உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வாஷிங்மெஷினை நீங்கள் தேடுகிறீர்களா?

ஆம், ஒரு வாஷிங் மெஷினால் உங்களுடைய நேரத்தையும் மின்சாரத்தையும் எளிதில் மிச்சப்படுத்த முடியும்! அது எப்படி என்பதை இங்கே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Are You Looking for a Washing Machine That Will Save You Energy and Time?
விளம்பரம்
Surf Excel Matic Liquid

ஒரு வாஷிங் மெஷின், நீங்கள் செய்யும் வேலைகளிலிருந்து ‘சலவை செய்வதை’ உங்கள் அன்றாட வாழ்க்கையில், மிக சுலபமாக மாற்றிவிடுகிறது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஒரு மின்சாரத்தை சேமிக்கக்கூடிய வாஷிங்மெஷினை வாங்க விரும்பினால், உங்களுக்காகவே நாங்கள் சில அற்புதமான குறிப்புகளை கொண்ட பட்டியலை தொகுத்துள்ளோம். இதை பின்பற்றி நீங்கள் வாஷிங் மெஷின் வாங்கும் பொழுது தெளிவான முடிவை எடுக்கலாம்.

1) அரை-தானியங்கி வாஷிங் மெஷின்

ஒரு அரை-தானியங்கி வாஷிங் மெஷின், துவைப்பதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. துவைப்பதற்கு தனியாகவும், உலர்த்துவதற்கு தனியாகவும், ட்ரம்கள் இதில் உள்ளது. துணிகளை உலர்த்துவதற்கு ஒரு ட்ரம்மில் இருந்து துணிகளை எடுத்து மற்றொரு ட்ரம்மில் நீங்கள் போட வேண்டும். மேலும் இது அதிக அளவு நேரத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்துகிறது.

2) டாப்-லோடிங் வாஷிங் மெஷின்

நீங்கள் உங்கள் வீட்டிற்கு குறைந்த மின்சாரத்தையும் குறைந்த நேரத்தையும் செலவழிக்கக் கூடிய ஒரு வாஷிங்மெஷினை வாங்க விரும்பினால், நீங்கள் ஒரு டாப்-லோடிங் வாஷிங் மெஷினை வாங்கலாம். ஒரு டாப்-லோடிங் வாஷிங் மெஷின், துவைப்பதற்கு மிகக் குறைந்த நேரத்தையே எடுத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி அதிக அளவு துணிகளை ஒரே சலவையில் துவைத்து விடக்கூடியது. இதில் துவைப்பதற்கு உலர்த்துவதற்கும் சேர்த்து ஒரே ட்ரம்மே உபயோகப்படுகிறது. இது உங்களுக்கு மின்சாரத்தை சேமிக்க நல்ல முறையில் உதவுகிறது. நீங்கள் வாஷிங்மெஷினை வாங்குவதற்கு முன் ‘மின்சாரம்’ என்கிற அம்சத்திற்கு அருகே எத்தனை ஸ்டார்கள் உள்ளன என்பதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதிக ஸ்டார்கள் குறைந்த மின்சார தேவையை குறிக்கும்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின்

ஒரு ஃபிரண்ட்-லோடிங் வாஷிங் மெஷின் ஆனது அரை-தானியங்கி மெஷினை விடவும், டாப்-லோடிங் மிஷினை விடவும் சிறந்ததாகும். ஃப்ரன்ட் லோடிங் வாஷிங்மெஷினில் துணி துவைக்கும் சுழற்சியின் வேகம் மிக அதிகமாக இருக்கும். இதன் அதிக வேகத்தால், மற்றும் சலவையை எளிதில் விரைவாக முடிக்கும் தன்மையால், நேரமும் மின்சாரமும் நன்கு மிச்சமாகும். எனினும் இந்த மெஷினை நீங்கள் வாங்க விரும்பினால், அதற்கு வேகமான மற்றும் தொடர்ச்சியான தண்ணீர் சப்ளை தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் வீட்டிற்கு நீங்கள் விரும்பிய ஒரு வாஷிங்மெஷினை வாங்கி, உங்கள் நேரத்தையும் மின்சாரத்தையும் மிச்சப் படுத்துங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது