உங்கள் சலவைக்கு ஃபிரன்ட்- லோடிங் வாஷிங் மிஷின்கள் சரியான தேர்வாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் ஒரு ஃப்ரன்ட்- லோடிங் வாஷிங்மெஷினை வாங்க திட்டமிட்டிருந்தால், அது சரியான முடிவே என்பதனை உறுதி செய்ய இதோ சில காரணிகள். மேலும் படித்து, தெரிந்து கொள்ளவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Find Out If a Front-Loading Washing Machine is the Right Choice For You
விளம்பரம்
Surf Excel Matic Liquid

ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின் பலவிதமான நன்மைகளை கொண்டுள்ளதால், சலவைக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஃப்ரன்ட் -லோடிங் வாஷிங் மெஷினில் உள்ள கண்ணாடி போன்ற கதவு அதன் அழகை மேலும் கூட்டுகிறது. மேலும் துவைப்பதற்கு எளிதாகவும் அமைகிறது. இந்த வாஷிங் மெஷின் பலவிதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளதோடு, மிகவும் முன்னேறிய தொழில்நுட்ப அமைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கவனமாக ஆராய்ந்து ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

1) குறைந்த சத்தம்

 அரை-தானியங்கி வாஷிங் மெஷின்களிலும் டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களிலும் சத்தம் என்பது ஒரு பெரிய குறையாக உள்ளது. ஆனால் ஃப்ரன்ட் -லோடிங் வாஷிங்மெஷினை இதர வகை மெஷின்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த சத்தமே உண்டாகிறது. இதற்கு அதன் அதிகபட்சமாக முன்னேறிய தொழில்நுட்ப அமைப்பே காரணம். எனவே நீங்கள் குறைந்த சத்தத்தை விரும்பினால், ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங்மெஷினை தேர்வு செய்யலாம்.

2) தண்ணீர் சேமிப்பு

 ஒரு ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின், மற்ற வாஷிங் மெஷின்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த தண்ணீரையே பயன்படுத்துகிறது. ஒரு டாப்-லோடிங் வாஷிங் மெஷின் 40-50 லிட்டர் தண்ணீரை ஒரே சலவை சுழற்சிக்கு பயன்படுத்துகிறது. ஆனால் ஒரு ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின், 20-30 லிட்டர் தண்ணீரை மட்டுமே ஒரு சலவை சுழற்சிக்கு பயன்படுத்துகிறது. நீங்கள் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இடத்தில் இருந்தால், உங்களுக்கு சரியான தேர்வு ஒரு ப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின் ஆகும்.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

3) மின்சார சேமிப்பு

 நீங்கள் ஒரு வாஷிங்மெஷினை வாங்கியபின், உங்கள் மின்சார கட்டணம் அதிகமாகும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனென்றால் ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின் மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. ஆம் இது உண்மையே!

4) நேரத்தை மிச்சப்படுத்தும்

ஒரு ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின் மற்ற வாஷிங் மெஷின்களை காட்டிலும் குறைந்த நேரத்தில் ஒரு சலவையை முடித்துவிடும். இது உங்கள் நேரத்தையும் உங்கள் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும். மேலும் சிறந்த சலவைக்கு, நீங்கள் ஒரு சிறப்பான சோப்பு தூளை தேடுகிறீர்கள் என்றால், ஸர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விடை நீங்கள் பயன்படுத்தலாம். ஏனென்றால் இது மெஷின்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. இது திரவ சோப் என்பதால், தண்ணீரில் நன்றாக கரைந்து, எந்த ஒரு பொடி போன்ற மிச்சத்தையும் துணிகளின் மேல் படிய விடாது.

ஒரு ஃப்ரன்ட்- லோடிங் வாஷிங்மெஷினே உங்கள் சலவைக்கு சரியான தேர்வாக இருக்கும் என்பதால் இதில் சில நன்மைகள் உள்ளன.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது