உங்கள் அலமாரிகளை எப்போதும் புதிய வாசனையுடன் எவ்வாறு வைத்திருப்பது

உங்கள் அலமாரியை புதிய வாசனையுடன் வைத்திருப்பதற்கான எளிய வழியை தேடுகிறீர்கள் எனில், நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளீர்கள். உங்களுக்கு உதவும் வகையிலான சில எளிய வழிகளை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How You Can Keep Your Cupboards Smelling Fresh At All Times
விளம்பரம்
Surf Excel Matic Liquid

உங்கள் அலமாரியை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் வாசனைத் திரவியத்தின் நறுமணம் வீச வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் அலமாரியில் உள்ள உங்களது ஆடைகளை புதிய வாசனையுடன் வைத்திருப்பதற்கான சில அற்புதமான குறிப்புகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

1) காபி தூள்

உங்களுக்குக் காபியின் நறுமணம் பிடிக்குமானால், ஒரு கொள்கலனில் காபி தூள்களை நிரப்பி, அதனை அலுமினிய மென்தகடால் மூட வேண்டும். அதன் பின், அந்த மென்தகடு மீது சில துளைகளை விட்டு, உங்கள் அலமாரியின் உள்ளே அந்த கலனை வைக்கவும். இது உங்கள் அலமாரி முழுவதும் காபியின் நறுமணத்தைப் பரப்பும். புத்துணர்ச்சியைப் பராமரிக்க இதிலுள்ள  காபித்தூளை குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்ற  வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். 

2) நறுமண எண்ணெய்கள்

ஒரு கப் தண்ணீரை எடுத்து அதில் 6 முதல் 7 துளிகள் வரை உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யைச் சேர்க்கவும், மேலும் அதில் 4 முதல் 5 துளிகள் வெண்ணிலா சாற்றை விடவும். உங்களுக்கு பிடித்தமான பல நறுமண எண்ணெய்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை நன்கு கலக்கி, தெளிப்பான் பாட்டிலில் ஊற்றி, நன்கு குலுக்கி விடவும். இதனை இரு நாட்களுக்கு ஒருமுறை என உங்கள் அலமாரியின் மூலைகள் மற்றும் அடுக்குகளில் தெளித்து விடவும். நிழலான, குளிரான பகுதியில் இந்த பாட்டிலை சேமித்து வைக்கலாம்.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

3) சந்தனக்கட்டை

உங்கள் அலமாரியின் அடுக்குகளில் சிறிய சந்தனக்கட்டையை வைக்கவும். இதன் புத்துணர்ச்சி வாய்ந்த இயற்கையான நறுமணம் உங்கள் அலமாரி மற்றும் ஆடைகளின் வாசனையை மிக அற்புதமாக உருவாக்கும்!

4) நறுமண பை அல்லது ஹேங்கர்

நறுமணம் நிறைந்த ஹேங்கர்கள் சந்தையில் கிடைக்கிறது. இது உங்கள் அலமாரிக்கு புதிய நறுமணத்தைச் சேர்க்கும். அதோடு நீங்கள் அலமாரியில் புத்துணர்ச்சியையும் உருவாக்கலாம். ரோஜா இதழ்கள், புதினா இலைகள் அல்லது நறுமண எண்ணெய்களில் ஊறவைக்கப்பட்ட காட்டன் போன்ற நறுமணம் நிறைந்த பொருட்களை வலை பையில் போட்டு வைக்கவும். ஹேங்கருக்கு இடையே இதனைத் தொங்கவிடுவதால், உங்கள் அலமாரி புதிய வாசனையையும், மகிழ்வையும் தரும். வலைப் பையில் உள்ள பொருட்களைத் தொடர்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அவ்வளவு தான்! இந்த குறிப்புகள் உங்கள் அலமாரிகளை புதிய வாசனையுடன் வைத்திருக்கும், காலநிலையைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது