கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்கள் வீட்டை நீங்கள் எவ்வாறு பாதுகாக்கலாம் (P-R-O-T-E-C-T)

தற்போது உலகெங்கிலும் நோய்த்தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. கிருமிகளிலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பதற்கு (P-R-O-T-E-C-T) நீங்கள் எடுக்கக்கூடிய சில எளிய முன்னெச்சரிக்கைளை இங்கே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How You Can P-R-O-T-E-C-T Your Home from Germs and Infections
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

இந்த காலகட்டத்தில் எல்லோரும் நோய்த்தொற்றுகள், கிருமிகள், தூய்மை, சுகாதாரம் போன்றவற்றைப் பற்றி பேசுகிறார்கள். சில நேரங்களில் இந்த உரையாடல்கள் அதிகபட்சம் ஆகிவிடும், அதற்காக நீங்கள் பீதியடைய தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் இந்த எளிய தற்காப்பு நடவடிக்கைகளை வீட்டிலேயே பின்பற்ற வேண்டும்.

1) பி

(ப்ரவென்ஷன்)

வரும் முன் காப்பதே சிறந்தது. இந்த பாக்கியம் நமது வீட்டிற்கும் பொருந்தும். உங்கள் வசம் ஒரு உகந்த கிருமி-பிளாஸ்டர் இருப்பதை உறுதிசெய்க.

2) ஆர்

விளம்பரம்

Nature Protect Floor Cleaner - mpu

(ரிமூவ் ஜெர்ம்ஸ்)

உங்கள் வீட்டில் பொதுவாக, நீங்கள் தொடக்கூடிய அனைத்து மேற்பரப்புகளிலிருந்தும் கிருமிகளை அகற்றவும். இந்த மேற்பரப்புகளில் கணினி விசைப்பலகைகள், டிவி ரிமோட்டுகள், தொலைபேசிகள், கதவு கைப்பிடிகள், குழாய் கைப்பிடிகள், கழிப்பறை இருக்கைகள் மற்றும் ஃப்லஷ் கைப்பிடிகள் ஆகியவை அடங்கும். கிருமிகளைக் கொல்லும் டொமெக்ஸ் தரை கிளீனர் போன்ற ப்ளீச் அடிப்படையிலான (சோடியம் ஹைபோகுளோரைட்) தயாரிப்பு கொண்ட பொருத்தமான கிருமிநாசினியைப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் எப்போதும் முதலில் அதை சோதிக்கவும், பின்பு அதன் தன்மையை  சரிபார்த்து மற்ற இடங்களில் உபயோகப்படுத்தவும்.

3) ஒ

(அப்சர்வ் யுவர் ஃபேமிலி)

நோய்த்தொற்றின் ஏதாவது அறிகுறிகளோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான பொதுவான உணர்வுகளோ உங்கள் குடும்பத்தினர் யாருக்காவது இருக்கிறதா என்று நன்றாக கவனியுங்கள். அவர்கள் ஏதேனும் அறிகுறிகளை அனுபவித்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

4) டி

(டேக் ஹேன்ட் சானிடைஸர்)

நீங்கள் வெளியே செல்லும் பொழுது  லைஃப் பாயிலிருந்து கிடைக்கக்கூடியது போன்ற ஹேன்ட் சானிடைஸரை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் , கதவு கைப்பிடிகள், பொது கழிப்பறைகள் அல்லது உணவகங்களில் மெனுக்கள் போன்ற அதிகமாக தொட்டு உபயோகப்படுத்தக்கூடிய இடங்களை தொட நேர்ந்தால் இதை அவர்களின் கைகளில் ஊற்றி நன்கு தேய்க்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5) இ

(என்ஷுர் ஹேண்ட் வாஷ்)

உங்கள் குடும்பத்தினர் சோப்பினால் தவறாமல் கைகளைக் கழுவுவதை உறுதி செய்யுங்கள். கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், நீங்கள் வெளியில் இருந்து வரும்போதும் கைகளை கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வரை கைகளை கழுவுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் யாராவது தொற்றுநோயை கொண்டிருந்தால், துண்டுகள், முகமூடி, பல் தூரிகை மற்றும் சாப்பிடும் பாத்திரங்களை அவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும். மேலும், வீட்டில் கிருமிகள் பரவாமல் இருக்க அதிக வெப்பநிலையில் (குறைந்தது 60⁰C) துணிகளை தனித்தனியாக துவைக்க வேண்டும். சூடான நீர் கிருமிகளை திறம்பட கொல்லும்.

6) சி

(கன்டெய்ன்)

மனித கழிவுகளுடன் தொடர்பு உள்ள எதையும் உங்கள் வீட்டில் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்; டிஷ்யூக்களை சரியாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும், மேலும் கழிப்பறை கழிவுகள் மேற்பரப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும், டொமெக்ஸ் போன்ற ஒரு கிருமிநாசினி கழிப்பறை கிளீனரினால் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். தும்மலுக்குப் பிறகு, கிருமிகள் 3 மீ வரை பயணிக்கக் கூடும், மற்றும் தேவையற்ற தொற்றுநோய்களைப் பரப்பிவிடும், எனவே நீங்கள் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ வாயை மூடி, கைகளை உடனடியாக கழுவ வேண்டும்.

7) டி

(டெல் எவ்ரி ஒன்)

அனைவரிடமும் தங்கள் வீடுகளைப் பாதுகாக்க எடுக்கக்கூடிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லவும், அதையே பின்பற்ற ஊக்குவிக்கவும். அனைத்துக்கும் மேலாக, தொற்று பரவுவதைத் தடுப்பது ஒரு குழு முயற்சியாகும்.

(P-R-O-T-E-C-T) இந்த பாதுகாப்பு முறையைப் பின்பற்றி, உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது