
கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு விமான நிலையங்களுக்கு செல்வது அல்லது பயணிப்பது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், பயணத்தின் போது நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். சில செய்யவேண்டியவை செய்யவேண்டாதவை உள்ளன, அதை நீங்கள் எல்லா நேரங்களிலும் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் போர்டிங் பாஸ் வரிசையில் இருந்தாலும் அல்லது பேக்கேஜ் கவுண்டருக்கு அருகில் இருந்தாலும், சமூக இடைவெளியை பராமரிப்பது மிக முக்கியம். மேலும், விமான நிறுவனங்கள் ம ற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு கவனம் செலுத்துங்கள்.
உங்கள் பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்யும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.
1) சமூக இடைவெளியை பராமரிக்கவும்
மக்களுடன் நெருங்கிய தொடர்பு தொற்றுநோயை அதிகரிக்கும். நெரிசலான பொது கழிப்பறைகள் அல்லது விமான நிலைய லான்ஞ்சிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். காத்திருக்கும் பகுதியில் மற்றும் போர்டிங் போது எல்லோரிடமிருந்தும் குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பராமரிக்கவும். சிடிசி அடிப்படையில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் குறைந்தது 6 அடி இடைவெளியை நீங்கள் பராமரிக்க முடிந்தால் பாதுகாப்பானது, ஏனென்றால் ஒருவருக்கொருவர் 6 அடிக்குள் இருக்கும் நபர்களிடையே கோவிட் -19 எளிதாக பரவுகிறது.
2) உங்கள் கைகளை கழுவவும்
எல்லா நேரங்களிலும் உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க சிறந்த வழியாகும். கொரோனா வைரஸ் மேற்பரப்பில் உயிர்வாழும் என அறியப்படுகிறது. எனவே, குறைந்த பட்சம் 20 விநாடிகள் சூடான நீரில் சோப்பு போட்டு கைகளை கழுவுவதன் மூலம் சுத்திகரிப்பு மற்றும் நல்ல கை கழுவுதல் சுகாதாரம் ஆகியவற்றை கடைபிடியுங்கள். பயணத்தின் போது தண்ணீர் அல்லது சோப்பு கிடைக்கவில்லை என்றால், விமான நிலையம் போன்ற பொது இடத்தில் இருக்கும்போது ஆல்கஹால் சார்ந்த ஹாண்ட் சனிடைசரை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

3) முகக்கவ சத்தை அணியுங்கள்
விமான பயணத்தின் போது நீங்கள் முகக்கவசத்தை அணிவது கட்டாயமும் இன்றியமையாததும் ஆகும். முகக்கவசம் அணிவது உங்கள் மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தடுக்கும். பாதிக்கப்பட்ட நபரால் பேசும்போது / இருமும்போது வெளியிடப்படும் நீர்த்துளிகள் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்பையும் இது குறைக்கிறது. ஒரு முகக்கவசத்தை சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்து, உங்களுக்கு நன்றாக பொருந்தக்கூடிய முகக்கவசத்தை அணியுங்கள். உங்கள் முகக்கவசத்தை நீங்கள் தொடர்ந்து சரிசெய்ய வேண்டியதில்லை. முகக்கவசத்தை அணிவதன் முழு நோக்கத்தையும் இது வீணாக்கும், ஏனெனில் நீங்கள் அடிக்கடி உங்கள் முகத்தைத் தொடுவீர்கள்.
4) நீர்ச்சத்துள்ளதை குடித்து மற்றும் சரியாக சாப்பிடுங்கள்
உணவு அல்லது நீர் மாசுபடுவதால் நோய்வாய்ப்படும் அ பாயம் உள்ளது. எனவே, நீங்கள் பாதுகாப்பான தண்ணீரைக் குடிப்பதையும், நன்கு சமைத்த உணவை உட்கொள்வதையும் உறுதிசெய்யுங்கள். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உத்தரவாதம் அளிக்காத இடங்களில் சாப்பிட வேண்டாம். தேவைப்பட்டால் உங்கள் சொந்த பாட்டில் மற்றும் உணவை எடுத்துச் செல்லுங்கள்.
5) மருத்துவரை அணுகவும்
எந்தவொரு உள்நாட்டு அல்லது சர்வதேச வேலை பயணத்திற்கும் முன், உங்கள் சுகாதார ஆலோசகரைச் சந்திப்பது நல்லது. நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள் இந்த நேரத்தில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் பயணம் செய்யாதீர்கள். விமானத்தில் செல்வதற்கு முன் காய்ச்சல் அல்லது சளி அறிகுறிகளை சரிபார்க்கவும். பொதுவான சளி அல்லது பிற சுவாச நோய்களிலிருந்து பாதுகாக்கவும்.
6) பயணத்திற்குப் பிறகு சுயமாக தனிமைப்படுத்துங்கள்
வேலை பயணத்திலிருந்து திரும்பி வந்த பிறகு சுயமாக தனிமைப்படுத்துவது நல்லது. இது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், உங்கள் மருத்துவரைச் சந்தித்து மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து உங்கள் அலுவலகத்தில் எப்போதும் தெரிவிக்கவும்.
லாக்டவுனுக்கு பிறகு பாதுகாப்பாக பயணிக்க இந்த உதவிக்குறிப்புகள் உதவும்.
ஆதாரம்: