உங்கள் வீட்டை இந்த பண்டிகை நாளில் வண்ண விளக்குகள் கொண்டு ஒளிமயமாக்கிட, எளிதாக வாரம் முழுவதும் சுத்தம் செய்தல்.

உங்களுடைய 2019 தீபாவளி ஒளிமயமாக திகழ ஒரு சுலபமான வாராந்திர திட்ட அட்டவணை போட்டு சிரமமின்றி வீட்டை சுத்தம் செய்திட வழிமுறையை உருவாக்கியுள்ளோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

An Easy Week-Long Deepavali Cleaning Calendar to Make Your Home Sparkle This Festival of Lights!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

இதோ கிட்டத்தட்ட தீபாவளி நெருங்கிவிட்டது! எங்கும் எதிலும் வண்ணங்கள் தோன்றச் செய்திடும் நேரம் இது. வண்ணக் கோலம் போடுதல், வண்ண விளக்குகளை ஏற்றுதல், லட்சுமி பூசையின்போது வழிபாடு செய்தல், அழகான ஆடைகளை அணிந்து மகிழ்தல், சுவைமிக்க இனிப்பு வகைகளையும் தின்பண்டங்களையும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பரிமாறிக்கொண்டு உண்டு மகிழ்தல் எல்லாம் இந்த நாளில்தான். விழாக்கள் உறவினர்களை ஒன்றிணைக்கிறது, ஒன்றுகூடி கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பு அளிக்கிறது. 

இந்த மங்களம் பொங்கும் நன்னாளில் உங்கள் வீட்டை சுத்தமாகவும் அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள, நாங்கள் முறையான திட்டத்தை வகுத்துள்ளோம். இது உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சுத்தம் செய்திட உங்களுக்கு உதவியாக இருக்கும். 

பின்னணியில் உங்களுக்கு விருப்பமான இசை ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் வேலை செய்தால் சிரமம் தெரியாது.

1) நாள் 1: பழையன கழித்தல்

தேவையற்ற பொருள்களை ஒழித்துக்கட்ட ஆரம்பியுங்கள். இதில் உங்களுடைய பழைய மற்றும் உடைந்து பயன்படாமல் இருக்கும் மரச்சாமான்கள், காலாவதி ஆகிவிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் மற்றும் பர்ஃப்யூம்கள், ஆடைகள், அட்டைப் பெட்டிகள், டெலிவரி பாக்ஸ், பயன்படுத்திய உணவு டப்பாக்கள், காகிதங்கள், பைகள் மற்றும் ஸ்டேஷனரிகளும் அடங்கும். அதாவது உங்களுடைய அலமாரிகள், பரண்கள், இழுப்பறைகள், இழுப்பறை பெட்டிகள், அடுக்குகள் மற்றும் ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்தல். 

விளம்பரம்

Surf Excel Matic Liquid

2) நாள் 2: தூசு தட்டுதல்

இரண்டாவது நாள் அன்று சோஃபா, மற்றும் நாற்காலிகள், படுக்கைகள் மற்றும் திரைச்சீலைகள், மற்றும் இதர ஃபர்னிச்சர்களை தூசு நீக்கி வேக்குமிங் செய்யவும். பின்னர் ஃபர்னிச்சரை பழைய துணி கொண்டு அல்லது செய்தித்தாள்கள் கொண்டு மூடிடவும். அப்போதுதான் அறையை சுத்தம் செய்யும் போது அவற்றின் மீது மீண்டும் தூசு படியாமல் இருக்கும். பிறகு சுவர்கள், கூரைகள் கதவுகள். ஜன்னல்கள் மற்றும் பரண்களை தூசு தட்டி ஒட்டடைகளை நீக்கி சுத்தம் செய்யவும். 

3) நாள் 3 ஈரம் கொண்டு சுத்தம் செய்தல்

சுவர்கள் மற்றும் கூரைகள், ஃபேன், லைட்ஸ், ஃபர்னிச்சர், கதவுகள். ஜன்னல்கள் மற்றும் தரையை ஈரத்துணி கொண்டு சுத்தம் செய்யவும் பின்னர் துடைக்கவும். எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து முடிந்ததும் ஒரு உலர்ந்த சுத்தமான துணிகொண்டு துடைத்துவிடவும் அல்லது நன்றாக காற்றில் உலரவிடவும். 

4) நாள் 4: சலவை

நான்காம் நாள் அன்று போர்வைகள், மிதியடிகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் முதலியவற்றை துவைக்கவும்.  எல்லாவற்றையும் ஒன்றாக துவைப்பதை தவிர்க்கவும். ஒத்த வகைகளை தனித்தனியாக பிரித்துக்கொண்டு தனியே துவைக்கவும். உங்களுடைய வாஷிங் மெஷினில் துவைப்பதற்கான எண்ணிக்கையும் நேரமும் கூடும். அதற்கேற்றார்போல் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும். 

5) நாள் 5: சமையலறையை சுத்தம் செய்தல்

அடுப்பு மற்றும் புகைப்போக்கியிலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பிக்கவும். பின்னர் அடுக்குகளையும் அலமாரிகளையும் சுத்தம் செய்யவும். பின்னர் பாத்ரங்கள், பீங்கான் பாண்டங்கள், கேஸ் ஸ்டவ், சமையலறை சாதனங்கள் மற்றும் சிங்க் சுத்தம் செய்யவும். பிறகு உங்களுடைய குளிர்சாதனப் பெட்டியை உள்ளும் புறமும் நன்றாக சுத்தம் செய்யவும். அனைத்தும் சுத்தம் செய்து முடிந்ததும், மற்றும் நன்றாக உலர்ந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பின்னர் பாத்திரங்களையும், பீங்கான் பாண்டங்களையும் அந்தந்த அடுக்குகளில் திரும்பவும் பழைய இடத்தில் வைக்கவும். 

6) நாள் 6 : குளியலறையை சுத்தம் செய்தல்

உங்கள் அடுக்குகளை காலியாக்கவும் மற்றும் பின்னர் குழாய்கள், கண்ணாடி, டைல்கள், ஷவர்ஹெட், கழிப்பறை கோப்பை, கதவு, எக்ஸாஸ்ட் ஃபேன், பொருத்தப்பட்ட சாதனங்கள், இதர குளியலறை துணைக்கலன்கள் என வரிசையாக சுத்தம் செய்யவும். வேண்டாத பொருள்களை ஒழித்துக்கட்டவும். சுத்தம் செய்து முடித்ததும்) மறுபடி எல்லா பொருள்களையும் அங்கங்கே வைக்கும் முன்பாக காற்றில் நன்றாக உலர அனுமதிக்கவும். 

7) நாள் 7: உங்கள் அலமாரிகளை மறுஒழுங்கமைத்தல்

உங்களுடைய ஒதுங்கிடம் மற்றும் அலமாரிகளை ஏற்கனவே சுத்தம் செய்துவிட்டீர்கள். இப்பொது பொருள்களை வகைவாரியாக பிரிக்கவும் - உடைகள், மேலங்கிகள், சட்டைகள், எத்னிக் வேர், வெளியே அணிந்து செல்லும் உடைகள், துணைப்பொருள்கள் முதலியவை. இனி உபயோகிக்கப் போவதில்லை என்னும் பொருள்களை (தூக்கிப் போடுங்கள் அல்லது) தானமாக வழங்கிடுங்கள். 

அவ்வளவுதான் வேலை முடிந்துவிட்டது. (உங்களுக்கு பிடித்தமான) விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சூடான தேநீர் கோப்பையை கையில் ஏந்தி துளித்துளியாய் ரசித்து குடிக்க ஆரம்பியுங்கள். இளைப்பாறுங்கள், விழாக்கோலம் ஆரம்பமாகட்டும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது