
நீங்கள் உங்கள் குழந்தைக்காக மிகவும் ஆசையோடு ருசியான உணவுகளை பேக் செய்து கொடுக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் வீட்டுக்கு திரும்பும்போது அவர்களது ஸ்கூல் யூனிஃபார்மில் உணவு சிந்திய கறைகள் உடன் அவர்கள் திரும்பி வருகின்றனர். ஆனால் கவலைப்பட வேண்டாம், அந்த கறைகளைப் போக்குவது சுலபமானது.
உங்கள் குழந்தையின் ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்து விடாப்பிடியான உணவு கறைகளை சுத்தம் செய்ய இதோ ஒரு சுலபமான மற்றும் ஆற்றல் மிக்க வழி.
ஸ்டெப் 1
உணவு சிந்திய ஆடையில் கறை ஏற்பட்ட பகுதியை குழாயில் இருந்து விழும் குளிர்ச்சியான தண்ணீரின் கீழ் பிடியுங்கள். இதனால் நீங்கள் இயன்ற வரை கறையை அகற்றி விடலாம். இது நீங்கள் சுத்தப்படுத்தும் முறையை சுலபமாக்குகிறது.
ஸ்டெப் 2
உணவு சிந்திய ஆடையை ஃப்ளாட்டான ஒரு பரப்பில் வைத்து அதன் மீது பேக்கிங் சோடாவை நன்கு தூவுங்கள். இப்போது கறைகள் மீது முழுவதும் தூவி விட்டீர்களா என்று பாருங்கள். தோராயமாக 10 நிமிடங்கள் பேக்கிங் சோடாவை அப்படியே விட்டு விடுங்கள்.

ஸ்டெப் 3
இதன் பின்பு ஒரு பழைய டூத் பிரஷை எடுத்து, கறையை இதமாக தேய்த்து துடையுங்கள். இப்போது பெரும்பாலான கறைகள் மறைந்து விட்டதை நீங்கள் பார்க்கலாம்.
ஸ்டெப் 4
இப்போது கறை பட்ட பகுதியை மீண்டும் குளிர்ச்சியான குழாய் தண்ணீருக்கு கீழே பிடித்து நன்கு அலசுங்கள்.
ஸ்டெப் 5
விடாப்பிடியான கறைகள் எனில், உங்களுக்கு விருப்பமான லிக்விட் டிடர்ஜெண்டை எடுத்து கறைபட்ட பகுதியின் மீது சிறிதளவு தடவுங்கள்.
ஸ்டெப் 6
ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் அந்த கறைபட்ட ஆடையை உங்கள் வாஷிங் மெஷினில் போடுங்கள். வழக்கம் போல சலவை செய்யுங்கள்.
ஸ்டெப் 7
இப்போது அந்த ஆடையை நல்ல காற்றோட்டமான பகுதியில் உலர்த்துங்கள்.
உங்கள் வேலை முடிந்தது.உங்கள் குழந்தைகள் அவர்களின் பள்ளி ஆடைகளில் கறை படிவது பற்றிய கவலையின்றி உணவை சுவைத்து மகிழட்டும். அடுத்த முறை உங்கள் குழந்தையின் ஸ்கூல் யூனிஃபார்மில் சிந்தியுள்ள உணவு கறைகளை அகற்ற இந்த சுத்தப்படுத்தும் முறையை பயன்படுத்திப் பாருங்கள். இது எளிமையானது மற்றும் ஆற்றல் மிக்கது.