
பீன் பைகள் ஒரு நல்ல அலங்கார பொருள், இது நம் வாழும் இடத்திற்கு அழகை சேர்ப்பது மட்டுமல்லாமல், நாம் உட்கார, வசதியாகவும் இருக்கிறது. நாம் மிகவும் சோர்வடையும் போது பீன் பையில் உட்கார்ந்து நேரம் கழிக்க விரும்புவோம். பீன் பைகள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். அவற்றை எளிதாக சுத்தம் செய்ய பின்வரும் குறிப்புகளை பின்பற்றவும்.
ரெக்ஸின், தோல்:
படிநிலை 1: சோப்பு கரைசல்
ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான நீரை எடுத்து, ஒரு கப் லேசான திரவ சோப்புடன் கலக்கவும். சாதாரண தெளிப்பு பாட்டிலில் கரைசலை ஊற்றவும். நன்றாக கலக்கவும்.
படிநிலை 2: தெளிக்கவும்
பீன் பையில் கரைசலை சமமாக தெளித்து 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

படிநிலை 3: சுத்தமாக துடைக்கவும்
இப்போது அதை சுத்தமான ஈரமான துணியால் துடைக்கவும். சோப்பு மற்றும் தூசி முழுமையாக அகற்றப்படும் வரை இப்படி செய்யவும்.
படிநிலை 4: உலர்த்தவும்
உலர்ந்த பருத்தி துணியை எடுத்து, ஈரமான பீன் பையை நன்கு துடைத்து, உலர வைக்க வும். பின்னர் அதை காற்றில் நன்றாக உலர வைக்கவும்.
ஃபேப்ரிக்:
படிநிலை 5: வாஷ் செய்யவும்
துணி பீன் பைகள் இருந்தால், வெளிப்புற அடுக்கு பிரிக்கக்கூடியதாக இருந்தால், அதை அகற்றி, மென்மையான சுழற்சியின் கீழ் லேசான சோப்பு பயன்படுத்தி சலவை இயந்திரத்தில் வாஷ் செய்யவும்.
படிநிலை 6: காற்றில் உலர்த்தவும்
வாஷ் செய்த பின், துணியை இயற்கையாக உலர வைக்கவும்.
அவ்வளவுதான்! நீங்கள் வசதியாக அமர்வதற்கு உங்கள் பீன் பை தயாராக உள்ளது!