உங்கள் வாஷிங் மெஷினில் ஐந்து பொருள்களை போடக்கூடாது.

கறைபடிந்த உடைகளை உங்கள் மெஷினில் துவைப்பது சுலபம். ஆனால் சில பொருள்களை நீங்கள் மெஷினில் துவைக்கக் கூடாது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Five Items You Should Avoid Putting Into Your Washing Machine
விளம்பரம்
Surf Excel Matic Liquid

உங்கள் வாஷிங் மெஷினில் துணிகளை சுலபமாக துவைக்க முடியும். ஒரு பேட்ச் துணிகளை மெஷினில் போடவும், பிறகு கொஞ்சம் லிக்விட் டிடெர்ஜென்ட்டை விட்டு, பட்டனை அழுத்தவும். உங்கள் வீட்டின் பெரும்பாலன துணிகளை மெஷினில் துவைக்கலாம். ஆனால் சில பொருள்கள் உங்கள் மெஷினில் சேதமாகக்கூடும். 

உங்கள் மெஷினில் குறிப்பாக ஐந்து பொருள்களை போடாமல் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். 

1) மெமரி ஃபோம் உள்ள தலைகாணி

வாஷிங் மெஷினின் சுழற்சியால் மெமரி ஃபோம் தலையணை பலவீனமாகிவிடலாம். அதன் வடிவம் போய்விடலாம் அல்லது அது துண்டு துண்டாக கூட ஆகிவிடாலாம். வாஷ் கேர் லேபிளில் சொல்லி இருந்தாலே தவிர, மெமரி ஃபோம் தலையணையை மெஷினில் துவைக்கக்கூடாது. 

2) வளர்ப்புப் பிராணிகளின் முடிகள் உள்ள துணிகள்.

வளர்ப்பு பிராணிகளின் முடிகள் துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அவற்றை மெஷினில் துவைப்பதால் அது மெஷின் ட்ரம்மின் ஒரங்களில் படியும். அந்த முடிகள் ட்ரெயின் பைப்பையும் அடைத்துக் கொள்ளலாம். இதனால்  காலப்போக்கில் அவற்றின் ஆற்றல் குறைந்துவிடும். எப்போதும் உங்கள் உடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வளர்ப்பு பிராணிகளின் முடியை நீக்கி பிறகு அந்த துணிகளை மெஷினில் போடவும். 

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) பித்தளை

பிராவில் உள்ள ஹூக்குகள்  துணிகளை துவைக்கும்போது மற்ற துணிகளை கிழிக்கலாம். அல்லது மெஷினின் சிலிண்டரில் மாட்டிக் கொள்ளலாம். சில சமையங்களில் பிராவின் எலாஸ்டிக்குகள் மெஷினில் துவைக்கும்போது சேதமாகிவிடலாம். எனவே இம்மாதிரியான உள்ளாடைகளை ஒரு டெலிகேட் லாண்டரி பையில் போட்டு துவைக்கவும். அது போன்ற துணிகளை நீங்கள் தனியாக கையாலும் துவைக்கலாம். 

4) லேஸ் மற்றும் எம்பிராயிடரி உள்ள துணிகள்

எப்போதும் இந்த விதமான உடைகளை கையால் துவையுங்கள். இவற்றை மெஷினில் துவைப்பதால் அவை கிழிந்து போய்விடக்கூடும். அவை சேதமாகி வெளியில் வரும். கையால் துவைக்கும்போதுகூட குளிர்ந்த நீரால் துவைக்கவும். அப்போதுதான் அவை ஒரிஜினல் வடிவத்துடனும் தோற்றத்துடனும் இருக்கும். 

5) எரியக்கூடிய கறைகள் கொண்ட துணிகள்.

எரியக்கூடிய கறைகள் கொண்ட துணிகளை மெஷினில் போடுவதற்கு முன்பு ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தியுங்கள். எரியக்கூடிய பொருள்களான சமையல் எண்ணெய், ஆல்கஹால், கேஸோலைன் போன்ற கறைகள் தீயை ஏற்படுத்தக்கூடும். எப்போதும் அந்த கறைகளை நீக்கிய பிறகு அவற்றை மெஷினில் துவைக்க வேண்டும். 

அடுத்த முறை நீங்கள் வாஷிங் மெஷினில் துணிகளை போடுவதற்கு முன்பு  மேற்கண்டவற்றை மற்ற துணிகளுடன் சேர்த்து மெஷினில் போடாதீர்கள். இப்படி உங்கள் துணிகளை போடாமல் இருப்பதால் மெஷின் பாதுகாப்பாக இருக்கும். மேலும் வளர்ப்பு பிராணிகளின் முடியை நீக்குவதற்கு லின்ட் ரோலரை துணிகளில் உருட்டவும்.  பிறகு அவற்றை மெஷினில் துவைக்கவும். 

முக்கியமான ஸ்டெப்:

உங்கள் துணிகளை மெஷினில் துவைப்பதற்கு முன்பு ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் போன்ற டிடெர்ஜென்ட்டை பயன்படுத்தவும். இது லிக்விடாக இருப்பதால் தண்ணீரில் முழுமையாக கரைகிறது. எந்த கசடுகளையும் விடுவதில்லை.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது