புதிய குடிநீர் பாட்டில் வாங்கியுள்ளீர்களா? பயன்படுத்தும் முன்பு அவற்றை சுத்தம் செய்யுங்கள்!

புதிதாக வாங்கிய தண்ணீர் பாட்டில்களில் கெட்ட வாசனை இருக்கும். அவற்றை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அவை இன்ஃபெக்ஷன்களை ஏற்படுத்தலாம். ஆனால் கவலை வேண்டாம்.) புதிதாக வாங்கிய பாட்டிலை முதலில் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த சுலபமான முறையின் மூலம் அதை முழுமையாக) சுத்தம் செய்யுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Bought a New Water Bottle? Clean It Before First Use!

சுத்தமில்லாத பாட்டில்களில் வைக்கப்படும் தண்ணீர் கெட்ட வாசனையுடன் மோசமான சுவையுடன் இருக்கும். இதனால் நோய்களும் வரக்கூடும். நீங்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்தால் தண்ணீரினால் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

புதிய பாட்டில்களை வாங்கியவுடன் அதை சுத்தம் செய்ய அலசி விட்டு உடனே பயன்படுத்துவது தான் நமது முதல் சிந்தனை. இருந்தாலும் அவற்றை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அது கஷ்டமான வேலையும் அல்ல.

அந்த பாட்டில்களை முழுமையாக சுத்தம் செய்வதற்கு சுலபமான ஆனால் ஆற்றல் மிக்க வழிகள் இதோ.

வினிகர் பயன்பாடு

ஸ்டெப் 1:

உங்கள் தண்ணீர் பாட்டிலை வெதுவெதுப்பான தண்ணீரால் அலசி கழுவவும்

ஸ்டெப் 2:

பாட்டிலில் சுத்தமான தண்ணீரை நிரப்பவும். அதில் 2 மேஜைக்கரண்டி வினிகர் விட்டு நன்கு குலுக்கவும்

ஸ்டெப் 3:

அந்த கரைசலை 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு வைக்கவும்

ஸ்டெப் 4:

பாட்டிலை காலி செய்து மறுபடியும் சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீரால் நன்கு அலசி வினிகரின் வாடையை நீக்கவும்.

ஸ்டெப் 5:

அதை 20 நிமிடங்கள் காற்றில் உலர வைக்கவும்.

பேக்கிங் சோடா பயன்படுத்துதல்

ஸ்டெப் 1:

ஒரு கப் தண்ணீரில் 2 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்த பசை தயாரிக்கவும். 

ஸ்டெப் 2:

இதை ஒரு ஸ்பாஞ்ஜ் மூலம் பாட்டிலிற்குள் பூசவும்

ஸ்டெப் 3:

இந்த பசை 15-20 நிமிடங்களுக்கு பாட்டிலிற்குள் அப்படியே இருக்க வேண்டும். 

ஸ்டெப் 4:

வெதுவெதுப்பான தண்ணீரால் அலசி பாட்டிலை கழுவி இந்த பசையை நீக்கிவிடவும் 

ஸ்டெப் 5:

பாட்டிலை வெயிலில் வைத்து அல்லது ஃபேனின் கீழ் வைத்து  அதை முழுவதுமாக உலர விடவும்

புதிய தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தும் முன்பு இந்த புதிய முறைகளை செய்யவும். எனவே ஒவ்வொரு முறை தண்ணீர் பருகும்போதும் அது புத்துணர்வுடன் இருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது