டாப் லோடிங்கா அல்லது ஃப்ரன்ட் லோடிங்கா? இப்போதே குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்!

நீங்கள் வாங்குவதற்கு விதவிதமாக பல வாஷிங் மெஷின்கள் கிடைக்கின்றன. நீங்கள் டாப் லோடிங் வாங்கலாமா அல்லது ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின் வாங்கலாமா என தேர்ந்தெடுக்க நாங்கள் இந்த கட்டுரை மூலம் உதவுகிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Top Loading Or Front Loading? End the Confusion Now!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

டாப் லோடிங் vs. ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கு இடையிலான குழப்பத்தில் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது கடினமான வேலைதான். இரண்டு மெஷின்களுமே நன்கு செயல்படும். ஆனால், மொத்தத்தில் இதற்கான சாய்ஸ் உங்களின் தேவையை பொறுத்தது.

வாஷிங் மெஷின் வாங்குவதற்கான இந்த வழிகாட்டி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி விவரிக்கிறது.

ஃப்ரன்ட்- லோடிங் வாஷிங் மெஷின்களின் நன்மைகள்

1) சில சுழற்சிகள் போதும்

ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின் அதிக அளவு லோடிங் திறன் கொண்டது. நீங்கள் ஒரே ஒரு முறையிலேயே அதிக துணிகளை சுத்தம் செய்ய உதவுகிறது. எனவே நீங்கள்  சலவை செய்ய அரை நாள் கூட செலவழிக்க தேவையில்லை; ஒரு சில முறை சலவை செய்தால் போதும், எல்லா துணிகளும் சலவையாகி வேலை முழுவதும் முடிந்து விடும்.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

2) தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பு

சராசரியான ஒரு டாப்-லோடிங் மெஷின் ஒரு வாஷ்-க்கு 90-100 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஃப்ரன்ட்-லோடிங் மெஷின்களுக்கான தண்ணீர் தேவை  அதே அளவில் பாதி அல்லது அதைவிட குறைவுதான். அதுமட்டுமல்ல, டாப் லோடிங் மெஷின்களை ஒப்பிடும்போது, மின்சாரம் மற்றும் டிடர்ஜென்டுக்கான தேவை மூன்றில் ஒரு பங்குதான். சிறந்த பலன்களை பெற ஒரு ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக்  லிக்விடு போன்ற டிடர்ஜெண்டை பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது வாஷிங் மெஷின்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. லிக்விட் என்பதால் தண்ணீரில் முழுமையாக கரைந்து விடும், எந்த கறையையும் ஏற்படுத்தாது.

3) ஸ்பின் சைக்கிளின் சத்தம் குறைவு

பல ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின்களில் வைப்ரேஷன் கண்ட்ரோல் என்னும் வசதி அம்சம் உள்ளது. இந்த வசதி உட்புற டிரம்மை நிலையாக வைக்கிறது. எனவே, மெஷின் குலுங்காது மற்றும் உங்கள் தரைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

டாப் லோடிங் வாஷிங் மெஷின்களின் நன்மைகள்

4) கட்டுப்படியாகும் செலவு

டாப் லோடிங் வாஷிங் மெஷின்களின் மிக அருமையான நன்மை  அவற்றின் விலைதான். ஃப்ரன்ட் லோடிங் மெஷின்களை விட இவை மிகவும் கட்டுப்படியான விலைகளில் கிடைக்கின்றன.

5) மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டவை

உங்களுக்கு முதுகு வலி போன்ற பிரச்சினை இருந்தால் சலவை துணிகளை போடுவதற்காக குனிவதால் வலி ஏற்படலாம். டாப் லோடிங் மெஷின்கள் நீங்கள் ஒரு வசதியான உயரத்தில் குனிந்தபடி துணிகளை உள்ளே போடுவதற்கும் எடுப்பதற்கும் சுலபமாக உதவுகின்றன. பொதுவாக இவை உங்கள் இடுப்பு அளவு உயரத்தில் இருக்கும்.

இப்போது புரிந்து விட்டதல்லவா! ஒரு டாப் லோடிங் அல்லது ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷினுக்கு இடையே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கிடைத்து விட்டன. இனி ஆனந்தமாக துணிகளை சலவை செய்யுங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது