
இன்று கடைகளில் எத்தனையோ வகையான வாஷிங் மெஷின்கள் கிடைகின்றன. எனவே வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக தேர்வுகள் கிடைக்கின்றன. அதனால் அனைத்து தேர்வுகளையும் ஆய்வு செய்து உங்கள் தேவைக்கு மிகவும் ஏற்ற ஒன்றை தேர்வு செய்யலாம். கவலை வேண்டாம், அவ்வாறு தேர்வு செய்வது அவ்வளவு குழப்பமானது அல்ல.
நீங்கள் வாங்க மு டிவு செய்யும் முன்பு கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டிய ஒரு சில விஷயங்கள் இதோ.
1) கொள்ளவு
இரண்டு நபர்கள் இருக்கும் குடும்பத்திற்கு 5 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங் மெஷின் மிகவும் ஏற்றது. ஆனால் 4 முதல் 7 பேர் உள்ள குடும்பத்திற்கு 7-8 கிலோ வாஷிங் மெஷின் மிகச் சிறப்பானதாக இருக்கும். கூட்டுக் குடும்பம் என்றால் 9 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங் மெஷின் மிகவும் சிறந்தது.
2) ஆட்டோமேட்டிக் அல்லது செமி ஆட்டோமேட்டிக்
நீங்கள் வேலைக்கு போகிறீர்கள் என்றால் ஆட்டோமேட்டிக் மெஷினை வாங்குங்கள். அது விரைவானது மற்றும் சௌகரியமானது. ஆனால் அதே நேரம் விலையும் அதிகம். ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் ஒரு பட்டனைத் தட்டினாலே எல்லா வேலையையும் அது செய்துவிடும் ஆனால் செமி ஆட்டோமேட்டிக்கில் நீங்கள் சில வேலைகளை செய்ய வேண்டும். உதாரணமாக துவ ைக்கும் டப்பிலிருக்கும் துணிகளை அலசி உலர்த்தும் டப்பிற்கு மாற்ற வேண்டும்.

3) டாப் லோடு அல்லது ஃபிரன்ட் லோடு
டாப் லோடிங் மெஷின்கள் விலை குறைந்தவை மற்றும் பயன்படுத்த சுலபமானவை. ஆனால் அவை துணி துவைப்பதற்கு அதிக காலம் எடுக்கும். சத்தமும் அதிகமாக இருக்கும். ஃபிரன்ட் லோடு மெஷின்கள் விரைவானவை, சௌகரியமானவை. பெரிதானவை ஆனால் விலை அதிகமானவை.
4) கூடுதல் அம்சங்கள்
ஆட்டோமேட்டிக் டிஸ்பென்சர்
ஆட்டோமேட்டிக் டிஸ்பென்சரின் அனுகூலம் என்னவென்றால் அவை சலவைப்பொருள்களை அதாவது ப்ளீச், ஃபேப்ரிக் கண்டிஷனர் அல்லது டிடெர்ஜென்ட் போன்றவற்றை துணி துவைக்கும்போது சரியான நேரத்தில் வெளியிடும்.
கூடுதலாக அலசுதல்
சோப்புக் கசடுகளால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் ஏற்றது. ஏனென்றால் சாதாரண மெஷின்கள் சோப்புக் க சடுகளை விட்டுச் செல்லும். இந்த அம்சம் இருந்தால் அது துணிகளை கூடுதலாக அலசி எஞ்சி இருக்கும் சோப்புக் கசடுகளை நீக்கிவிடும்.
நன்கு ஆராய்ந்து யோசித்து உங்களுக்கு ஏற்றதை வாங்குங்கள்