உங்கள் கிச்சன் கிரைண்டரை சுத்தம் செய்வதை நினைக்கவே பயமாக இருக்கிறதா? இதோ சில எளிமையான வழிமுறைகளை செய்து பாருங்கள்

கிரைண்டரை சுத்தம் செய்வது என்பது நிச்சயம் ஒரு கடினமான வேலையாகத்தான் உணர முடியும். ஏனெனில், அதில் முன்னதாக அரைத்த பொருளின் ஒரு துளி மணம் கூட வீசாத அளவுக்கு முழுமையாக சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

afraid-of-cleaning-your-kitchen-grinders-here-are-some-very-simple-ways-to-do-it
விளம்பரம்
Vim Dishwash Gel

கிரைண்டரை நீங்கள் நன்றாக சுத்தப்படுத்தாவிட்டால், முன்பு அரைத்த பொருளின் மணத்துடன், அடுத்து அரைத்த பொருளின் மணமும் கலந்து வீசக்கூடும். சில குறிப்புகள் மற்றும் யுக்தியை பயன்படுத்துவதன் மூலம், எந்த கூடுதல் சிரமும் இன்றி கிரைண்டர்களை சுத்தப்படுத்தி விடலாம்.

எக்காரணத்தை கொண்டும் கிரைண்டரை நீங்களே ரிப்பேர் செய்ய முயற்சிக்காதீர்கள். ஏதாவது கோளாறு ஏற்பட்டால், தகுதிவாய்ந்த டெக்னீஷியரையோ அல்லது கிரைண்டர் கம்பெனியின் சர்வீஸ் டெக்னீஷியரையோ அழையுங்கள்.

வெட் கிரைண்டர்கள்

  • ஹோல்டருடன் இருக்கும் அரவைக் கல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, அவை இரண்டையும் குழாயில் இருந்து விழும் தண்ணீரில் முழுமையாக கழுவவும். ஒரு பழைய பிரஷ்ஷை கொண்டு, கிரைண்டரின் ஒவ்வொரு மூலை, முடுக்கில் ஒட்டியுள்ள கறைகளை நீக்க வேண்டும். 

  • கிரைண்டர் டிரம்மை கழுவி, மற்ற பகுதிகளை துடைத்து எடுக்கவும். அவைகளை தனித்தனியாக பிரித்து, பின் தண்ணீர் வற்ற உலர வைக்கவும்.

டிரை கிரைண்டர்கள்

விளம்பரம்

Vim Dishwash Gel
  • கொஞ்சம் தண்ணீருடன், 2 டேபிள் ஸ்பூன் வினிகரை கலந்து கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை மிக்சர் ஜார்களில் கொட்டி, மிக்ஸியில் போட்டு சுமார் 30 விநாடிகள் சுழற்ற வேண்டும். மிக்ஸியை நிறுத்தி, அனைத்து கறைகளும் நீங்கிவிட்டதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

  • எலுமிச்சையின் தோலை பயன்படுத்தி, கிரைண்டரின் மூடி மற்றும் பிற பகுதிகளை சுத்தம் செய்யவும். சுமார் 15 நிமிடங்களுக்கு அதை அப்படியே வைத்து விட்டு, பின்னர் தண்ணீரை ஊற்றி கழுவவும்.

  • வேகவைக்காத அரசியை கிரைண்டரில் நிரப்பி, ஒரு சுற்று சுழற்றவும். அது, பிளேடுகளின் அடியில் சிக்கியிருக்கும் எஞ்சிய கறைகளை வெளியில் இழுத்து கொண்டு வந்து விடும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது