உங்கள் ஃப்ரண்ட்-லோடிங் வாஷிங் மெஷினின் உள்ளேயும், வெளியேயும் சுத்தம் செய்வதற்கு வழி இதோ.

உங்களின் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின் தண்ணீரை நிரப்ப மற்றும் தண்ணீரை வெளியேற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா அல்லது அதில் துர்நாற்றம் அடிக்கிறதா? இதோ உங்கள் வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய சில சுலபமான வழிகள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Here’s How to Clean Your Front-Loading Washing Machine Inside Out
விளம்பரம்
Surf Excel Matic Liquid

உங்கள் துணிகளை சுத்தம் செய்ய, முதலில் உங்கள் வாஷிங் மெஷினை எவ்வாறு கையாள்வது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். ஆம், தொடர்ந்து வாஷிங் செய்யும் போது உங்கள் மெஷினில் அழுக்கு, சோப்பு கறைகள், கிருமிகள் குவிந்து விடும் சூழல் ஏற்படலாம். கவலைப்படாதீர்கள், இந்த எளிய வாஷிங் மெஷின் பராமரிப்பு வழி முறை மூலம் நீங்கள் உங்கள் மெஷினை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கலாம்.

உங்கள் வாஷிங் மெஷினில் ஓவர்லோடிங்கை தவிர்த்து விடுங்கள். துணிகள் நன்கு சுத்தம் செய்யப்பட உங்கள் துணிகள் மெஷினில் நன்கு சுற்றி வருவது அவசியம் என்பதால் துணிகளை பல பகுதிகளாக பிரித்து போட்டு சலவை செய்யுங்கள்.

செயல் 1: ஒரு கரைசல் உருவாக்குங்கள்

முதலில் ஒரு உலர்ந்த துணியை எடுத்து மெஷினை மேலிருந்து கீழாக நன்கு துடையுங்கள். 2 கப்கள் ஒயிட் வினிகர் மற்றும் 1 கப் பேக்கிங் சோடா எடுத்து கலந்து அதை வாஷரில் ஊற்றுங்கள். இப்போது ஹை லோடு சைஸில் மெஷினை செட் செய்து ஹாட் வாட்டருடன் 15 நிமிட நேரத்திற்கு ஓட விடுங்கள். ஒயிட் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கிருமிகளை கொல்ல உதவுவதோடு உங்கள் வாஷிங் மெஷினில் இருந்து அழுக்கு தூசிகளையும் அகற்றி விடும்.

செயல் 2: மீண்டும் ரீசெட் செய்யுங்கள்

ஒரு சலவை சுழற்சி முடிந்து விட்டால் பின்பு அந்த கலவை ஒரு மணி நேரம் அப்படியே இருக்கட்டும். பின்பு தண்ணீரை வெளியேற்றி விடுங்கள்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

செயல் 3: வெளிப்புறங்களை சுத்தம் செய்யுங்கள்

உங்கள் வாஷிங் மெஷினின் பக்கவாட்டுப் பகுதிகளை சுத்தம் செய்ய தண்ணீரில் ஒரு சுத்தமான துணியை முக்கி அதை மேலிருந்து கீழாக இதமாக துடையுங்கள். மேலும் ஏதேனும் கறை படிந்திருந்தால், அதை சுத்தம் செய்ய மேற் பகுதியை மற்றும் மூடியை துடையுங்கள். 

செயல் 4: பிரித்தெடுக்கப்படும் பாகங்களை சுத்தப்படுத்துங்கள்

புராடக்ட் டிஸ்பென்சர்கள் போன்ற பிரித்து எடுக்கப்படும் பாகங்களை சுத்தம் செய்ய, 2 கப்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்கள் மெஷினுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் போன்ற லிக்விட் டிடர்ஜெண்ட் 1 தேக்கரண்டி ஊற்றி கரைசலாக்கி கொள்ளுங்கள். நன்கு கலந்து கொள்ளுங்கள். லிக்விட் டிடர்ஜெண்டின் சிறப்பு என்னவென்றால் அது எந்த கறையும் ஏற்படுத்தாமல் தண்ணீரில் முழுதும் கரையும் திறன் கொண்டது. அதன் பின் மென்மையான குச்சங்கள் கொண்ட பிரஷ் பயன்படுத்தி இந்த கரைசலால் இதமாக மெஷின் பாகங்களை தேயுங்கள். மீண்டும் சாதாரண தண்ணீரால் வாஷ் செய்து ஒரு மைக்ரோ ஃபைபர் துணியால் ஒற்றி உலர விடுங்கள்.

ஒரு சுத்தமான வாஷிங் மெஷின்  உங்கள் சலவை துணிகள் பளிச்சென்று தோன்ற உதவும்!!!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது