உங்கள் வாஷிங் மெஷினில் ஏன் ஒவர் லோடிங்கை தவிர்க்க வேண்டும், இங்கே காரணங்களை பாருங்கள்

அனைத்து துணிகளையும் ஒரே முறையில் சலவை செய்ய முயற்சிக்கும் போது நீங்கள் உங்கள் வாஷிங் மெஷினுக்கான வழிகாட்டியில் உள்ள அடிப்படை விதிகளை அலட்சியப்படுத்தி விடுகிறீர்கள். இதனால் உங்கள் மெஷினில் ஓவர் லோடிங் ஆகி விடுகிறது. நீங்கள் இதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சில காரணங்களை நாங்கள் கீழே தந்திருக்கிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Clothes Getting Dirty After Machine Wash? Simple Fixes to Your Rescue!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

ஒரு சில நேரங்களில் உங்கள் வாஷிங் மெஷினில் துணிகள் ஓவர்லோடு ஆகி விடலாம். உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது அல்லது மிக அவசரமாக வாஷ் செய்ய வேண்டிய நிலையில் மற்றும் ஒரு பயணத்துக்கு முன்பு ஒரே நாளில் சலவை செய்த புது துணிகள் தேவைப்படும் நிலையில் நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம். எனினும் காலப்போக்கில் உங்கள் மெஷினின் ஆரோக்கியம் இதனால் பாதிக்கப்படலாம். எனவே, நீங்கள் உங்கள் வாஷிங் மெஷினை எவ்வாறு சரிவர கையாள்வது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு சிறு திட்டமிடல் உங்கள் வாஷிங் மெஷினை பாதுகாக்க மற்றும் துணிகள் சேதம் ஆகாமல் தவிர்க்க உதவும்.

உங்கள் வாஷிங் மெஷினில் ஓவர் லோடிங் காரணமாக கீழ்க்கண்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

1) துணிகள் அழுக்காகவே வெளிவரும்

மெஷினில் ஓவர்லோடிங் செய்தால் சரியான முறையில் மெஷின் துணிகளை சலவை செய்யும் திறன் குறைந்து விடும். மெஷினின் உள்ளே துணிகள் சுற்றுவதற்கு குறைந்த இடமே கிடைக்கும். எனவே சில ஆடைகள் முழுமையாக வாஷ் செய்யப்பட இயலாது. குறைந்த இடமே இருப்பதன் காரணத்தால் சில ஜிப்கள் மற்றும் பட்டன்கள் நாசூக்கான துணிகளில் சேதப்படுத்தி விடக்கூடும். அதோடு நீங்கள் போட்ட துணிகள் டிடர்ஜெண்ட் சரியான முறையில் கரையாத காரணத்தால் அழுக்காகவே வெளிவரும். நீங்கள் ஒரு பவுடர் டிடர்ஜென்டை பயன்படுத்தும் போது பெரும்பாலும் இது நிகழ்கிறது. இதனால் உங்கள் துணிகளில் ஒரு கறையும் ஏற்பட்டு விடும். எப்போதுமே லிக்விட் வகை பயன்படுத்துங்கள் இது தண்ணீரில் முழுமையாக கரைந்து விடும். கறையை ஏற்படுத்தாது.

2) குறைவான செயல்திறன்

விளம்பரம்

Surf Excel Matic Liquid

ஓவர்லோடு ஆகி உள்ள மெஷின் அந்த லோடை வாஷ் செய்ய மற்றும் உலர்த்த அதிக தண்ணீர் பயன்படுத்துகிறது. இது வழக்கமான இயக்கம் போல் இருப்பதில்லை. உங்கள் துணிகளின் எக்ஸ்ட்ரா வெயிட் காரணமாக உங்கள் மெஷினின் மோட்டாருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காலப்போக்கில் இதனால் மோட்டாருக்கு அதிக சேதம் மற்றும் பழுதுகள் ஏற்பட்டு அதன் முடிவில் உங்கள் வாஷிங் மெஷினின் திறனும் குறையும் மற்றும் உழைப்புக் காலமும் குறைந்து விடும்.

3) டிடர்ஜெண்ட் கறை

மெஷினில் ஓவர்லோடிங் எனில், அதில் போடப்பட்ட துணிகள் சுற்றி வர குறைந்த இடமே இருக்கும். இதனால் அதிக அளவில் துணிகள் சுற்றி வரும். எனவே தண்ணீர் சுற்றி சுழல்வதற்கான இடம் குறைந்து விடும். டிடர்ஜெண்ட் சரியான முறையில் கரையாது. எனவே, வாஷிங்கின் முடிவில் சில கறைகள் டிரம்மின் சுவர்களில் பின்புறம் ஒட்டிக் கொள்ளும் மற்றும் உங்கள் துணிகளிலும் ஒட்டி இருக்கும். ஆனால், உங்கள் மெஷின்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் பயன்படுத்தினால் இந்த பிரச்சினையை தவிர்த்து விடலாம்.

4) அதிகமாமின்சார செலவு

மெஷினில் ஓவர்லோடாக இருக்கும் போது வழக்கமாக  துணிகளை வாஷ் செய்வதை விட அதிக தண்ணீர் தேவை. மேலும், டிடர்ஜெண்ட் முழுமையாக வாஷ் செய்வதில்லை என்பதால் நீங்கள் மீண்டும் ஒரு முறை சலவை செய்ய வேண்டியிருக்கலாம் இதனால், அதிக மின்சாரம் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுவதால் உங்கள் மின்சார பில்களின் தொகையும் அதிகரிக்கும்.

கவலைப்படாதீர்கள், உங்களின் சலவை செய்யப்பட வேண்டிய துணிகளை நீங்கள் மெஷின் கையாளும் விதத்தில் பிரித்துக் கொண்டால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். இதனால் உங்கள் துணிகள் சுத்தமாக வெளி வருவதோடு உங்கள் மெஷினும் நல்ல நிலையில் தொடர்ந்து உழைக்கும். காலப்போக்கில் உங்கள் மின்சார பில்களும் கூட குறைந்து விடும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது