தீபங்களின் திருவிழாவான தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ உங்களுடைய விளக்குகள், அலங்கார விளக்குகளை சுத்தம் செய்தல்.

இதோ, தீபாவளி பண்டிகையை குறிப்பிடத்தக்க வகையில் கொண்டாடி மகிழ்ந்திட, மற்றும் ஒளிமயமான வீட்டிற்குள் செல்வச் செழிப்பை வரவேற்றிட உங்களுடைய விளக்குகள், அலங்கார விளக்குகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Clean Your Lamps and Chandeliers to Usher in Diwali, Festival of Lights!
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. வண்ண விளக்குகள் ஏற்றிவைத்து தீபாவளியை வரவேற்கத் தயாராகுங்கள். இதற்கு உங்கள் வீட்டில் உள்ள விளக்குகளையும் அலங்கார விளக்குகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும். நாங்கள் விளக்குகள், அலங்கார விளக்குகள் பளிச்சென்று பிரகாசமாய் ஒளிவீசச் செய்திட சில குறிப்புகளை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம்.

1) ஃபேப்ரிக் லாம்ப்ஷேடுகளை சுத்தம் செய்தல்

விளக்கை சுவிட்சுஆஃப் செய்துவிட்டு பல்பு நன்றாக சூடு ஆறிய பிறகு லாம்ப்ஷேடை நீக்கவும். உறுதியான பொருளாக இருந்தால், ஒரு மென்மையான பிரஷ் கொண்டு தூசு அழுக்குகளை நீக்கவும். பலவீனமான ஃபேப்ரிக் பொருளாக இருந்தால், ஒரு லின்ட் ரோலர் அல்லது பெயின்ட் பிரஷ் கொண்டு தூசு அழுக்குகளை நீக்கவும். மடிப்புகள் கொண்ட ஃபேப்ரிக் ஷேடுகளுக்கு பெயின்ட் பிரஷ் கொண்டு தூசு அழுக்குகளை நீக்குவது செய்யும் வேலையை செம்மையாக செய்ய உதவும். பின்னர் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 2-3 சொட்டுகள் லிக்விட் டிடெர்ஜென்ட்ஸ் சேர்த்து ஒரு கரைசலை உருவாக்கிக் கொள்ளவும். லாம்ப்ஷேடை அதில் முக்கி, ஒரு மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும். நன்றாக அலசிவிட்டு உலரவிடவும். 

2) ஃபைபர்கிளாஸ் மற்றும் கண்ணாடி லாம்ப்ஷேடுகளை சுத்தம் செய்தல்

ஷேடை நீக்கவும், ஒரு ஈரமான மைக்ரோஃபைபர் துணி கொண்டு உள்பகுதியில் உள்ள தூசுகளை நீக்கவும். லாம்ப்ஷேடு ஒரு கண்ணாடியாக இருந்தால், அதை எடுக்கும்போது மிக்க கவனத்துடன் செய்யவேண்டும். ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 2-3 சொட்டுகள் லிக்விட் சோப்பு சேர்த்து ஒரு கரைசலை உருவாக்கிக் கொள்ளவும். ஒரு சுத்தமான துணியை இந்த சோப்பு கரைசலில் முக்கி எடுத்து லாம்ப்ஷேடின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தை துடைத்து சுத்தம் செய்யவும். பின்னர் தண்ணீரில் அலசி உலர வைக்கவும். இறுதியாக ஒரு சுத்தமான உலர்ந்த துணி கொண்டு நன்றாக துடைக்கவும். கிரீஸ் கறைகள் படிந்த கண்ணாடி லாம்ப்ஷேடாக இருக்கும்பட்சம், குறிப்பாக நிலையாக பொருத்தப்பட்டு நீக்க முடியாததாக இருந்தால் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 2 மேசைக்கரண்டி வினிகர் சேர்க்கவும். இந்த கலவையில் ஒரு துணியை நனைத்துக்கொண்டு துடைத்து சுத்தம் செய்யவும். இறுதியாக ஒரு சுத்தமான உலர்ந்த துணி கொண்டு நன்றாக துடைக்கவும். பின்னர் உலரவிடவும். 

விளம்பரம்

Domex Disinfectant Floor Cleaner

3) அலங்கார விளக்குகளை சுத்தம் செய்தல்

பெரும்பாலான அலங்கார விளக்குகளை கீழே இறக்ககிக் கொள்ள முடியும். இருப்பினும் இத்தகைய விளக்குகளை சுத்தம் செய்வதற்கு உங்களுக்கு ஓர் ஏணி தேவைப்படலாம். சில அலங்கார விளக்குகள் பிரித்து திரும்ப பொருத்தும் வகையில் இருக்கலாம். அவ்வாறு கண்ணாடி அல்லது படிகங்களால் ஆன பாகங்களை, ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 2-3 சொட்டுகள் லிக்விட் சோப்பு சேர்த்து ஒரு கரைசலை உருவாக்கிக் கொண்டு, கைகளால் கழுவி சுத்தம் செய்யவும். பின்னர் நன்றாக அலசி ஒரு மென்மையான துணி கொண்டு துடைத்து உலர்த்தவும். பிரித்து சுத்தம் செய்ய இயலாதவற்றிற்காக, முதலில் பல்புகளை நீக்கிவிடவும், பின்னர் ஒரு சுத்தமான உலர்ந்த துணி கொண்டு நன்றாக துடைக்கவும். கறைகளைப் போக்க, ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 2-3 சொட்டுகள் லிக்விட் சோப்பு சேர்த்து ஒரு கரைசலை உருவாக்கிக் கொள்ளவும். இந்த கலவையில் ஒரு துணியை நனைத்துக்கொண்டு துடைத்து சுத்தம் செய்யவும். இறுதியாக ஒரு சுத்தமான உலர்ந்த துணி கொண்டு நன்றாக துடைக்கவும். பின்னர் உலரவிடவும்.

அவ்வளவுதான்! விளக்குகள் சுத்தமாகிவிட்டன. ஒளி மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது