தானியங்கி வாஷிங் மெஷினை உபயோகப் படுத்தி உங்கள் சலவையை சுலபமாக்க இதோ சில வழிகள்

உங்கள் துணிகளை கைகளால் துவைப்பது உங்களுக்கு கடினமாக இருப்பதோடு, அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். இப்படி இருக்கையில், ஒரு தானியங்கி வாஷிங் மெஷின், உங்களுக்கு எவ்வாறு சரியான தேர்வாக இருக்கும் என்பதனை இங்கே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How An Automatic Washing Machine Can Make Your Laundry Simpler
விளம்பரம்
Surf Excel Matic Liquid

ஒரு முழுமையான தானியங்கி வாஷிங் மெஷின் என்பது சந்தைகளில் விற்கப்படும் வாஷிங் மெஷின்களிலேயே மிகவும் விரும்பப்படும் ஒன்றாகவும், சிறந்ததாகவும் விளங்குகிறது. அது பல சிறப்பம்சங்களையும் நன்மைகளையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு தானியங்கி வாஷிங்மெஷினை வாங்க திட்டமிட்டிருந்தால், மற்றும் அதன் நன்மைகளை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த கையெடு உங்களுக்கானது.

இங்கே தானியங்கி வாஷிங்மெஷின்களால் கிடைக்கும் நன்மைகளை உங்களுக்கு விரிவாக விளக்கியுள்ளோம். இதை பின்பற்றி உங்கள் சலவையை எளிதாக்குங்கள்.

1) முழுமையான சுத்தம்

உங்கள் துணிகளை கைகளால் துவைப்பது அதிகநேரம் எடுத்துக் கொள்வதோடு அதிக உழைப்பையும் அதிகபட்சமான தண்ணீரையும் விரையம் செய்கிறது. நீங்கள் அதிகமாக உழைத்து துவைத்து முடித்த பின்னரும், துணிகளில் சில கறைகள் போகாமல் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒரு தானியங்கி வாஷிங்மெஷினை கொண்டு துவைப்பதால் இந்த பிரச்சனையை முழுவதுமாக சரி செய்யலாம். இதை உபயோகிப்பதால் நீங்கள் குறைந்த அளவு தண்ணீரையே செலவழிக்க நேரிடும் , அதுமட்டுமின்றி சுலபமாகவும் சலவையை முடித்துவிட முடியும். உங்கள் துணிகளை முழுவதுமாக சுத்தம் செய்ய ஒரு சிறந்த சோப்புத்தூள் தேவை. அதற்கு நீங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விடை நீங்கள் பயன்படுத்தலாம். ஏனென்றால் இது மெஷின்களுக்காகவே பிரத்தியேகமாக செய்யப்பட்டது. இது தண்ணீரில் முழுவதுமாக கரைவதோடு (மற்ற சோப்புத்தூளைப்போல்) எந்த ஒரு பொடி போன்ற மிச்சத்தையும் துவைத்த துணிகளின் மீது படிய விடாது.

2) நேரத்தை சேமிக்கும்

விளம்பரம்

Surf Excel Matic Liquid

உங்கள் துணிகளை கைகளால் துவைப்பது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஆனால் தானியங்கி வாஷிங்மெஷினை உபயோகித்து அதிக அளவு துணிகள் இருந்தாலும் அதை ஒரே செலவில் துவைத்து விட முடியும். உங்கள் குடும்பத்தில் 8-10 நபர்கள் இருந்தால் நீங்கள் 6.5 முதல் 7.5 கிலோ கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷினை உபயோகிக்கலாம். 12-14 நபர்கள் இருந்தால் நீங்கள் 8.5 முதல் 10.2 கிலோ கொள்திறன் கொண்ட வாஷிங்மெஷினை உபயோகிக்கலாம். சரியான அளவிலான வாஷிங்மெஷினை வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டின் சலவை சுமையை பெரிய அளவில் குறைக்க முடியும்.

3) அதிக அளவு உழைப்பை மிச்சப்படுத்தும்

நீங்கள் கைகளால் துவைக்கும் பொழுது துவைப்பது, அலசுவது, பிழிந்து, உலர்த்துவது போன்ற பல வேலைகள் செய்ய அதிகபட்சமான உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு தானியங்கி வாஷிங்மெஷின் இந்த பிரச்சனையை எளிதில் தீர்த்துவிடும். தானியங்கி வாஷிங்மெஷினில் நீங்கள் துணிகளை மட்டும் போட்டாலே போதும். அனைத்து வேலைகளையும் மெஷினே செய்துவிடும். உங்களுக்கு மிச்சமான இந்த நேரத்தை நீங்கள் மற்ற உபயோகமுள்ள வேலைகளில் ஈடுபடுத்தலாம்.

சரி, எப்பொழுது ஒரு தானியங்கி வாஷிங்மெஷினை வீட்டிற்கு கொண்டு வரப் போகிறீர்கள்?

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது