர்ந்து பளபளப்பு போய்விடுகிறது. எனவே உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை நேரம் ஒதுக்கி பராமரிப்பது மிகவும் அவசியம்.
உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதற்கான சில குறிப்புகளை வழங்குகிறோம்.
வீட்டில் தயாரிக்கப்படும் சுத்தம் செய்யும் பொருள்கள் உராய்வை ஏற்படுத்தும். அவற்றை பாத்திரத்தில் பயன்படுத்தும் முன்பு ஒரு சிறுபகுதியில் பயன்படுத்தி பரிசோதிக்கவும்.
1) லேசான அடையாளங்கள் மற்றும் தினசரி பராமரிப்பிற்காக
சாதாரணமாக கழுவுவதற்கு
வழக்கமாக தேய்த்து கழுவிய பிறகு, ஒரு சுத்தமான ஸ்பாஞ்ஜை வெந்நீரில் நனைத்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை துடைக்கவும். இது அவற்றி ஷைனை பராமரிக்க உதவும்.

லேசான கறைகளுக்கு
லேசான கறைகளை சுத்தம் செய்ய, ஒரு கப் வெந்நீரில் 2-3 துளிகள் டிஷ்வாஷிங் லிக்விட்டை விட்டு, அதில் ஸ்பாஞ்சை நனைத்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தம் செய்யவும்.
இந்த முறையை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் முதல் சமையல் கட்லெரிகள் மற்றும் சமையல் மேடை வரை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
2) விடாப்பிடியான அடையாளங்கள் மற்றும் சிந்திய அடையாளங்களுக்கு
விரல் ரேகை அடையாளங்கள் மற்றும் வாட்டர் மார்க்குகளுக்கு
விரல் ரேகை அடையாளங்கள் மற்றும் வாட்டர் மார்க்கு பற்றி கவலையாக இருந்தால், மிதமான சோப்பினால் கழுவி பிறகு மைக்ரோ ஃபைபர் துணியினால் துடைக்கவும். உணவுக் கறைகள் உலர்ந்து அதில் ஒட்டியிருந்தால், கறையின் மீது கொஞ்சம் வினிகரை விட்டு மைக்ரோ ஃபைபர் துணியினால் துடைக்கவும். பிறகு பாத்திரத்தை அலம்பி உலர்ந்த துணியால் அல்லது பேப்பர் டவலால் துடைக்கவும்.
விடாப்பிடியான கறைகளுக்கு
பேக்கிங் சோடா பயன்படுத்தவும். ஒரு மேஜைக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீரை கலந்து கெட்டி பசையாக செய்து கொள்ளவும். இதை உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாகப் போடவும். அதை அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு ஈரத்துணியால் துடைக்கவும். அதன் பின்னர் கழுவி உலர்த்திவிடவும்.
பாத்திரங்களை அடிக்கடி சுத்தம்செய்து பராமரிப்பதால், உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் சிறப்பாக தோற்றமளிக்கும்.