உங்கள் வாஷிங் மெஷினை நல்ல நிலையில் வைத்திருக்க இந்த செயல்பாடுகளை கைவிடவும்.

இதோ நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேன்டிய சுலபமான ஆறு சலவைக் குறிப்புகள். இவை உங்கள் மெஷினின் ஆயுளை அதிகரிக்கும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Give Up These Practices to Keep Your Washing Machine in Good Health
விளம்பரம்
Surf Excel Matic Liquid

வாஷிங் மெஷின் என்பது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இது உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குகிறது. துணிகளை துவைக்கும் கடினமான வேலையை மிகவும் சுலபமாக்குகிறது. இருந்தாலும் இந்த சாதனத்தை பயன்படுத்தும்போது நீங்கள் சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம்.  துவைக்கும் மெஷினை நீங்கள் கடினமாக பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அது ஒரு இயந்திரம். 

இதோ நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள். இவற்றை கருத்தில் கொண்டு பயன்படுத்துவதால் உங்கள் மெஷின் வரப்போகும் பல ஆண்டுகளுக்கு மிகச் சிறப்பாக செயல்படும். 

1) உங்கள் மெஷினை அசையாமல் வைத்திருப்பதை உதாசீனப்படுத்தாதீர்கள்.

உங்கள் வாஷிங் மெஷினின் நான்கு ஓரங்களை அசையாமல் உறுதியாக பொருத்தி  வைத்திருப்பதன் மூலம் துணி துவைக்கும்போது அதில் அதிர்வு ஏற்படாது. மெஷினின் ஸ்திரத்தன்மை போய்விட்டால், அதன் சுமையால் வாஷரின் ஸ்த்கிரத்தன்மையும் போய்விடும். அது நிலையில்லாமல் ஆடும். எனவே அதை சம நிலையில் உறுதியாக பொருத்தி வைக்கவும்.

2) உங்கள் மெஷினிற்குள் பொருள்களை விட்டுவைக்காதீர்கள்.

துணிகளை மெஷினில் போடுவதற்கு முன்பு அவற்றில் ஏதாவது பொருள்கள் இருக்கிறதா என்று பார்க்கவும். திடப் பொருளோ அல்லது உலோகப் பொருளோ உங்கள் மெஷினில் போடப்பட்டால், சரி செய்ய முடியாத சேதம் ஏற்படக்கூடும்.  ஒவ்வொரு முறையும் துணிகளை மெஷினில் போடுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறையாக துணிகளை பரிசோத்தித்து அவற்றில் வேறு பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். 

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) உங்கள் மெஷினின் திறனை தவறாக மதிப்பிடாதீர்கள்.

உங்கள் மெஷினின் திறனுக்கும் அதிகமாக துணிகளைப் போட்டு ஓவர் லோடிங் செய்வதால் அதன் ஆயுள் குறைந்துவிடும். ஒரு முறை துவைக்கும்போது அளவுக்கு அதிகமாக துணிகளையும் டிடெர்ஜென்ட்டையும் போடாதீர்கள். அதிகமாக துணிகள் இருந்தால் இரண்டு முறை துவைக்கவும். இதன் மூலம் வாஷிங் மெஷினை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். 

4) இதன் செட்டிங்குகளை மாற்றாதீர்கள்.

தயாரிப்பின் கையேட்டில் கொடுத்துள்ள வழிமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள். வெவ்வேறு விதமான துணிகளுக்காக தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விதமான செட்டிங்குகளை கொடுத்திருப்பார்கள். வெவ்வேறு விதமான துணிகளுக்காக நீங்கள் இந்த செட்டிங்குகளை நீங்கள் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும்.

5) ஈரமான துணிகளை மெஷினிற்குள்ளேயே விட்டு வைக்காதீர்கள். 

துணிகளை துவைத்த பிறகு ஈரமான துணிகளை மெஷினிற்குள்ளேயே வெகு நேரம் விட்டு வைக்காதீர்கள். இதனால் பூஞ்சாக்காளன்களை உருவாக்கக்கூடும், இவை உங்கள் வாஷிங் மெஷினை சேதமாக்கும். மேலும் உங்கள் துணிகளில் துர்நாற்றத்தையும் கூட ஏற்படுத்தும். 

6) சரியான டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்யவும்.

வெவ்வேறு  வாஷிங் மெஷிங்களுக்கு வெவ்வேறு டிடெர்ஜென்ட் தேவைப்படுகிறது. எதை தேர்வு செய்வது என்பது பற்றிய  விவரங்களுக்கு மேனுவலைப் பார்க்கவும். டிடெர்ஜென்ட்டுகள் பவுடர் மற்றும் லிக்விட் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே வாஷிங் மெஷிகளுக்காகவே விசேஷமாக தயாரிகப்பட்ட ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் போன்ற டிடெர்ஜென்ட்டுகளை  பயன்படுதுவது மிகவும் சிறந்தது. இது லிக்விடாக இருப்பதால் தண்ணீரில் சுலபமாகக் கரைகிறது. இது கசடுகளை விட்டுச் செல்வதில்லை. 

உங்கள் வாஷிங் மெஷினின் ஆயுளை அதிரிக்கவும், அது சிறப்பாக செயல்படுவதற்கும் அதை சிறப்பக பரமாரிக்க வேண்டும். அப்போதுதான் அது வரப்போகும் பல ஆண்டுகளுக்கு உங்களுக்காக செயல்படுபடும் .

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது