டாப்-லோடிங் வாஷிங்மெஷினை வாங்க உள்ளீர்களா? இந்த அறிவுரைகளை பின்பற்றவும்.

நீங்கள் ஒரு டாப்-லோடிங் வாஷிங்மெஷினை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு முன்பு இந்த உதவி பூர்வமான தகவல் குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும். இது உங்களுக்கு சிறப்பான முறையில் வாஷிங்மெஷினை தேர்வு செய்ய உதவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Buying a Top-Loading Washing Machine? Consider This Advice
விளம்பரம்
Surf Excel Matic Liquid

நம் துணிகளை சிறந்த முறையில் சுலபமாக சலவை செய்யவும், எளிதாக துவைக்கவும், நமக்கு வாஷிங் மெஷின் மிகவும் உதவுகிறது. ஆனால் நம் தேவைக்கு ஏற்ப இந்த வாஷிங்மெஷினை வாங்குவதற்கு முன் நாம் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாஷிங் மெஷின்களில் ஏராளமான வகைகள் உள்ளன. நீங்கள் ஒரு டாப் லோடிங் வாஷிங்மெஷினை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்குமுன் இந்த குறிப்புகளை பின்பற்றி, சிறந்த இந்த முறையில் வாஷிங்மெஷினை தேர்வு செய்வதை உறுதி செய்யுங்கள். 

அதன் பிரத்தியேக அம்சங்களை சரி பார்க்கவும்

ஒரு டாப் லோடிங் வாஷிங் மெஷினை வாங்குவதற்கு முன் அதன் சிறப்பம்சங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளவும். அதாவது இந்த வாஷிங்மெஷினில் சூடான நீரில் துவைக்க கூடிய அம்சம் இருக்கிறதா அல்லது வெவ்வேறு துணிவகைகளை துவைப்பதற்கு ஏற்ற அமைப்புகள் இருக்கிறதா என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளவும். இது உங்கள் சிந்தடிக், காட்டன், விஸ்கோஸ் ரெயான் போன்ற வெவ்வேறு வகையான துணிகளை துவைப்பதற்கு உதவும். உங்கள் தேர்வு அனைத்து வகையான துணிகளுக்கும் பொருந்த கூடியதாக இருக்குமா  என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும் உதவும்.

1) அதன் ட்ரம் செய்யப்பட்ட பொருளை சரி பார்க்கவும்

வாஷிங் மெஷினின் ட்ரம் எந்த பொருளில் செய்யப்பட்டது என்பதனை எப்பொழுதும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட ட்ரம் மற்றவையை விட நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

2) அதன் துணி துவைக்கும் கொள்ளளவை புரிந்துகொள்ள வேண்டும்

வாஷிங் மெஷினின் கொள்ளளவு ஒரு மிக முக்கியமான அம்சமாகும். உங்களுடைய குடும்பம் பெரியதாக இருந்தால், மற்றும் நிறைய துணிகளை துவைக்க வேண்டியதிருந்தால், உங்களுக்கு அதிக கொள்ளளவு கொண்ட வாஷிங் மெஷின் தேவைப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப வாஷிங்மெஷினை தேர்வுசெய்யவும். ஏனென்றால் பலவகையான கொள்ளளவை கொண்ட வாஷிங் மிஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன.

3) உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை மனதில் கொள்ளவும்

உங்கள் வீட்டில் நிறைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் சலவை செய்ய அதிக அளவு துணிகள் இருப்பதோடு பலவகையான தேவைகளும் விருப்பங்களும் இருக்கும். உங்கள் மெஷின், குளிர்ந்த நீரில் துவைப்பது, சூடான நீரில் துவைப்பது, மென்மையான சுழற்சியில் துவைப்பது, கம்பளி துணியை துவைப்பது, போன்ற பலவகையான சிறப்பம்சங்களை கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

4) மெஷின் வைக்க உங்களிடம் போதுமான இடம் இருக்கிறதா என்பதனை மனதில் கொள்ளவும்

வாஷிங்மெஷினை வாங்குவதற்கு முன் உங்கள் வீட்டில் அதற்கான இடம் இருக்கிறதா என்பதனை உறுதிபடுத்திக் கொள்ளவும். உங்களிடம் ஒரு சிறிய கச்சிதமான இடம் இருந்தால் நீங்கள் ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் மெஷினை தேர்வு செய்யலாம். ஏனென்றால் இந்த வகையானது துவைப்பதற்கும், உலர்த்துவதற்கும் பொதுவான ஒரு ட்ரம்மை கொண்டுள்ளது, அதனால் இதற்கு குறைந்த இடம் இருந்தாலே போதும்.

நீங்கள் உங்களுக்கான ஒரு சிறந்த வாஷிங்மெஷினை தேர்ந்தெடுத்து விட்டால், அடுத்தது அதற்கான ஒரு சிறந்த சோப்பு தூளை தேர்வு செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் தேர்வு செய்யும் சோப்புத்தூள், உங்கள் மெஷினையும் துணிகளையும் நல்ல நிலைமையில் வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விடை பயன்படுத்தலாம். இது வாஷிங் மெஷின்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாகும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது