மெஷினில் துவைத்த பின்பு துணிகள் அழுக்காகின்றனவா? உங்களுக்கு உதவும் எளிமையான செயல்பாடுகள்.

துணிகளை மெஷினில் துவைத்து சுத்தமாக எடுப்பது என்பது ஒரு மேஜிக். ஆனால் துவைத்தபின்பும் அவை அழுக்காக இருந்தால், அது கெட்ட மேஜிக். கவலை வேண்டாம், இதோ இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் உதவுகிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Clothes Getting Dirty After Machine Wash? Simple Fixes to Your Rescue!

சில நேரங்களில் துணிகளை மெஷினில் சுழல விட்டு துவைத்து எடுத்த பின்பு உங்கள் துணிகளில் அசிங்கமான அடையாளங்கள் இருக்கிறதா? பதட்டப்படாதீர்கள். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் அல்லது டிடெர்ஜென்ட் துணிகளில் அடையாளங்களை விட்டுவிடுவதால் இவ்வாறு கறை ஏற்படுகிறது. ஆனால் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இவை துணிகளில் சேர்ந்து படிந்துவிடும்.

இதோ உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் குறிப்பு எங்களிடம் இருக்கிறது.

1) வினிகர் பயன்படுத்தவும்.

அதிகப்படியான தண்ணீரை மெஷினிலிருந்து வடிக்கவும். அதில் 3 கப் வினிகரை ஊற்றி வெந்நீருடன் 10 நிமிடங்கள் சுழலவிடவும். இதனால் முந்தைய சுழற்சியின்போது மெஷினில் படிந்திருக்கும் கசடுகள் நீங்கிவிடும்.

2) ரப்பர் டோர் சீலை சுத்தம் செய்யவும்

உங்களிடம் ஃபிரன்ட்-லோடு வாஷிங் மெஷின் இருந்தால், அதன் ரப்பர் டோர் சீலை சுத்தம் செய்யவும். பெரும்பாலான நேரங்களில் முந்தையை வாஷிங் சைக்கிளில் இந்த ரப்பர் சீல்லில் டிடெர்ஜென்ட் கசடுகள் படிந்துவிடும். பிறகு அடுத்த முறை துவைக்கும்போது துணிகளில் இந்த கசடுகள் படிந்து கறை ஏற்படுத்தும் ஒவ்வொரு முறை மெஷினில் துணி துவைத்த பிறகும் இந்த ரப்பர் சீலை உலர்ந்த துணியால் துடைக்க மறக்காதீர்கள். மேலும் எப்போதாவது பயன்படுத்தாத போது உங்கள் வாஷிங் மெஷினை சற்று நேரம் திறந்து வையுங்கள். இதனால் மெஷினிற்கு காற்றோட்டம் கிடைக்கும்.

3) உள் பிரச்சினைகளைத் தீர்த்தல்

அரிதான நிலைகளில், உங்கள் மெஷினின் உட்புறம் இருக்கும் பாகம் உடைந்துவிடலாம், சிராய்ப்பு ஏற்படலாம். உதாரணமாகஉங்கள் மெஷினின் டோர், டிஸ்பென்சர், பம்ப் போன்றவை. இதனால் துணி துவைக்கும்போது  இவற்றில் இருக்கும் துரு, உங்கள் துணிகளில் படிந்துவிடலாம். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உங்கள் மெஷினின் மின்சார பிளக்கை நீக்கி, மெஷினில் எந்த பாகம் உடைந்து இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று பார்க்கவும். பிறகு அதை சரி செய்யவும்.

ஒவ்வொரு முறை துணி துவைக்கும்போதும் கறை இல்லாத சுத்தத்தைப் பெறுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது