உங்கள் குடும்பத்திற்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வாஷிங் மெஷினை எப்படி கண்டுபிடிப்பது!

கடைகளில் கிடைக்கும் பலவிதமான வாஷிங் மெஷின்கள் உங்களைக் குழப்புகிறதா? வாஷிங் மெஷின் வாங்குவதற்கான வழிகாட்டி, உங்களுக்கு ஏற்ற வாஷிங் மெஷினை தேர்வு செய்வது எப்படி என்பதை கூறுகிறது!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Find a Washing Machine That Fits Your Budget and Your Family!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

வாஷிங் மெஷின்கள் விலை அதிகமானவை. எனவே அதை வாங்கும் முன்பு சில காரணங்களை கருத்தில் கொள்வது அவசியம். ஏனென்றால் இதுதான் உங்கள் வீட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மின்சார சாதனம் ஆகும். உங்களுக்கு பொருந்தக்கூடிய மற்றும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரக்கூடிய வாஷிங் மெஷினை வாங்குவதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணங்களை கொடுத்துள்ளோம். உங்கள் முதலீட்டின் மூலம் நீங்கள் சிறப்பான பலனைப் பெற உதவுவதற்காக இங்கே பட்டியலிடப்பட்ட காரணங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தேவையான வாஷிங் மெஷினை கண்டுபிடித்து வங்கிவிட்டால், நீங்கள் அதில் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் பயன்படுத்தவும். இது உங்கள் வாஷிங் மெஷினிற்காகவே விசேஷமா தயாரிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் மெஷினின் ஆயுளை பராமரிக்க உதவுகிறது.

1) லோடின் வகை

டாப் லோடிங் வாஷிங் மெஷின்களுடன் ஒப்பிடும்போது ஃபிரன்ட் லோடிங் மெஷின்கள் விலை மிகவும் அதிகமானவை. ஆனால் ஃபிரன்ட் லோட் வாஷிங்  மெஷினில் தண்ணீர் குறைவாக செலவாகும். நீங்கள் பணச் செலவு முக்கியமா அல்லது தண்ணீர் சேமிப்பு முக்கியமா என்று சிந்தித்துப் பார்த்து மெஷினை வாங்க வேண்டும்.

2) ஆட்டோமேட்டிக் அல்லது செமி ஆட்டோமேட்டிக்

நீங்கள் வேலைக்கு போகும் நபராக இருந்தால், ஆட்டோமேட்டிக் மெஷின் வாங்குவது நல்லது. அது விரைவானது மற்றும் சௌகரியமானது. இருந்தாலும் செமி ஆட்டோமேட்டிக் மெஷின்களைவிட விலை அதிகமானது. ஆட்டோமேட்டிக் மெஷின்களில் ஒரு பட்டனை அழுத்தினாலே எல்லா வேலைகளும் முடிந்துவிடும். ஆனால் செமி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் சில வேலைகளை நீங்களே செய்ய வேண்டும். அதாவது ஒரு டப்பிலிருந்து இன்னொரு டப்பிற்கு துணியை மாற்றிப் போடுதல் போன்றவை.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) மின்சார சேமிப்பு

தண்ணீர் சேமிப்பு, திறமையான மோட்டர், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக துவைத்தல் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட மெஷினை தேர்வு செய்யவும். அம்மாதிரியான மெஷின்கள் உங்கள் தண்ணீர் தேவையையும் மின்சார செலவையும் குறைக்கும்.

4) அளவு முக்கியமானது. 

உங்களுக்கு தேவைப்பட்டாலே தவிர பெரிய மெஷின்களை வாங்காதீர்கள்.   மிகப்பெரிய பாதகமானது, பெரிய மெஷின்கள் வீட்டில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். நான்கு பேருள்ள குடும்பத்திற்கு 6 கிலோ மெஷின் போதும். இன்னும் சிறியதே போதும் என்றால் அதை வாங்கவும். தேவைப்பட்டால் இரண்டு முறை துவைக்கவும்.

5) கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பம்சங்கள் இருக்கிறதா என்று பார்க்கவும். அதாவது டெம்பரேச்சர் கன்ட்ங்ரோல், தனிப்பட்ட சலவை முறை போன்றவை துவைப்பதை சுலபமாக்கும், விரைவாக்கும். நீங்கள் ஆட்டோமேட்டிக் டிஸ்பென்சர் இருக்கும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதன் மூலம் ப்ளீச், ஃபேப்ரிக் கண்டிஷனர் அல்லது டிடெர்ஜென்ட் போன்றவற்றை தனியாக போட முடியும். 

நீங்கள் வாஷிங் மெஷினை தேடும் முன்பு உங்களுக்கு ஏற்ற இந்த குறிப்புகளை கைவசம் வைத்திருக்கவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது