
தினசரி வேலையில் பெரும்பாலான நேரம் துணி துவைப்பதற்கே போய்விடுகிறது. இந்த வேலையை வாஷிங் மெஷின் மிகவும் சுலபமாக்கிவிடும். எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மெஷினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
நீங்கள் புதிய வாஷிங் மெஷினை வாங்குவதற்கு முன்பு பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் - அதாவது எத்தனை பேருடைய துணிகளை துவைக்க வேண்டும். அது சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதா, உங்கள் பட்ஜெட்டிற்கு வரக்கூடியதா போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அறிவுபூர்வமாக சிந்தித்து வாஷிங் மெஷின் வாங்குவதற்காக நாங்கள் சில விஷயங்களை பின்னே கொடுத்துள்ளோம்.
வழக்கமாக துவைப்பதற்கு, நீங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் பயன்படுத்தவேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது உங்கள் மெஷின்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளது.
1) ஃபிரன்ட்லோடிங் வர்சஸ் டாப் லோடிங்
இந்த மிகப்பெரிய முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். ஃபிரன்ட் லோடு வாஷிங் மெஷின்கள் பொதுவாக குறைவான இடத்தை எடுத்துக்கொள்ளும். அவை துணிகளை மென்மையாக துவைக்கும். குறைவான தண்ணீரை பயன்படுத்தி அதிவேகமாக சுழன்று துவைக்கும். அப்படியென்றால் துணிகள் உலரும் நேரம் குறையும். ஆனால் அவை விலை அதிகமானவை.

டாப் லோடிங் மெஷினகள் பெரிதானவை, விலை குறைந்தவை. ஃபிரன்ட் லோடு மெஷினுடன் ஒப்பிடும்போது அவை அதிக துணிகளை துவைக்கும். துணிகளை மிகச் சிறப்பாக அலசும். துவைக்கும் நேரமும் குறையும்.
2) செயல்திறன்
உங்கள் வாஷிங் மெஷினை வாங்குவதற்கு முன்பு அதன் தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பு தரவரிசையை ப் பார்க்கவும். அதிக தரவரிசை இருந்தால், உங்கள் மின்சார பில் குறையும். பியூரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்ஸி (பிஇஇ) ஸ்டார் ரேட்டிங்கை பார்க்கவும். இதில் ஐந்து ஸ்டார்கள் மிகவும் உயர்ந்தவை.
3) சிறப்பம்சங்கள்
வாஷிங் மெஷினில் துணிகளை சிறப்பாக துவைப்பதற்காக உங்கள் மெஷினில் அமைக்கப்பட்டுள்ள புரோக்கிராம்களை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். சில வாஷிங் மெஷின்களில் பல ப்ரீ-புரோக்கிராம்கள் அமைக்கப்பட்டுள்ள ன. அதில் கையால் துவைப்பது, கனமான லோடுகள், விசேஷ துணிகளுக்கான (பட்டு அல்லது கம்பளி போன்றவை) சுழற்சிகள் உள்ளன. மிக உயர்ந்த மாடல்களில் நீராவியால் துவைக்கும் வசதியும், இஸ்திரி தேவைப்படாத செட்டிங்கும், வேகமான சுழற்சி மற்றும் குழந்தைகளின் டயப்பர் மற்றும் இதர துணிகளில் கிருமிகளை நீக்கி துவைக்கும் முறையும் உள்ளன.
4) பட்ஜெட்
விலை மிகவும் அதிகமான ஒன்றுதான் உங்களுக்கு சிறப்பான வாஷிங் மெஷினால இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேற்கண்ட அனைத்து கருத்துக்களை சிந்தித்து மெஷினை வாங்கவும். மின் சேமிப்பும் மாடல் ஆரம்பத்தில் அதில செலவுள்ளதாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால அளவில் அது பணத்தை சேமிக்கும். விலை அதிகமான மெஷின்களைப் போல பட்ஜெட்டில் அடங்கும் சில மாடெல்களும் பலன் தரும். ஆனால் அவற்றில் குறைவான புரோக்கிராம்களும் செட்டிங்குகளும் மட்டுமே இருக்கும். உங்கள் பட்ஜெட்டை போடுவதற்கு முன்பு உங்கள் தேவைகளை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். மேலும், உங்கள் அறையின் நிறத்திற்கு எற்ற வாஷிங் மெஷினை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்றால் நீங்கள் பொதுவான வெள்ளை அல்லது சாம்பல் நிற மெஷின்களை தேர்வு செய்யலாம். இதன் மூலம் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம்.
5) செயல்திறன்
ஒரு குடும்பத்தில் 2 நபர்கள் மட்டும் இருந்தால், 5 கிலோ திறனுள்ள துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் போதுமானது. ஒரு குடும்பத்தில் 4-7 நபர்கள் இருந்தால் 7-8 கிலோ திறனுள்ள மெஷின் போதுமானது. பெரிய குடும்பத்திற்கு 9 கிலோ திறனுள்ள மெஷின் சிறப்பாக இருக்கும்.