மெஷினில் துவைத்த பிறகு உங்கள் துணிகள் அழுக்காக இருக்கின்றனவா? இதோ உங்களுக்கு உதவக்கூடிய எளிமையான குறிப்புகள்.

உங்கள் துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்த பின்பு அவற்றில் கறைகளும் சில அடையாளங்களும் இருக்கின்றனவா? கவலை வேண்டாம். இதோ இந்த பிரச்சினையை தீர்க்கும் வழி!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Clothes Getting Dirty After Machine Wash? Simple Fixes to Your Rescue!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

சில நேரங்களில் மெஷினில் துவைத்த பிறகு துணிகளில் அசிங்கமான அடையாளங்கள் இருக்கும். ஏனென்றால் துவைக்க பயன்படுத்தும் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் அல்லது டிடெர்ஜென்ட்டுகள் அவற்றின் கசடுளை விட்டுச் செல்கின்றன. அதை உடனே கவனிக்காமல் விட்டுவிட்டால் அது சேர்ந்து அதிகமாகும். 

இந்த பிரச்சினையை தீர்க்க நாங்கள் சலவைக்கான சிறந்த குறிப்புகளையும் செயல்முறைகளையும் தருகிறோம். 

சில நேரங்களில் டிடெர்ஜென்ட் ஒழுங்காக  நீங்குவது இல்லை. இந்த பிரச்சினையை தடுக்க நீங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் போன்ற டிடெர்ஜென்ட்டை பயன்படுத்தவும். இது லிக்விடாக இருப்பதால் தண்ணீரில் முழுமையாக கரைந்துவிடுகிறது. கசடுகள் எதையும் விட்டுச் செல்வதில்லை. இது வாஷிங் மெஷின்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

1) வினிகர் பயன்படுத்தவும்

அதிப்படியான தண்ணீரை மெஷினிலிருந்து வெளியேற்றி, பிறகு 3 கப் வினிகர் ஊற்றி மெஷினை 10 நிமிடங்கள் வெந்நீரில் காலியாக ஓடவிடவும். இதனால் மெஷினில் முன்னர் துவைத்தபோது தங்கி இருக்கும் கசடுகள் எல்லாம் நீங்கிவிடும். 

விளம்பரம்
Surf Excel Matic Liquid

2) ரப்பர் டோர் சீலை சுத்தம் செய்யவும்.

உங்களிடம் ஃபிரன்ட் லோடிங் வாஷிங் மெஷின் இருந்தால், அதன் ரப்பர் டோர் சீலை சுத்தம் செய்யவும். பெரும்பாலும் இந்த ரப்பர் சீலில்தான் டிடெர்ஜென்ட் ஒட்டிக்கொள்கிறது. ஒரு முறை துவைத்த பிறகு ஒட்டிக் கொள்ளும் இந்த கசடு அடுத்த முறை நீங்கள் துணிகளை துவைக்கும்போது துணிகளில் ஒட்டிக்கொள்கிறது. எனவே ஒவ்வொருமுறையும் துணி துவைத்த பிரகு ஒரு சுத்தமான துணியால் இந்த பகுதியை சுத்தம் செய்வதற்கு மறக்காதீர்கள்.  மேலும் பயன்ப்படுத்திய பிறகு வாஷிங் மெஷினின் கதவுகளை சற்று நேரம் திறந்து வைக்கவும். இதன் மூலம் வாஷிங் மெஷினிற்குள் காற்றோட்டம் இருக்கும். 

3) பிரச்சினையை தீர்த்தல்

மிக அரிதான நிலைமைகளில் உங்கள் வாஷிங் மெஷினில் உள்பாகம் ஏதேனும் தேய்ந்திருக்கலாம் அல்லது உடைந்திருக்கலாம். உதாரணமாக மெஷினின் டோர், டிஸ்பென்சர், பம்ப் போன்றவை. எனவே நீங்கள் துவைக்கும்போது உடைந்த பாகத்திலிருக்கும்  துரு உங்கள் துணிகளில் படியக்கூடும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு  வாஷிங் மெஷினின் மின்சார இணைப்பை நீக்கி, எந்த பாகம் உடைந்து பிரச்சினையை உருவாக்குக்கிறது என்று மிக கவனமாகப் பார்க்கவும். கம்பெனி அங்கீகரித்த மெக்கானிக்கை அழைத்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். 

ஒவ்வொரு வாஷிற்கு பிறகும் சுத்தமான துணிகளைப் பெற உங்கள் வாஷிங் மெஷினை பராமரிக்கும் குறிப்புகளை கையாளுங்கள். இந்த சிறிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு தடவையும் துணிகளை கறைகள் ஏற்படாமல் துவைத்து முடிக்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது