இந்த ஆண்டு தீபாவளிக்கு உங்கள் வீட்டுச் சுவர்களையும் தரைகளையும் எப்படி தயாராக்குவது!

உங்கள் சுவர்கள் மிகவும் நிறம் மங்குகிறதா? இந்த தீபாவளியில் அவற்றை உடனடியாக சுத்தம் செய்யுங்கள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Get the Walls and Floors in Your Home Ready for Deepavali This Year!
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

தீபாவளி என்றாலே, விளக்கு ஏற்றதல், வண்ணக்கோலங்கள், இனிப்புகள், புத்தா டைகள் போன்வற்றுடன் கொண்டாடுவதுதான் நினைவிற்கு வரும். பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சுத்தம் செய்து தயாராக்க வேண்டும். உங்கள் சுவர்கள் மற்றும் தரைகள் இதில் முக்கியம். ஏனென்றால் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அதைத்தான் முதலில் கவனிப்பார்கள். 

இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டு சுவர்கள் மற்றும் தரைகள் பளபளக்க இதோ சில பயனுள்ள குறிப்புகள்

உங்கள் சுவர்களை துடைக்கும்போது, தரையில் டவல்களை வைக்கவும். அதன் மூலம் சொட்டும் தண்ணீரை அது ஈர்த்துக்கொள்ளும்.

1) சுவர்கள்

பெயிண்ட் செய்யப்பட்ட சுவர்கள்.

மேட், க்ளோஸ் மற்றும் செமி க்ளோஸ் போன்ற வெவ்வேறு விதமான பெயிண்ட் ஃபினிஷ் உள்ள சுவர்களை சுத்தம் செய்வதற்காக பின் வரும் முறைகளை நீங்கள் பயன்படுத்தலாம். 

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான தண்ணீரில் 2 டீஸ்பூன் டிஷ் வாஷ் லிக்விடை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். ஒரு சுத்தமான ஸ்பாஞ்ஜை எடுத்து அதை அந்த கரைசலில் நனைத்து சுவர்களை சுத்தம் செய்யவும்.  விடாப்பிடியானகறைகளை அல்லது அடையாளங்களை நீக்குவதற்கு அதே கரைசலில் 1 டீஸ்பூன் வினிகரை விட்டு துடைக்கவும்.

சுவர்கள் முழுவதும் இந்தக் கரைசலை பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சிறு பகுதியில் இதை பயன்படுத்தி அது பொருந்துமா என்று பரிசோதிக்கவும். 

ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான தண்ணீரில் 2 டீஸ்பூன் டிஷ் வாஷ் லிக்விடை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். ஒரு சுத்தமான ஸ்பாஞ்ஜை எடுத்து அதை அந்த கரைசலில் நனைத்து சுவர்களை சுத்தம் செய்யவும்.  விடாப்பிடியானகறைகளை அல்லது அடையாளங்களை நீக்குவதற்கு அதே கரைசலில் 1 டீஸ்பூன் வினிகரை விட்டு துடைக்கவும்.

சுவர்கள் முழுவதும் இந்தக் கரைசலை பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சிறு பகுதியில் இதை பயன்படுத்தி அது பொருந்துமா என்று பரிசோதிக்கவும்.

வால் பேப்பர் கொண்ட மேற்புறங்கள்

வால் பேப்பர்கள் நாசூக்கானவை. இவற்றை கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். ஒரு மென்மையான துடைப்பானால் வால் பேப்பரில் இருக்கும் தூசுகளை துடைத்து நீக்கவும். ஒரு டீஸ் பூன் டிஷ் வாஷ் லிக்விடை 2 கப் தண்ணீரில் கலக்கவும். ஒரு நைலான் ஸ்பாஞ்ஜை இந்த கரைசலில் நனைத்து உங்கள் வால் பேப்பரை சுத்தம் செய்யவும். எல்லா பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டும். இதை ஒரு போதும் தேய்க்கக்கூடாது.  சுத்தம் செய்ய உடனேயே ஒரு உலர்ந்த துணியால் ஒத்தி எடுத்து உலர்த்தவும். 

2) தரை

உங்கள் தரையை சுத்தம் செய்யும் முன்பு அதை நன்கு பெருக்கி தூசுகளை  நீக்கவும்.

மார்பிள் மற்றும் கிரனைட் தரை

மார்பிள் தரைக்கு 2 டீஸ்பூன் டிஷ்வாஷ் லிக்விட்டை ஒரு முழு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் விட்டு அதன் மூலம் தரையை துடைக்கவும். பிறகு சுத்தமான தண்ணீரால் துடைத்து சோப்பை நீக்கவும். கிரைனைட் தரைக்கு 1 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் டிஷ்வாஷ் லிவிட்டை அரை வாளி தண்ணீரில் விட்டு கரைக்கவும். பிறகு உங்கள் கிரனைட் தரையில் இந்த கரைசலால் துடைக்கும்.  இன்னொரு வாளி சுத்தமான தண்ணீரை எடுத்து மீண்டும் அதால் துடைத்து காற்றில் உலர விடவும்.  

செராமிக் ஃபுளோரிங்

2 வகையான செராமிக் டைல்கள் இருக்கின்றன -கிளேஸ்டு மற்றும் அன்கிளேஸ்டு.  அன்கிளேஸ்டு செராமிக் டைல்களை சுத்தம் செய்ய 1/2 கப் வினிகர் மற்றும் 1 கப் டிஷ்வாஷ் லிக்விடை ஒரு வாளி தண்ணீரில் கரைத்து உங்கள் தரையை துடைக்கவும்  பிறகு சுத்தமான தண்ணீரால் துடைத்து அதை காற்றில் உலர விடவும்.  சுத்தம் செய்வதற்கு வினிகர் கரைசலை பயன்படுத்தும்போது கையுறை அணிய மறக்காதீர்கள். 

அன்கிளேஸ்டு செராமிக் தரைகளை சுத்தம் செய்ய மேலே உள்ள படி கரைசலை வினிகர் சேர்க்காமல் பயன்படுத்தவும். 

மரத் தரைகள்

ஒரு கிண்ணத்திலுள்ள வெதுவெதுப்பான தண்ணீரில் 3 டீ பேக்குகளைப் போடவும். அந்தக் கரைசலில் சுத்தமான துணியை நனைத்து தரையை மென்மையாக சுத்தம் செய்யவும். துணி தண்ணீரில் ஊறி இருக்கக்கூடாது. அது ஈரமாக இருந்தாலே போதுமானது. அதிக தண்ணீர் உங்கள் மரத்தரைகளை சேதமாக்கிவிடலாம். 

இந்த முறைகளைப் பயன்படுத்தி இந்த தீபாவளியில் உங்கள் வீட்டு சுவர்களையும் தரைகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது