உங்கள் வீட்டிலுள்ள முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்று கவலைப்படுகிறீர்களா? இந்த எளிய தடுப்புக் குறிப்புகளை முயற்ச்சிக்கவும்.

பெரும்பாலான இந்திய குடும்பங்களைப் போலவே, உங்களுடைய பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் உங்களுடன் இருந்தால், அவர்களின் உடல்நிலை பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். உங்கள் பெரியவர்களை கிருமிகளிலிருந்து பாதுகாக்க இந்த எளிய குறிப்புகளை செய்யவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்Buy Domex
Worried about Your Elders Catching Infection? Give These Simple Preventive Tips a Try

மூத்த குடிமக்களுக்கு, அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக இளைஞர்களை விட குறைவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். உங்கள் பெற்றோரையும் தாத்தா பாட்டியையும் பாதுகாக்க நீங்கள் விரும்பலாம், ஆனால் எப்படி செய்வது என்று யோசிக்ககலாம். கவலைப்பட வேண்டாம்! நோய்கள் மற்றும் கிருமிகள் அவர்களை  தொற்றாமல் தடுத்து  வயோதிக காலத்தில் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இந்த எளிய தடுப்பு முறைகளை செய்யவும். 

1) சுய சுகாதாரம்

நீங்களோ அல்லது குடும்பதின் மற்ற  உறுப்பினர்களோ உங்கள் பெரியவர்களுக்கு உதவுவதற்கு முன்பு உங்கள் கைகளை சரியாக கழுவுவது சிறந்தது. சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது லைஃப் பாய் வழங்கும் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடிசரைப் பயன்படுத்துவது அவசியம்.

இருமல் அல்லது தும்மும்போது, ​​உங்கள் வாயை , ஒரு டிஷ்யூ அல்லது உங்கள் முழங்கையால் ( அப்போது டிஷ்யூ கிடைக்கவில்லை என்றால்) மூடிக் கொள்ளவும்.  மருந்துகள், நடைபயிற்சி, உணவு போன்றவைகளுக்காக  பெரியவர்களுக்கு உதவுவதற்கு முன்பு பாயன்படுத்திய டிஷ்யூக்களை குப்பைத் தொட்டியில் போடவும். 

மேலும், இந்த அடிப்படை சுகாதாரப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்று  உங்கள் முதியவர்களுக்கு  நினைவூட்டுங்கள்.

வார்டு பாய்ஸ் அல்லது பணிப்பெண்கள் போன்ற உதவியாளர்களை நீங்கள் நியமித்திருந்தால் ,  அதிலும் குறிப்பாக பெரியவர்களுக்காக, அவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் இந்த சுகாதாரப் பழக்கங்களை அந்த உதவியாளர்கள் பின்பற்றுவதை உறுதிசெய்து கொள்ளவும். 

2) உங்கள் முதியவர் அறையின் மேற்பரப்புகள்

தும்மலுக்குப் பிறகு 3 அடி வரை கிருமிகள் பரவி, தேவையற்ற தொற்றுநோய்களைப் பரப்பலாம், வீட்டைச் சுற்றியுள்ள வெவ்வேறு பரப்புகளில் படியலாம். எனவே, உங்கள் முதியவர்களை பாதுகாப்பதற்கு  அவர்களின் அறையில் உள்ள அனைத்து மேற்பரப்புகளையும் தினமும் சுத்தம் செய்து கிருமி நீக்குவது ஒரு  சிறந்த வழி. அதாவது அவர்களின் பக்க மேஜை, சக்கர நாற்காலி, வாக்கர், கண்ணாடி, தொலைபேசி, புத்தகங்கள், மருந்து பெட்டி, ஆதரவு கைப்பிடிகள் போன்று அவர்கள் அடிக்கடி தொடக்கூடிய மேற்பரப்புகள். மேலும், சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், மேசைகள், குளியலைக்  கருவிகள், கழிப்பறை இருக்கைகள், தொலைபேசிகள், மடிக்கணினிகள் போன்றவை, குடும்பத்தில் உள்ள  மற்றவர்களாலும் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் அறைக்கு வெளியே அதிகமாக தொடக்கூடிய பொதுவான மேற்பரப்புகள், இவற்றை நன்கு சுத்தம் செய்து, கிருமிகளை நீக்க வேண்டும்.

இந்த மேற்பரப்புகளை நீங்கள் ஒரு வழக்கமான வீட்டு சோப்பு தூளையும் தண்ணீரையும் கலந்து சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பிறகு, சிறந்த சுகாதாரத்திற்காக அவற்றிலுள்ள  கிருமிகளை  நீக்கலாம். டொமெக்ஸ் ஃபுளோர் கிளீனர் போன்ற ப்ளீச் அடிப்படையிலான (சோடியம் ஹைபோகுளோரைட்) தயாரிப்பு கொண்ட பொருத்தமான கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள், இது கிருமிகளைக் கொல்லும். எப்போதும் முதலில் ஒரு சிறிய மறைவான பகுதியில் சோதிக்கவும், பின் அது ஏற்றதா என்று சரிபார்த்து மற்ற இடங்களில் உபயோக படுத்தவும்.

விளம்பரம்Buy Domex

3) சலவை

மேற்பரப்புகள் மட்டுமல்ல, துணிகளிலும் கூட கிருமிகள்  தங்கி இருக்கக்கூடும். உங்கள் முதியவர்களின் உடைகள் சுத்தமாகவும், கிருமி இல்லாமலும் இருப்பதை உறுதி செய்வதற்காக அவற்றை  துவைப்பதுதான் எளிய வழி. சோப்பினால் துணிகளை நன்கு துவைத்தால் அதுவே கிருமிகளை அகற்ற போதுமானது. விரிப்புகள் மற்றும் துணிகளுக்கு ரின் ஆலா போன்ற ப்ளீச்சை (சோடியம் ஹைபோகுளோரைட்) பயன்படுத்தலாம். ரின் ஆலா ஒரு சோடியம் ஹைபோகுளோரைட் ப்ளீச் என்பதால் வெள்ளை ஆடைகளில் மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. வண்ண ஆடைகளில் பயன்படுத்த வேண்டாம். ப்ளீச்சைக் கையாளும் போது கையுறைகளை அணிய நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் வாஷிங் மெஷினைப் பயன்படுத்தினால், சலவை அல்லது ஆடை பொருட்களின் லேபிள்களில் உள்ள அறிவுரைக்கு ஏற்ப,  தண்ணீரை சரியான வெப்ப நிலையில் வைத்து  துணிகளைக் துவைக்கவும். துணிகளை மடித்து  வைக்கும் முன் வெயிலில் உலர்த்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

4) சுய வீட்டுபயோகப் பொருட்கள்

குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனி தட்டுகள், க்ளாஸ், கப், கரண்டி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று  பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுடன் கிருமிகளைப் பகிரப்படுவதை தடுக்க உதவும்! மேலும், இந்த பாத்திரங்கள் மற்றும் க்ராக்கரி அனைத்தையும் ஒரு நல்ல டிஷ்வாஷ் சோப்பினால் நன்கு கழுவவும். மற்ற வீட்டு /சுய பயன்பாட்டுப் பொருட்களான பெரியவர்களின் பல்வகைகள், மூக்கு கண்ணாடிகள், மூக்கு கண்ணாடிகளின் கேஸ்கள், பிரார்த்தனை பைகள் போன்றவற்றிற்கு, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு கிருமிகளை நீக்குங்கள். 

உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை, தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். 

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது