உங்களது அழகான மர டேபிளில் சூடான கறிக்குழம்பு கொட்டிவிட்டதா? கவலை வேண்டாம், விரைவாக சுத்தம் செய்ய இதோ தீர்வு!

கறைகளை பொறுத்தவரை 'விரைவாகச் செயல்படுவதே' நல்ல பலன் தரும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

hot-curry-stains-on-your-beautiful-wooden-table-relax-and-check-out-this-quick-fix
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

மர டேபிளில் சூடான கறிக்குழம்பு கொட்டுவதால், தீய்ந்துவிட்டதே என்ற கவலை வேண்டாம். அந்த நிறமாற்றம் மற்றும் துர்நாற்றத்தை உடனே நீங்கள் சரிசெய்ய முடியும். அதற்கான தீர்வு இதோ பின்வருமாறு:

கறை பட்ட இடத்தில் வுட் பாலிஷ் தேய்த்துவிடுங்கள், அதற்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

ஸ்டெப் 1:

கட்டுப்படுத்துங்கள். முதலில் செய்ய வேண்டிய விசயம், கறிக்குழம்பு கொட்டியதும், பேப்பர் டவல் பயன்படுத்தி, டேபிளில் உள்ள ஈரத்தை உறிஞ்சுங்கள்.

ஸ்டெப் 2:

உங்களுக்கான தீர்வை தயார் செய்யுங்கள். ஒரு பக்கெட்டில் 2 கப் வெந்நீரை ஊற்றுங்கள். அதில், நான்கில் ஒரு பகுதி அளவுக்கு வினிகரும், ஒரு தேக்கரண்டி விம் டிஸ்வாஷ் லிக்யூடையும் கலந்தால், கறையை அகற்றும் கலவை ரெடி.

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

ஸ்டெப் 3:

துடையுங்கள். ஒரு ஸ்பான்ஞ் எடுத்து, அந்த கலவையில் நனைத்து எடுங்கள். பஞ்சை நன்கு, ஈரம் பிழிந்துவிட்டு, கறையை துடையுங்கள். கறை மறையும் வரை, இதை தொடர்ந்து செய்யுங்கள்.

ஸ்டெப் 4:

உலர விடுங்கள். இறுதியாக ஒரு சுத்தமான துணியை நீரில் நனைத்து, பின்னர் கறை இருந்த இடத்தில் நன்கு துடையுங்கள். மர டேபிளை உலர விடுங்கள்.

இது மிக எளிதான அதேசமயம் புத்திசாலித்தனமான செயலாகும். முயற்சித்து பாருங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது