
கீழுள்ள ஐந்து அரிய வகை செடிகள், இயற்கைமுறையில் கொசுவை விரட்டும் தன்மை கொண்டவையாகும்.
கொசுக்கள், நம் இந்தியர்களின் வீட்டின் அழையா விருந்தாளிகள். பலவகை நோய்களை பரப்பும் இந்த கொசுக்களை, முடிந்தவறை வீட்டில் வரவிடாமல் தடுப்பது அவசியமாகும். இந்தக்கொடிய கொசுக்களை இயற்கை முறையில் தடுக்கவே கீழுள்ள 4 செடிகள் நமக்கு உதவுகின்றன.
இந்த அபூர்வ குணம் உடைய செடிகளை நாம் பல்பொருள் அங்காடிகளில் சுலபமாக வாங்கலாம். DEET (chemical name, N,N-diethyl-meta-toluamide)எனப்படும் ரசாயன பொருள் இல்லா த கொசுவிரட்டிகள் தற்போது பெருமளவு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதே சிறந்த வழியாகும்.
ரசாயன கொசுவிரட்டிகளில் இருந்து வரும் வலுவானவாசம், பலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். ஆனால் இந்த இயற்கை செடிகளோ வீட்டிற்கு அழகு சேர்ப்பதுடன் மனதிற்கு இதமான சுற்றுப்புறத்தை உருவாக்குகின்றது.
மிகவும் சக்திவாய்ந்த கொசுவிரட்டி செடிகள் கீழ்வருவன:

சிட்ரோநல்லா புல்

தோட்டவிரும்பிகளுக்கு மிகவும் பிடித்த இந்தபுல் கொசுவை விரட்டுவதில் மிகவும் முக்கியமான ஒருவகையாகும். புத்துணர்ச்சியான எலுமிச்சை மணத்தை கொடுக்கக்கூடிய இந்தப்புல்லை அரைத்து மேனியில்பூசிக் கொள்ளுவதன் மூலம் கொசுவை சிறந்தவகையில் விரட்டலாம்.
லாவண்டர்

நறுமணமிக்க லாவண்டர் பல அத்தியாவசிய எண்ணெய்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மிகவும் கடினமான தாவரமாக கருதப்படும் லாவண்டர் வறட்சியைப்போக்குவதுடன் கொசுவை விரட்டுவதிலும் மிகச்சிறந்த பங்களிக்கின்றது. இத்தாவரத்தை வளர்க்க நல்ல சூரிய ஒளியும் நீர்வடிகாலும் முக்கியமான ஒன்றாகும். இந்த லாவெண்டர் செடியை தோட்டத்தில் வைப்பதுடன் வீட்டில் சிறிய கிண்ணங்களில் சிறிதளவு லாவண்டர் இலைகளை தூவி வைத்தால் கொசுக்கள் அண்டாமல் தடுக்க முடியும்.
வாசனை ஜெரேனியம்

மிகச்சிறந்த எலுமிச்சை மணத்தை கொண்ட இந்த தாவரம், கொசுக்களை விரட்டுவதில் முதன்மை வகிக்கிறது. மிகவும் ஆழமான நறுமணத்தை உடைய இந்த தாவரம், வெப்பமான பகுதிகளில் வளரக்கூடியவை. ஜன்னல்கள் அருகே இந்த தாவரத்தை வைப்பது உசிதமானது.
மாரிகோல்ட்

வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் இந்த அழகான சாமந்திவகை, கொசுக்களை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சுலபமாக வளரக்கூடிய இந்தப்பூக்களில் இருந்து வரும் நறுமணம், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்கிறது.
மேற்கண்ட செடிகளில் எதையேனும் ஒன்றை வீட்டில் வைத்துகொசுக்களை சுலபமாக விரட்டியடிக்கமுடியும். கொசுக்களற்ற வீடே சுகாதாரமான வீடு!