
நீங்கள் வெளியே போகாமல் வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருந்தாலும், சில தவிர்க்க முடியாத நேரங்களில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் வரும். மளிகை வாங்கவும், மருந்து வாங்கவும் மற்றும் உங்கள் வண்டியை கரேஜில் விடவும் நீங்கள் வெளியே செல்ல வேண்டியதாகி விடும். இந்த சூழ்நிலைகளில், வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது, வெளியில் இருக்கும் கிருமிகளை உள்ளே கொண்டு வந்து விடுவோமோ என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம், கவலை வேண்டாம் இந்த எளிய பயனுள்ள பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றவும்.
1) சுய சுகாதாரத்தை கடைபிடிக்கவும்
ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் பொழுது உங்கள் கைகளை, முழங்கை வரை நன்றாக கழுவ வேண்டும். இதற்கு நீங்கள் சோப்பும் தண்ணீரும் பயன்படுத்தலாம், அல்லது லைஃப் பாயில் இருந்து கிடைக்கும் ஆல்கஹால் சார்ந்த சானிடைஸரை பயன்படுத்தலாம். நீங்கள் வீட்டிற்குள் வந்த உடனேயே கைகளை கழுவ வேண்டும்.உங்கள் வீட்டின் வேறு ஒரு உறுப்பினர் வெளியே சென்று வந்தாலும் இதையே பின்பற்ற சொல்லுங்கள். கைகளை கழுவும் முன் வீட்டினுள் எந்த ஒரு பொருளையும் தொடக் கூடாது.
அதுமட்டுமின்றி பொதுவான இடங்களான லிஃப்ட் பட்டன், கதவு கைப்பிடி ஆகியவற்றையும் தொடக் கூடாது. ஒருவேளை நீங்கள் தொட்டுவிட்டால் உங்கள் கைகளை கழுவுவதற்கு முன்னர் வேறு எந்த இடத்தையும் தொட்டு விட கூடாது, முக்கியமாக உங்கள் முகத்தை.
நீங்கள் வெளியே செல்லும் பொழுது ஒரு திசு காகிதத்தை கொண்டு செல்லலாம் உங்களுக்கு தும்மல் அல்லது இருமல் வரும் பொழுது அதை உபயோகிக்கலாம். மறக்காமல் உபயோகித்த திசு காகிதத்தை குப்பைத் தொட்டியில் போடவும்.

2) சில பொருட்களுக்கு, தனியாக ஒரு இடத்தை உதிர்க்கவும்
உங்களுடைய பணப்பை, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு, வீட்டு அல்லது கார் சாவி, சில்லறை காசு மற்றும் ஷாப்பிங் பைகள் ஆகியவற்றை ஒரு தனி இடத்திலோ அல்லது ஒரு தனி பெட்டியிலோ போட்டு வைக்கவும். இந்த பொருட்களை மற்ற வீட்டு பொருட்களிடம் இருந்து த னியே வைக்கவும், தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டுமே இவற்றை தொடவேண்டும் இல்லையேல் நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களும் இதை தொடுவதை தவிர்க்கவும். இந்த பொருட்களை தொட்ட பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எப்பொழுதும் மளிகை பைகளை போடுவதற்கென்று ஒரு தனி குப்பை தொட்டியை வைத்திருக்கவும். அதுமட்டுமின்றி, மறுமுறை உபயோகப்படுத்தக்கூடிய ஷாப்பிங் பை என்றால் அந்த ஷாப்பிங் பைகளை ஒவ்வொரு முறையும் கழுவி உபயோகிக்கவும்.
3) சுத்தமான மேற்பரப்புகள்
உங்கள் கைகளை கழுவிய பின்னர் வீட்டிலுள்ள கேன்கள், அட்டைப்பெட்டிகள், ட்ரேகள் அனைத்தையும் அதன் இடத்தில் வைப்பதற்கு முன்னர் கழுவவேண்டும். எப்பொழுதும் உங்கள் மேஜையும் சமையல் மேடையையும் கழுவிய பிறகே அதில் மளிகை சாமானை வைக்கவேண்டும்.பழங்களையும் காய்கறிகளையும் உபயோகிப்பதற்கு முன், குழ ாய் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். உங்கள் பணப்பை அல்லது பர்ஸை அதனுடைய இடத்தில் வைப்பதற்கு முன் நன்றாக துடைக்க வேண்டும். இவை அனைத்தும் செய்தபின்னர் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
4) மேற்பரப்புகளில் கிருமிநீக்கம் செய்யவும்
நீங்கள் உங்கள் சாவிகளையும், கதவு கைப்பிடி களையும் உபயோகப்படுத்தும் முன்னரும் , உபயோகப்படுத்திய பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு லேசான சோப்பு தூளும் தண்ணீரும் கொண்டு அதை சுத்தம் செய்துவிடலாம். சுத்தம் செய்த பின்னர், ஒரு சிறந்த பிளீச்(சோடியம் ஹைப்போ குளோரைட்) போன்ற கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் டொமெக்ஸ் தரை கிளீனரை பயன்படுத்தலாம் அது கிருமிகளை கொல்லும். அதன் இணக்க தன்மையை சரிபார்க்க , அதை முதலில் ஒரு மறைவான சிறிய இடத்தில் உபயோகப்படுத்தி பார்க்கவும், பிறகு மற்ற இடங்களில் பாதுகாப்பாக உபயோகிக்கலாம்.
இந்த பயனுள்ள உதவிக் குறிப்புகளை பின்பற்றினால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கலாம்.