உங்கள் மர ஃபர்னிச்சரில் ஏற்பட்டுள்ள ஸ்க்ராச்களால் கவலையா? இந்த வழிகளைப் பயன்படுத்தி பாருங்கள்!

உங்கள் மரத்தால் ஆன தரைப்பகுதி மற்றும் ஃபர்னிச்சரிலிருந்து அழகை கெடுக்கும் ஸ்க்ராச்களை அகற்ற இதோ சில விவேகமான மற்றும் எளிய வழிகள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Scratches on Your Wooden Furniture Worrying You? Try These Hacks!
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

வீட்டை அலங்கரிக்க ஒரு  அழகான ஐடியா பிரமாதமான ஃபினிஷ் உடன் மரத்தால் ஆன தரைப்பகுதி அல்லது ஃபர்னிச்சர்கள்தான். எனினும் இந்த அருமையான மரப்பகுதி ஃபினிஷை பராமரிப்பது ஒரு கடினமான வேலையாக இருக்கலாம். கவலைப்படாதீர்கள்! இதற்காக எங்களிடம் எளிய தீர்வுகள் உள்ளன.உங்கள் மரப்பரப்புகளில் ஸ்க்ராச்கள் ஏற்படாமல் தடுக்க இந்த எளிய மற்றும் ஆற்றல்மிக்க டிஐஒய் வழிகளைப் பயன்படுத்துங்கள். 

மரத்தால் ஆன  தரைப்பகுதி அல்லது ஃபர்னிச்சரில் ஒரு ஸ்க்ராச்சை பார்க்கும்போது உடனடியாக அதை அகற்ற செயல்படுங்கள். ஒரு ஸ்க்ராச் சிறிதாக இருக்கும்போது நீங்கள் உடனே செயல்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாகி விடாமல் தடுத்து விடலாம்.

வாக்ஸ் கிரேயான் பயன்படுத்துங்கள்

  • மரத்தால் ஆன தரைப்பகுதி அல்லது ஃபர்னிச்சரில் அதன் ஷேடுக்கு ஏற்ப மேட்ச் ஆகக்கூடிய ஒரு கிரேயான் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏற்பட்டுள்ள ஸ்க்ராட்ச் மறையும் வரை இதை ஸ்க்ராச் மீது தொடர்ந்து தேயுங்கள்.

  • நீங்கள் ஸ்க்ராட்ச்-ஐ முழுமையாக மறைத்த பின்பு, 5 நிமிடங்களுக்கு ப்ளோ-ட்ரை செய்யுங்கள். ஃபர்னிச்சரின் மீது கிரேயான் இறுகும்படி விட்டு விட வேண்டும். இதனால் உங்களின் மரத்தால் ஆன தரைப்பகுதி அல்லது ஃபர்னிச்சர் குறையேதுமின்றி புத்தம் புதிது போல் தோன்றும்! 

வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில் பயன்படுத்துங்கள்

விளம்பரம்

Domex Disinfectant Floor Cleaner
  • ஒரு பாத்திரத்தில் 1/2 கப் வினிகர் மற்றும் 1/2 கப் ஆலிவ் ஆயில் கலந்து  நன்கு குலுக்கி உங்களின் டிஐஒய் கரைசலை தயாரியுங்கள்.

  • இதை ஒரு காட்டன் துணியால் ஸ்க்ராச் ஏற்பட்டுள்ள பரப்பு மீது தேயுங்கள். சுமார் 15 நிமிடங்கள் இவ்வாறு தேய்த்த பின், அசல் நிறம் மெதுவாக மெதுவாக மீண்டும் தோன்றுவதை நீங்கள் பார்க்கலாம். 

  • இதை ஒரு காட்டன் துணியால் ஸ்க்ராச் ஏற்பட்டுள்ள பரப்பு மீது தேயுங்கள். சுமார் 15 நிமிடங்கள் இவ்வாறு தேய்த்த பின், அசல் நிறம் மெதுவாக மெதுவாக மீண்டும் தோன்றுவதை நீங்கள் பார்க்கலாம்.

நட்களைப் பயன்படுத்துங்கள்

  • ஒரு சில வால்நட்கள் இந்த ஸ்க்ராச்களை போக்க  உதவுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நிச்சயமாக போக்கி விடலாம்! மரத்தால் ஆன தரைப் பகுதி அல்லது ஃப்ர்னிச்சரில் சிறிய ஸ்க்ராச்களை பார்க்கும் போது அந்த ஸ்க்ராச்கள் மீது முழுவதும் ஒரு சில தோல் மூடிய வால்நட்களால் தேயுங்கள் போதும். வால் நட்களில் உள்ள ஆயில்  இந்த சிறு ஸ்க்ராச்களைப் போக்க உதவும்.

எனவே மரத்தால் ஆன தரைப் பகுதி அல்லது ஃப்ர்னிச்சரில் அடுத்த முறை இவ்வாறு ஸ்கராச்கள் ஏற்படும் போது  அவற்றின் அழகை தக்க வைக்கவும் மீண்டும் அவை அழகாக தோன்ற வைக்கவும் இந்த குறிப்புகளைப் பயன்படுத்துங்கள். 

இது சுலபமானது மற்றும்  அதிக நேரம் ஆகாது. நீங்களே இதை செய்து பாருங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது