உங்கள் பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவிடுகின்றனரா? அவர்களை பிஸியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.

உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வெளியே செல்லவோ அல்லது இந்த காய்ச்சல் பருவகாலத்தில் விளையாடவோ முடியாததால், அவர்கள் மந்தமாகவோ அல்லது சலிப்பாகவோ உணரலாம், இது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, அவர்களின் வழக்கத்தில் சில சிறிய மாற்றங்களை செய்து வீட்டில் தங்குவதை வேடிக்கையாக மாற்றுவது முக்கியம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Is Your Child Spending More Time Indoors? Learn How to Keep Them Busy and Motivated
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

உங்கள் குழந்தைகளை பிஸியாக வைத்திருக்க பல்வேறு வகையான உட்புற செயல்பாடுகள் மற்றும் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். நோய்த்தொற்றுகளின் பயத்தால் அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள். உங்கள் குழந்தைகளின் மறைக்கப்பட்ட திறமைகளைக் கண்டறிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் பிள்ளைகளை வீட்டில் பிஸியாக வைத்திருக்க சில எளிய மற்றும் பயனுள்ள யோசனைகள் இங்கே.

1) கலை மற்றும் கைவினைப் பொருட்களை செய்யவும்

வண்ணமயமான புத்தகங்கள், நீர் வண்ணங்கள், வண்ணமயமான பென்சில்கள், கைவினை காகிதம், ஸ்டிக்கர்கள் மற்றும் புட்டி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். உங்கள் குழந்தைகளுக்கு பழைய, சுத்தமான பல் தூரிகைகளை வண்ணம் தீட்டுவதற்கு கொடுத்தோ அல்லது விரல்களால் வண்ணம் தீட்ட அனுமதித்தோ  அவர்களை குதூகலமாக வைத்திருங்கள்!

2)  போர்டு விளையாட்டுகளை விளையாடுங்கள்

விளம்பரம்

Nature Protect Floor Cleaner - mpu

குடும்பத்தினர் ஒன்றிணைந்து போர்டு விளையாட்டுகளை விளையாட இது ஒரு நல்ல நேரம். உங்கள் குழந்தைகளுக்கு சதுரங்கம் அல்லது மோனோபோலி எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொடுங்கள், பின்னர் அவர்கள் உங்களை வெல்லும்போது அவர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைக் காணுங்கள்.

3) கேக் செய்யுங்கள்

உங்கள் பிள்ளை பேக்கிங்கில் ஆர்வமாக இருந்தால், அவர்களின் திறமைகளை பிரகாசிக்க வைக்க இது ஒரு நல்ல நேரம். எளிய சமையல் குறிப்புகளுடன் தொடங்கி அவற்றை அளவிடுவதற்கும் கலப்பதற்கும் உதவுங்கள். அவர்கள் சமையலறை பாத்திரங்கள் அல்லது அடுப்பைப் பயன்படுத்த நேரிடும் பொழுது அவர்களை கண்காணிக்கவும். பேக்கிங்கிற்கு முன்னும் பின்னும் கைகளை நன்கு கழுவ கற்றுக்கொடுக்க நினைவில் கொள்ளுங்கள். இப்போது, ​​முழு குடும்பத்தினருடனும் இனிப்புகளை சுவைத்து மகிழ்ச்சியை அனுபவிக்கவும்.

4) பாட்டு மற்றும் நடனம்

உங்கள் பிள்ளைகளுடன் பாடுவதையும் நடனமாடுவதையும் விட அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான சிறந்த வழி என்ன! அனைவருக்கும் மிகவும் பொழுதுபோக்கு அளிக்க ஒரு கரோக்கி செட்டில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் நடனமாடலாம் அல்லது நல்ல பழைய அந்தாக்ஷரி விளையாடலாம். அவர்களின் சிரிப்பும்  இசையும் அவர்களின் மனநிலையை மேம்படுத்தும் என்பது உறுதி.

5) புத்தகத்தைப் படிக்கவும்

இந்த நேரத்தில் மேலும் படிக்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கவும். படித்தல் அவர்களை பிஸியாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும் மற்றும் அவர்களின் மனநிலையையும் கற்பனையையும் மேம்படுத்த உதவும். கவிதைகள் மற்றும் சிறுகதைகளை மாலை நேரத்திலோ அல்லது அவர்கள் தூங்குவதற்கு முன்போ படிக்கலாம்.

6) வீட்டு வேலைகளை செய்யவும்

வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவ அனுமதிப்பதன் மூலம் உங்கள் பிள்ளைகள் வீட்டில் ஒன்றிணைந்து செயல்படுவர். துணிகளை மடிக்க அல்லது துணிகளை அலமாரிகளில் வைக்க உதவுமாறு அவர்களிடம் கேளுங்கள். இரவு உணவு மேஜையை அமைக்கவும் அல்லது தூசி தட்டுவதற்கும் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் குழந்தைகள் கடினமான பணிகளைச் செய்ய விடவேண்டாம் மற்றும் மேற்பார்வை இல்லாமல் செயல்பட வைக்க வேண்டாம். இவ்வாறு முன்மாதிரியாக செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் சுத்தம் செய்வதை ஒரு வேடிக்கையான மற்றும் அத்தியாவசியமான செயலாக மாற்றுங்கள்.

வீட்டில் சில மேற்பரப்புகளை நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்கள்  அடிக்கடி தொடுகின்றனர். உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் வீட்டில் இருப்பதால், சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், மேஜைகள், குழாய்கள், கேபினட் கைப்பிடிகள், கழிப்பறை இருக்கைகள், ஃபலஷ் கைப்பிடிகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற ‘அதிகமாக தொடக்கூடிய மேற்பரப்புகளை’ அவர்கள் தொடுவார்கள். இந்த மேற்பரப்புகள் அனைத்தையும் ஒரு வழக்கமான வீட்டு சோப்புத்தூள் மற்றும் தண்ணீரை கொண்டு நீங்கள் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பிறகு, சிறந்த சுகாதாரத்திற்காக அவற்றை கிருமி நீக்கம் செய்யலாம். டொமக்ஸ் தரை கிளீனர் போன்ற ப்ளீச் அடிப்படையிலான (சோடியம் ஹைபோகுளோரைட்) தயாரிப்பு கொண்ட பொருத்தமான கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள், இது கிருமிகளைக் கொல்லும். முதலில் ஒரு சிறிய மறைவான பகுதியில் எப்போதும் சோதிக்கவும், பின் அதன் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்த்து மற்ற இடங்களில் உபயோகிக்கவும். மேலும், அவர்கள் சோப்பினால் கைகளைக் கழுவுவதை உறுதி செய்யுங்கள் இல்லையேல் ஒவ்வொரு அமர்வுக்கு முன்னும் பின்னும் லைஃப் பாயிலிருந்து கிடைக்கும் ஆல்கஹால் சார்ந்த சானிடிசரைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

இந்த எளிய உதவிக்குறிப்புகள் மூலம், உங்கள் சிறிய குழந்தைகளுடன் வீட்டில் உங்கள் வாழ்வு இன்னும் பயனுள்ளதாக அமையும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது