லாக்டவுனுக்கு பிறகு உங்கள் தனியார் வாகனத்தை சுத்தமாகவும், கிருமி நீக்கம் செய்வது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் நீக்கப்பட்டதும் அலுவலகத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வேலைக்குச் செல்ல உங்கள் சொந்த காரைப் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம். லாக்டவுனுக்கு பிறகு உங்கள் தனிப்பட்ட வாகனங்களை சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Here’s How to Keep Your Private Vehicle Clean and Disinfected Post Lockdown
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

நீங்கள் உங்கள் காரைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தால், வாகனத்திற்குள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பது அவசியம். உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பராமரிக்க கார் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது மளிகை கடைக்கு அல்லது அலுவலக பயணத்திற்காக இருந்தாலும், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன்னும் பின்னும் கிருமி நீக்கம் செய்வது மிக முக்கியம். உங்கள் காரை சுத்தமாகவும் கிருமிநீக்கம் செய்தும் வைத்திருக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.  

உங்கள் ஸ்டீயரிங்கை மாசு இல்லாமல் வைத்திருக்க சிறந்த வழி ஸ்டீயரிங்கை தொடுவதற்கு முன்பு உங்கள் கைகளை சுத்தப்படுத்துவது. எளிதாக அணுக உங்கள் பையில் ஒரு ஹேண்ட் சானிடிசரை வைத்திருங்கள்.

படி 1: முன்பே–சுத்தம் செய்யும் செயல்முறையைப் பின்பற்றவும்

உங்கள் காரை சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் பொதுவாக தளர்வான டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸை அணியலாம். இருப்பினும், காரின் மேற்பரப்புடன் உங்கள் சருமத்தின் தொடர்பைக் குறைக்க உங்களை முழுமையாக மூடிமறைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். அசுத்தமான மேற்பரப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும், முகக்கவசத்துடன் கையுறைகளை அணியவும் உறுதிப்படுத்தவும். போதுமான பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.     

தேவையான அனைத்து துப்புரவு பொருட்களையும் காரின் அருகே சேகரித்து வைத்திருங்கள், இதனால் நீங்கள் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கியதும் உங்கள் வீட்டிற்குள் நுழைய வேண்டியதில்லை. நீங்கள் அணிந்திருப்பது விழுந்துவிட்டால் அல்லது ஈரமாகிவிட்டால் கூடுதல் முகக்கவசத்தை கையோடு வைத்திருங்கள்.  

விளம்பரம்

Nature Protect Floor Cleaner - mpu

படி 2: உட்புறங்களை கிருமி நீக்கம் செய்யுங்கள்

மேற்பரப்பு அழுக்கு மற்றும் தூசியை அகற்ற உட்புறங்களை வேக்கும் செய்யுங்கள். இப்போது, ஒரு கறை நீக்கும் லிக்விடை பயன்படுத்தி அதை சுத்தமாக துடைக்கவும். நீங்கள் பயன்படுத்தும் துப்புரவு லிக்விட் உங்கள் கார் இருக்கைகளில் உள்ள அமைப்பு வகையைப் பொறுத்தது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய லேபிளில் உள்ள தயாரிப்பு வழிமுறைகளைப் படிக்கவும். எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தவிர்க்க நீங்கள் ஒரு சிறிய பகுதியில் துப்புரவு தயாரிப்புகளை எப்போதும் சோதிக்க வேண்டும். இருப்பினும், கார் இருக்கைகளை சுத்தம் செய்வது மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்க. டாஷ்போர்டு, ஸ்டீயரிங், கியர் மற்றும் கால் பாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் விண்ட்ஸ்கிரீன், கதவு கைப்பிடிகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். ஒருமுறை, உங்கள் காரின் உட்புறங்களை நன்கு சுத்தம் செய்துள்ளீர்கள்; அதை கிருமி நீக்கம் செய்ய வேண்டிய நேரம் இது.   

மாசுபடுதலில் இருந்து உங்களைப் பாதுகாக்க அடிக்கடி-தொடும் மேற்பரப்புகளை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது என்பதை அறிவது மிகவும் முக்கியம். ஸ்டீயரிங், ஆர்ம்ரெஸ்ட்ஸ், கப் ஹோல்டர்கள், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கதவு கைப்பிடிகள் போன்ற உங்கள் காரின் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை சுத்தம் செய்ய, கிருமிகளைக் கொல்லும் டொமக்ஸ் மல்டி பர்பஸ் டிசின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே போன்ற பொருத்தமான கிருமிநாசினி தெளிப்பைப் பயன்படுத்தவும். ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் எப்போதும் சோதிக்கவும், முதலில் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க துடைக்கவும். தயாரிப்பு குறித்த வழிமுறைகளைப் படிக்க மறக்காதீர்கள், மேலும் மென்மையான மற்றும் நுண்ணிய மேற்பரப்புகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறதா என்று சோதிக்கவும். 

படி 3: வெளிப்புறங்களைக் கழுவவும்

சோப்பு நீரில் ஸ்பாஞ்சை ஈரப்படுத்தி, வெளிப்புறங்களை துடைக்கவும். நுரையை அகற்ற ஒரு குழாய் பயன்படுத்தவும். உங்கள் காரில் வாட்டர்மார்க்ஸைத் தடுக்க ஸ்பாஞ்சை வட்ட திசைகளில் நகர்த்தவும். சுத்தமான, பருத்தி துணியைப் பயன்படுத்தி அதிகப்படியான ஈரப்பதத்தைத் துடைக்கவும். இப்போது, ஒரு நல்ல தரமான கிருமிநாசினியைப் பயன்படுத்தி வெளிப்புறங்களை கிருமி நீக்கம் செய்யுங்கள். 

படி 4: உங்கள் சுத்தம் செய்யும் கருவியை அப்புறப்படுத்துங்கள்

உங்கள் உடைகள், கையுறைகள், முகக்கவசம் மற்றும் பிற துப்புரவு உபகரணங்களை எடுத்து நன்கு கழுவுங்கள். அவற்றை சுத்தமாக வைத்திருக்க லைஃப் பாய் லாண்டரி சானிடிசர் போன்ற நல்ல சலவை சானைடிசரைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். நீங்கள் ஒரு முறை பயன்படுத்தும் முகக்கவசத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை பொறுப்புடன் அப்புறப்படுத்துவது முக்கியம். நம் முகக்கவசத்தை பயன்படுத்துவதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் சரியான வழியை இங்கே அறிக.

அறிவுறுத்தல்களுக்காக பேக்கைப் படித்து, பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க முதலில் ஒரு சிறிய தெளிவற்ற பகுதியில் தயாரிப்புகளை எப்போதும் சோதிக்கவும். வேக்கும் கிளீனர் கூட ஒழுங்காக சுத்தப்படுத்தப்பட வேண்டும். பின்னர் ஒரு நல்ல, நீண்ட நேர குளியலை எடுத்துக் கொள்ளுங்கள்.  

இதோ! லாக்டவுனுக்கு பிறகு பயணிக்கும்போது பாதுகாப்பாக இருக்க இந்த படிகள் உதவும்.

ஆதாரம்:

https://www.financialexpress.com/auto/car-news/top-tips-on-how-to-disinfect-your-car-amid-covid-19-lockdown-coronavirus-vehicle-maintenance/1925593/

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது