உங்கள் பட்டு குர்த்தாவின் மீது குழந்தையின் பால் சிந்திவிட்டதா? இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி நீக்கவும்.

நீங்கள் குழந்தையுடன் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கும்போது குழந்தையின் பால் கறைகள் உங்கள் பட்டு உடைகளின்மீது படிந்துவிட்டதா? பின் வரும் இந்த எளிய மற்றும் ஆற்றல் மிக்க குறிப்புகளைப் பயன்படுத்தி அந்த கறைகளை நிமிடத்தில் போக்குங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Did your Baby Spill Milk on your Silk Kurta? Follow these Simple Steps
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

பட்டு என்பது நாசூக்கான துணி ஆகும். அதற்கு கூடுதல் பராமரிப்பும், கவனிப்பும் தேவைப்படுகிறது.  அதை சரியாக செய்தால் நீங்கள் உங்கள் பட்டுத் துணிகளை பல ஆண்டுகள் அணிய முடியும். நீங்கள் கொடுத்த பணத்திற்கு அதிக மதிப்பை பெற முடியும்.  ஏனென்றால் பட்டு குர்த்தா எப்போதும் அதன் பெருமையை இழப்பதில்லை. ஆனால் குழந்தையுடன் இருக்கும்போது பட்டுத் துணிகளின் மீது கவனமாக இருப்பது கடினம். 

குழந்தைக்கு பால் கொடுக்கும் தருணமும், பால் கொடுத்த பிறகு விளையாடி மகிழும் தருணமும் மிகச் சிறப்பானது ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்போது விலையுயர்ந்த பட்டு குர்த்தாவில் பால் சிந்தி கறை ஏற்படக்கூடும். பால் கறைகள் உங்கள் விலையுயர்ந்த துணியை பாழாக்கக்கூடும்.  வாங்கிய நாளன்று இருந்ததைப் போலவே உங்கள் பட்டுத் துணிகளை பராமரிப்பதற்கு கறை பட்ட உடனேயே அவற்றை நீக்குவது அவசியம்.  உங்கள் பட்டு குர்த்தாவில் பட்ட பால் கறையை நீக்குவது சுலபம்.  இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுலபமான குறிப்புகளை மட்டுமே பின்பற்றவும். 

விடாப்பிடிக் கறையை நீக்க வேண்டி இருந்தால், மிருதுவான பிரஷ் மூலம் கறை இருக்கும் இடத்தை பிரஷ் செய்யவும். எனினும், அழுத்தி தேய்ப்பதால் உங்கள் துணிகள் பாழாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 1: உங்கள் துணியை ஊற வைக்கவும்.

கறை பட்ட உடனேயே தாமதிக்காமல் உங்கள் பட்டு துணியை குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.  உங்கள் பட்டுத் துணிகளை வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது வெந்நீரிலோ ஊற வைக்காதீர்கள். ஏனென்றால் அது பால் கறையை இன்னும் கடினமாக்கி விடும். அதை நீக்குவது இன்னும் கஷ்டமாகிவிடும். 

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

ஸ்டெப் 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும்.

வாளியில் உள்ள குளிர்ந்த நீரில் 2 டேபிள்ஸ்பூன் மிதமான டிடெர்ஜென்ட் விடவும். இந்த கரைசலில் உங்கள் துணியை அரை மணி நேரத்திற்கு ஊற வைகக்கவும். பிறகு துணியில் கறைபட்ட பகுதியை உங்கள் விரல்களால் தேய்க்கவும். பாலின் துகள்கள் மெதுவாக தளர்வதை நீங்கள் பார்க்கலாம்.  பிறகு துணியை இன்னும் சில நிமிடங்கள் அந்த கரைசலில் ஊற வைக்கவும். 

ஸ்டெப் 3: கறைகளை கவனிக்கவும்.

பால் கறை இன்னும் நீங்கா விட்டால், ஸ்டெப் 2ஐ மீண்டும் செய்யவும். 

ஸ்டெப் 4: உங்கள் துணிகளை துவைக்கவும்.

உங்கள் பட்டுத் துணிகளை குழாயில் கொட்டும் தண்ணீரில் துவைத்தும் காற்றில் உலர வைக்கவும். 

நல்லது, உங்கள் வேலை முடிந்துவிடும்!  பால் கறை போய்விட்டது மற்றும் நீங்கள் மீண்டும் உங்கள் குழந்தையுடன் நேரம் செலவிட முடியும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது