
உங்கள் கைப்பேசி உங்களுடைய கையின் இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது. நீங்கள் அதிகமாக தொடக்கூடிய பொருட்களில் முக்கியமானதாக உங்கள் கைபேசி உள்ளது. ஆகையால் அதன் மூலம் உங்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் மற்ற வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்ற மேற்பரப்புகளை தொட்டுவிட்டு உங்கள் கைப்பேசியை தொடும் பொழுது அதில் மற்ற இடங்களிலிருந்து வைரஸை நீங்களே பரப்ப நேரிடும். நீங்கள் தொடும் மேற்பரப்பின் மேல் கோவிட் -19 வைரஸ் இருந்தால் நீங்களே அதை உங்கள் கைபேசிய ை தொட்டு அதில் அந்த வைரஸை பரப்பக் கூடும்.
முன்னணி வெளிநாடு மற்றும் உள்நாடு சுகாதார அமைப்புகளின் அறிவுறுத்தலின்படி நோவல் கொரோனா வைரஸில் இருந்து உங்களை காத்துக் கொள்ள தினம்தோறும் நீங்கள் அதிகமாக தொடக் கூடிய பொருட்களை சுத்தம் செய்து அதிலிருந்து கிருமிகளை நீக்க வேண்டும். எனவே நீங்கள் உங்கள் கைபேசியை அடிக்கடி சுத்தம் செய்து அதில் இருக்கும் கிருமிகளை நீக்க வேண்டும்.
1) உங்கள் தொலைபேசியை சுத்தம் செய்து கிருமிகளை நீக்குவதன் முக்கியத்துவம்
நீங்கள் பொது இடங்களில் உள்ள பலவகையான மேற்பரப்புகளை தொட்ட பின்னர் உங்கள் கைப்பேசியை தொட்டிருந்தால் நீங்கள் உங்கள் கைகளை கழுவுவது செய்தால் மட்டும் போதாது உங்கள் கைப்பேசியையும் சுத்தம் செய்து, அதில் இருக்கும் கிருமிகளை நீக்க வேண்டும். ஏனென்றால் நோவல் கொரோனவைரஸ் அல்லது கோவிட் -19 வைரஸ் ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ 3 அடி தூரம் வரை பயணிக்கும். அதுமட்டுமின்றி அருகில் உள்ள மற்ற இடங்களில் சென்று தங்கிவிடும். அதேபோன்று யாரேனும் தங்கள் கையில் இருமியோ அல்லது தும்மியோ, அந்த கையால் உங்கள் கைப்பேசியை தொட்டிருந்தால் அதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படக்கூடும். அதை நீங்கள் தொட்டால் உங்களுக்கும் கோவிட் -19 வைரஸ் பரவி நோய் தொற்றின் சங்கிலி நிறைவடைந்து விடும்.
2) கைபேசியை சுத்தம் செய்தல்
முதலில் உங்கள் தொலைபேசியை அன் பிளக் செய்து பிறகு சுவிட்ச் ஆப் செய்யவும். கைப்பேசியின் உறையை கழட்ட வேண்டும். பின்னர் உங்களின் கைபேசியின் ஸ்கிரீன் மற்றும் பின்பக்கத்தை ஒரு மைக்ரோ பைபர் அல்லது மென்மையான துணியை கொண்டு துடைத்து அதில் இருக்கும் தூசியை நீக்கவும். அதன்பிறகு உங்கள் கைப்பேசியை நன்றாக சுத்தம் செய்து அதில் இருக்கும் கிருமிகளை நீக்கி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவும்.

பெரும்பாலான ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் உங்கள் கைப்பேசி யை கிருமி நாசினி கொண்ட வைப்ஸ் மூலம் சுத்தம் செய்யவே பரிந்துரைக்கிறார்கள். உங்கள் கைபேசியில் ப்ளீச் போன்ற ரசாயன கிளீனர்களை உபயோகிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால் கைரேகைகள் அழுக்கு, எண்ணெய் மற்றும் தண்ணீரை விரட்டும் தொலைபேசிகளில் உள்ள பாதுகாப்பு கோட்டினை இந்த வலுவான ரசாயனங்கள் அகற்றக் கூடும்.
உங்களிடம் கிருமிநாசினி வைப்ஸ் இல்லாவிட்டால் ஒரு சுத்தம் செய்யும் சோப்பு கலவையை கொண்டு உங்கள் கைப்பேசியை நீங்கள் நன்றாக சுத்தம் செய்யலாம். உங்கள் கைப்பேசியின் உறையை முதலில் கழட்ட வேண்டும் ஏனென்றால் அந்த உறைக்கும் கைபேசிக்கும் இடையேயான இடத்தில் நிறைய கிருமிகளும் அழுக்குகளும் இருக்கக்கூடும். ஒரு மைக்ரோ ஃபைபர் அல்லது மென்மையான துணியை எடுத்து அதை தண்ணீர் மற்றும் வீட்டு உபயோக சோப் கொண்ட கலவையில் நனைத்துக் கொள்ளவும். துணியில் குறைந்த அளவு ஈரப்பதம் இருந்தாலே போதும், தண்ணீர் சொட்ட சொட்ட எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்போது அந்தத் துணியை கொண்டு உங்கள் கைபேசியின் பின் பக்கத்திலும் துளைகள் இல்லாத வலுவான பகுதிகளிலும் கைபேசியின் ஸ்கிரீனிலும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரப்பதம் எதுவும் உங்கள் கைப்பேசியில் இருக்கும் துளைகளுக்குள் சென்று விடக்கூடாது. பிறகு உங்கள் கைப்பேசியை ஒரு காய்ந்த மைக்ரோ பைபர் துணியை கொண்டு துடைக்கவேண்டும். இருப்பினும் சுத்தம் செய்வதற்கு முன் ஒரு முறை உங்கள் கைபேசியின் நுகர்வோர் கையேட்டை படித்து உறுதிபடுத்திக் கொள்ளவும்.
உங்கள் கைபேசியில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசியை நீங்கள் ஒரு பல் குத்தும் குச்சி அல்லது காது குடையும் பட்ஸ் வைத்து சுத்தம் செய்யலாம்
3) உங்கள் கைபேசியின் உரையை எவ்வாறு சுத்தம் செய்வது
உங்கள் கைப்பேசியை தூசியில் இருந்தும் கீழே விழுவதில் இருந்தும் பாதுகாக்க நீங்கள் ஒரு கைபேசி உறையை போட்டிருந்தால் அதையும் நீங்கள் நன்றாக சுத்தம் செய்து அதில் இருக்கும் கிருமிகளை நீக்க வேண்டும். ஏனென்றால் அந்த உறையை உங்கள் கைகளால் அடிக்கடி நீங்கள் தொட நேரிடும். அதை தொடுவதற்கு முன் நீங்கள் மேஜைகள், கவுண்டர்கள், ஷெல்ஃப்கள், போன்றவற்றை தொட்டிருக்கக்கூடும். பெரும்பாலான கைபேசி உறைகள் கடினமான பிளாஸ்டிக் மற்றும் சிலிக்கானால் செய்யப்பட்டதாக இருக்கும், முதலில் நீங்கள் அந்த உரையை கைபேசியில் இருந்து தனியாக கழற்றி வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த கைபேசி உறையை வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். அதை ஒரு மென்மையான பிரஷ் அல்லது மைக்ரோ ஃபைபர் துணியை கொண்டு சோப்பு கலவையில் முக்கி துடைத்து எடுக்கவும். முழுவதுமாக அதை மூலை முடுக்கு வரை அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்யவும். இறுதியாக நன்றாக அதை உலர வைத்து பிறகு கைபேசியில் பொருத்திக் கொள்ளவும்.
4) உங்கள் கைப்பேசியை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி
முடிந்தவரை, பேருந்து மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்தில் பயணிக்கும் பொழுது உங்கள் கைப்பேசியை நீங்கள் அமர்ந்திருக்கும் போது மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கைப்பிடியையோ, இருக்கையின் முனையையோ உங்கள் கைகளால் பிடிக்க நேரிடலாம். அதேபோன்று கூட்டமான இடத்திற்கு செல்லும் பொழுது உங்கள் தொலைபேசியை கைகளில் வைத்திருக்க வேண்டாம், ஏனென்றால் யாரேனும் அதில் தும்மி விடவோ அல்லது இருமி விடவோ கூடும்.
குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகள் குறிப்பாக பொது கழிப்பிடங்கள், கிருமிகள் பரவுவதற்கான முக்கியமான இடங்களாகும். நீங்கள் பொது கழிப்பறையை உபயோகிக்கும் பொழுது உங்கள் கைப்பேசியை உங்கள் பையிலோ அல்லது சட்டைப்பையிலோ வைத்துக் கொள் ளவும். முடிந்தவரை கைபேசியை வீட்டிலேயே வைத்து விட்டு வரவும். உங்களுடைய ட்வீடிங் மற்றும் மற்ற சோஷியல் மீடியா போஸ்டிஙை நீங்கள் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தவுடன் செய்யலாம். நீங்கள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது செய்ய வேண்டியதில்லை.
முடிந்த அளவு மற்றவர்கள் உங்கள் கைப்பேசியை தொடவோ அல்லது உபயோகிக்கவோ அனுமதிக்க வேண்டாம். ஏனென்றால் பலரின் கைகள் தொடும் பொழுது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
நீங்கள் சமைக்கும் பொழுது பச்சை இறைச்சி, மீன், மற்றும் கோழி போன்றவற்றை கையாள நேரிட்டால் உங்கள் கைபேசியில் சமையல் செய்முறையை ஸ்க்ரோல் செய்து பார்ப்பதற்கு பதிலாக அதை காதில் கேட்டு செய்யவும். இது அந்த இறைச்சிகளில் இருந்து உங்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
உங்கள் கைப்ப ேசியை மேஜைகள், கவுன்டர் டாப் கள், நாற்காலிகள் போன்ற பொது இடங்களிலோ, பொதுவான இடத்தில் உள்ள மேற்பரப்புகளிலோ வைக்க வேண்டாம். அவை அதிகமாக தொடக்கூடிய இடங்கள் என்பதால், அவற்றிலிருந்து கொரோனா வைரஸ் மற்றும் இதர தொற்றுகள் ஏற்பட கூடும்.
5) உங்கள் கைப்பேசியை அடிக்கடி சுத்தம் செய்து அதில் இருக்கும் கிருமிகளை நீக்க வேண்டும்
முன்னணி வெளிநாட்டு சுகாதார அமைப்புகள் பரிந்துரையின்படி, அதிகமாக தொடக்கூடிய அனைத்து மேற்பரப்புகளையும் தினமும் சுத்தம் செய்ய முடியாவிட்டாலும் அடிக்கடி சுத்தம் செய்து கிருமிகளை நீக்க வேண்டும். நீங்கள் தினமும் உங்கள் கைபேசியில் இருந்து கிருமிகளை நீக்கும் முயற்சியை செய்யலாம். (குறிப்பாக நீங்கள் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது) அல்லது அது முடியாவிட்டால் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
6) ஒரு கைபேசி சுத்தம் செய்யும் கிட்டை சேகரிக்கவும்
உங்கள் கைப்பேசியை சுத்தம் செய்யவும் அலங்கரிக்கவும் தேவையான பொருட்கள் கிருமிநாசினி வைப்ஸ், சோப்பு மற்றும் தண்ணீர், பிறகு ஒரு சுத்தமான மைக்ரோ பைஃபர் அல்லது மென்மையான ஒரு துணி, ஒரு பல் குத்தும் குச்சி, அல்லது காது குடையும் பட்ஸ். இவை அனைத்தையும் ஒரு பைக்குள் போட்டு வைத்துக் கொள்ளவும். உங்கள் கைப்பேசியை சுத்தம் செய்யும் கிட் தயாராகிவிட்டது!
இந்த எளிமையான உதவிக்குறிப்புகள், கொரோனா வைரஸிலிருந்து உங்களையும் உங்கள் கைபேசியையும் பாதுகாக்கும்.
ஆதாரம்: