தீபாவளி பண்டிகைக்காக டின்னர் கொடுக்கிறீர்களா? உங்களின் பீங்கான் பாத்திரங்கள் பளபளக்க இதோ சிறந்த வழி

இந்த தீபாவளி பண்டிகையில் உங்கள் பீங்கான் பாத்திரங்களை பளிச்சிடச் செய்யுங்கள். இதோ தீப திருநாளில் உங்களுக்காக வியப்பூட்டும் சில சுத்தப்படுத்தும் குறிப்புக்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Hosting a Deepavali Festival Dinner? Try This to Get Your Crockery Shining
விளம்பரம்
Vim Dishwash Gel

தீப ஒளி ஜொலிஜொலிக்கும் பண்டிகை குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடி புன்னகைக்க, ஆனந்தமாக கொண்டாட உதவுகிறது. இனிப்புக்கள், காரங்கள், அழகான பாரம்பரிய ஆடைகள், தீபங்கள் மற்றும் லைட்டிங்குகள்  போன்ற மனம் கவரும் அம்சங்களோடு, இந்த தீபாவளி கொண்டாட்டங்களில் உங்களின் அன்புக்குரிய அனைவரும் இணைந்திட உதவுகிறது. எந்த ஒரு கெட்-டு- கெதர் ஆனாலும், ஒரு அருமையான டின்னர் பார்ட்டி இல்லையேல் அது பூர்த்தியாவதில்லை. எனவே நீங்கள் இந்த தீபாவளிக்கு ஒரு அருமையான டின்னர் ஏற்பாடு செய்ய திட்டமிடுகிறீர்கள் என்றால் மற்றும் உங்களின் பீங்கான் பாத்திரங்கள் பளிச்சிட சுலபமான குறிப்புக்களை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இதோ இதுதான் சரியான இடம்.

உங்கள் பீங்கான் பாத்திரங்கள் கண்கவரும் விதத்தில் பளிச்சென்று தோன்ற இதோ சில பயன்படும் குறிப்புக்கள்.

1) ரெகுலர் வாஷ்-க்கு

ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி 2 கப்கள் ஒயிட் வினிகர் சேருங்கள். உங்கள் பீங்கான் பாத்திரங்களை இதில் போட்டு 10 நிமிடங்கள் காத்திருங்கள். இப்போது ஒரு கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி டிஸ்வாஷ் லிக்விட் ஊற்றி ஒரு சுத்தப்படுத்தும் கரைசல் தயாரியுங்கள். இந்த கரைசலில் ஒரு சுத்தமான ஸ்பாஞ்சை முக்கி ஒவ்வொரு பாத்திரத்தையும் சுத்தமாக துடையுங்கள். பின்பு சாதாரண தண்ணீரில் அலசி கழுவி விடுங்கள். 

2) பழைய கறைகளுக்கு

விளம்பரம்

Vim Dishwash Gel

ஓரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப்  தண்ணீர் ஊற்றி 2 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா போட்டு நன்கு கலக்குங்கள். ஒரு மென்மையான   குச்சங்கள் கொண்ட பிரஷ் கொண்டு இந்த கலவையை கறைபட்ட பகுதி அல்லது உங்கள் பீ்ங்கான் பாத்திரங்கள் மீது முழுவதும் தேயுங்கள். இந்தக் கறைகள் முழுவதும் நீங்கும் வரை 25 நிமிடங்கள் காத்திருந்து சாதாரண தண்ணீரால் கழுவுங்கள்.

3) நன்கு பளிச்சிட

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு கப் வினிகர் ஊற்றி ஒரு கப் உப்பும் போட்டு நன்கு கலக்குங்கள். கறை பட்ட பீங்கான் பாத்திரங்களை கவனமாக இதில் மூழ்க வையுங்கள். 30 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் வெளியே எடுத்து குளிர்ச்சியான குழாயில் இருந்து விழும் தண்ணீரில் பிடித்தபடி கழுவுங்கள். அதன் பின் சுத்தமான மைக்ரோஃபைபர் க்ளாத் மூலம் ஈரத்தை ஒற்றி உலர விடுங்கள்.

4) சில்வர் கைப்பிடிகளுக்கு

ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு புளித் துண்டுகளை போடுங்கள். கையால் நன்கு கலந்து பிசைந்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் பீங்கானின் சில்வர் கைப்பிடிகளில் ஒரு சுத்தமான துணியால் தேயுங்கள். பின்பு சுத்தமான மைக்ரோஃபைபர் துணியால் ஈரத்தை ஒற்றி உலர விடுங்கள்.

இப்போது உங்கள் பீங்கான் பாத்திர செட் கறைகளின்றி பளிச்சென்று  தோன்றும்.உங்கள் சமையல் அறையில் மதிப்புமிக்க பொருளான பீங்கான் பாத்திரங்கள் பண்டிகை காலத்தில் கண்கவரும் விதத்தில் பளிச்சிட இந்த குறிப்புக்களை பயன்படுத்துங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது