ஃப்ரன்ட்-லோட் சலவை இயந்திரத்தை தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம்.

சரியான வகை சலவை இயந்திரத்தை நீங்கள் வைத்திருப்பது சலவை செய்வதை சுலபமாக்கிடும். ஒரு ஃப்ரன்ட்-லோடிங் சலவை இயந்திரத்தின் நன்மைகளை நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்பினால், இந்த வழிகாட்டி உங்களுக்காக தான்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Here’s Why You Should Choose a Front-Loading Washing Machine
விளம்பரம்
Surf Excel Matic Liquid

 முன் ஏற்றும் சலவை இயந்திரம், உங்கள் சலவைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இது உங்கள் துணிகளை விரைவாகவும் ஆழமாகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வல்லது. புதிய இயந்திரம் வாங்கும் முன், கீழுள்ள முன்-ஏற்றும் சலவை இயந்திரத்தின் ஒரு சில நன்மைகளை காண்க.

1) அதிக கொள் திறன்:

 முன்-ஏற்றும் சலவை இயந்திரத்தின் முக்கிய அம்சம், அதிக கொள் திறன். இது மேல்-ஏற்றும் இயந்திரத்துடன் ஒப்பிடுகையில் அதிக கொள் திறன் கொண்டது என்பதால், அதிக துணிகளை ஒரே தடவையில் துவைக்க முடியும். கனமான துணிகளைக் கூட எளிதாக துவைக்கலாம்.

2) குறைந்த நீர்- தேவை:

சராசரியாக மேல்-ஏற்றும் இயந்திரம் ஒரு சலவைக்கு 90 முதல் 100 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அதே சமயம், முன்- ஏற்றும் இயந்திரம் ,அதில் பாதி அல்லது அதற்கும் குறைவாகவே பயன்படுத்துகிறது.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

3) குறைந்த மின் தேவை மற்றும் குறைந்த சலவைத்தூள் :

 முன் ஏற்றிகள், மேல் ஏற்றிகளுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு மின்சக்தி மற்றும் சோப்பு ஆகியவற்றை பயன்படுத்துகின்றன.

4) குறைவான சுழற்சிகள் தேவை:

முன்-ஏற்றும் இயந்திரம் அதிக கொள் திறன் கொண்டதால், ஒரே சுழற்சியில் நிறைய துணிகளை சலவை செய்கிறது. இது உங்களுக்கு தேவையான சலவை சுழற்சிகளின் மொத்த எண்ணிக்கையை குறைக்கிறது.

5) வேகச்சுழல்- சுழற்சியின் போது குறைந்த சத்தம்:

 பல  முன்-ஏற்றும் சலவை இயந்திரங்கள் , அதிர்வு கட்டுப்பாட்டை கொண்டுள்ளன. இந்த அம்சம், உள்ளிருக்கும் ட்ரம்மை நிலைப்படுத்துவதால் ஒட்டுமொத்த இயந்திரமும் ஆடுவதில்லை. இவை தரைக்கும் நல்லது.

6) கச்சிதமான அளவு:

 மேல்- ஏற்றும் சலவை இயந்திரத்துடன் ஒப்பிடுகையில் ,முன்-ஏற்றி மிகவும் கச்சிதமாக இருப்பதோடு குறைந்த இடத்தையே எடுக்கும்.

மிகுந்த ஆற்றல் கொண்ட இந்த முன்-ஏற்றும் இயந்திரம், நேரத்தை மிச்சப்படுத்த நன்றாக உதவுகிறது.  சலவை இயந்திரம் வாங்கும் பொழுது, இனிமேல் நீங்கள் தகவலறிந்து சிறப்பாக தேர்வு செய்யலாம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது