
பொதுவாக இந்தியாவில் மரப் பர்னீச்சர்கள் தான் அதிகம் செய்யப்படுகின்றன. ஏனெனில் அவை, பளிச்சென்ற தோற்றத்துடன் நீடித்துழைக்கும். மர ஃபர்னீச்சரில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் பராமரிப்பது மிகவும் எளிது, எனவே, இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுங்கள். உங்கள் மரப் ஃபர்னீச்சர் எந்த அளவு அழகாக தோன்றுகிறது என தீபாவளிக்கு வரும் விருந்தினரை வியப்படையச் செய்யுங்கள்!
உங்கள் மர ஃபர்னீச்சர் மீது தண்ணீர் தேங்க விடாதீர்கள். உடனடியாக அதை துடைத்து விடுங்கள். இதனால் உங் கள் ஃபர்னீச்சரில் ஒரு சில கறைகளே இருக்கும் மற்றும் நீடித்துழைக்கும்.
1) தூசி மற்றும் வாக்வம்
நீங்கள் முதலில் உங்கள் ஃபர்னீச்சரில் படிந்துள்ள ஏதேனும் அழுக்குகள் மற்றும் தூசிகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நீங்கள் ஒரு வாக்வம் கிளீனர் பயன்படுத்தலாம் அல்லது ஒரு டஸ்டர் மூலம் அதை துடைத்து விடலாம். அடுத்து 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 2 தேக்கரண்டி வினிகர் கலந்து கொள்ளுங்கள். நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு துணியை முக்குங்கள். பின்பு அந்த துணியால் மர ஃபர்னீச்சரை நன்கு துடைத்து விடுங்கள். அதன் பின் ஒரு உலர்ந்த துணியால் ஃபர்னீச்சர் மீது படிந்திருக்கும் கூடுதல் தண்ணீரை துடைத்து அகற்றுங்கள். இதனால் அதன் மீது தண்ணீர் அடையாளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் அகற்ற முடியும்.
2) ஸ்க்ராச்களை நிரப்புங்கள்
நீங்கள் உங்கள் மர ஃபர்னீச்சரை சுத்தம் செய்த பின்பு அதில் ஏதாவது ஸ்க்ராச்கள் அல்லது கீறல்கள் இருந்தால் அதை நிரப்ப வேண்டும். இதற்காக வாக்ஸ் கிரேயான் பயன்படுத்துங்கள். உங்கள் ஃபர்னீச்சர் நிறத்திற்கு ஏற்ற ஒன்றை எடுத்து ஏதேனும் அடையாளங்கள் அல்லது ஸ்க்ராச்கள் மீது தேய்த்து விடுங்கள். இதனால் உங்கள் ஃபர்னீச்சரின் மீது கிரேயான் உறுதியாக படிந்து ஃபர்னீச்சர் புத்தம் புதிது போல் தோன்றும். உங்கள் ஃபர்னீச்சரின் மீது ஒரு ஓடு நீக்கப்பட்ட வால்நட் மூலம் தேய்ப்பதும் கூட ஸ்க்ராச்களை நிரப்ப உதவும்.

3) கரையான்களை விரட்டி விடுங்கள்
வேப்பஞ்சாறு 2 கப்கள் மற்றும் தண்ணீர் 1 கப் நன்கு கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றுங்கள். கரையான்கள் உள்ள பகுதியில் இதை ஸ்பிரே செய்யுங்கள்.
4) உங்கள் ஃபர்னீச்சரை பளிச்சென்று தோன்ற வையுங்கள்
பெரும்பாலும் மர ஃபர்னீச்சர்களில் தூசி படிந்து விடும். அது மட்டுமல்ல, சிறிது காலத்திற்கு பின்பு தேய்ந்து போனது போல் தோன்றும். எனவே மீண்டும் பளிச்சென்ற தோற்றத்தை பெற அதன் மீது வாக்ஸ் தேயுங்கள். உங்களிடம் வாக்ஸ் இல்லாவிட்டால் வாழைப்பழ தோலால் அதன் மீது தேய்க்கலாம் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு துடைக்கலாம். பின்பு ஒரு உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள்.
இந்த குறிப்புகள்படி செய்தால் உங்கள் மர ஃபர்னீச்சர் உங்கள் தீபாவளி பார்ட்டிக்காக வியப்பூட்டும் அழகான தோற்றத்தில் பளிச்சிடும்.