உங்கள் வீட்டை எவ்வாறு சுத்திகரிப்பது மற்றும் கிருமி நீக்கம் செய்வது

உங்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் கிருமிகள் மற்றும் தொற்றுகள் குறித்து கவலைப்படுகிறீர்களா? வருத்தப்படுவதற்குப் பதிலாக, உங்கள் வீட்டை சுத்தப்படுத்தவும், உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Sanitise and Disinfect Various Surfaces in Your Home
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

கிருமிகளைப் பற்றி கவலைப்படுவதும், அவைகளிடமிருந்து உங்கள் வீட்டை எவ்வாறு பாதுகாப்பது என்று நீங்கள் ஆச்சரியப்படுவதும் தவறல்ல. உங்கள் வீட்டை சுத்தம் செய்வதோடு கிருமி நீக்கம் செய்தால், கிருமிகளை நீங்கள் வாழும் இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நீங்கள் ஒரு படி மேலே இருப்பீர்கள்.  

தும்மல் அல்லது இருமலுக்குப் பிறகு கிருமிகள் 3 அடி வரை பயணிக்கக்கூடும், மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள வெவ்வேறு பரப்புகளில் பல மணிநேரம் அல்லது பல நாட்கள் கூட இருக்கலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியில் சென்றால், அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரும்போது அவர்கள் உடைகள், கைகள், பைகள் போன்றவற்றில் உள்ள கிருமிகளை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறார்கள். நீங்கள் உங்கள் அறைகளை நன்றாக சுத்தம் செய்திருக்கலாம், ஆனால் வீட்டிலேயே சுகாதாரத்தை உறுதிப்படுத்த, நீங்கள் அதை சுத்தப்படுத்தவும் கிருமி நீக்கம் செய்யவும் வேண்டும்.  

சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்வது அழுக்கு மற்றும் தூசியை நீக்குகிறது, ஆனால் சானிடிசர்கள் மற்றும் கிருமிநாசினிகள் கிருமிகளைக் கொல்ல உதவுகின்றன. சுத்தம் செய்வது ஒரு ஆரோக்கியமான வீட்டை நோக்கிய முதல் படியாக இருக்க வேண்டும், அதைத் தொடர்ந்து சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினியும் கூட.   

பிரதான நுழைவாயிலில் உள்ள கதவு, கைப்பிடிகள் மற்றும் கதவு மணி போன்ற மேற்பரப்புகள், அத்துடன் சுவிட்ச்போர்டுகள், ரிமோட் கண்ட்ரோல்கள், லேண்ட்லைன் தொலைபேசி போன்றவற்றை உங்கள் குடும்பத்தினர் அடிக்கடி தொடுவதால் நீங்கள் தினமும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். இந்த கட்டுரை அறைகளை அதே போல் சரியான வழியில் உங்கள் வீட்டிலுள்ள வெவ்வேறு மேற்பரப்புகளையும் கூட சுத்தம் செய்யவும், கிருமி நீக்கம் செய்யவும் உங்களுக்கு உதவும்.  

இதைப் பற்றி தெரிந்துகொள்ள சிறந்த வழி ஒரு நேரத்தில் ஒரு அறை எடுப்பதுதான். அந்த வகையில், உங்கள் அறைகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு ஒழுங்காக கிருமி நீக்கம் செய்யப்படுவதை நீங்கள் உறுதிசெய்ய முடியும். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்தும் வீட்டின் பொதுவான பகுதிகளுடன் நீங்கள் தொடங்கலாம், பின்னர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். உங்கள் அறைகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள அடிக்கடி தொடும் மேற்பரப்புகளையும் கிருமி நீக்கம் செய்யும் ஒரு சுத்தம் செய்வதன் வழக்கத்தை உருவாக்கவும்.   

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

எந்த அறை அல்லது மேற்பரப்பை சுத்தம் செய்வதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவ வேண்டும். நீங்கள் வழக்கமான சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது லைஃப் பாயிலிருந்து கிடைக்கும் ஆல்கஹால் சார்ந்த சானிடிசர்களைப் பயன்படுத்தலாம்.

1) லிவிங் அறை

1) Living Room

லாக்டவுனால் இப்போது நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள், குடும்பம் இங்கு அதிக நேரம் செலவிடுவதால் உங்கள் லிவிங் அறை குப்பையாக இருக்கும். வெளியில் இருந்து வரும் ஒருவர் பயன்படுத்தும் முதல் அறை இதுவாகும். எனவே, இந்த அறையை எவ்வாறு சுத்தப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம். உங்கள் லிவிங் அறையில் சுவிட்ச்போர்டு மற்றும் கதவு கைப்பிடிகள் போன்ற அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளும் உள்ளன.

சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், நாற்காலிகள், மையம் மற்றும் சாப்பாட்டு மேசைகள் மற்றும் அலமாரிகள் போன்ற அடிக்கடி-தொடும் மேற்பரப்புகள் அனைத்தையும் நீங்கள் அறையை சுத்தம் செய்து, துடைத்து வழக்கமான வழியை உருவாக்கவும். உங்கள் குழந்தைகள் தரையில் விளையாடுகிறார்களானால், அதை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். சோடியம் ஹைப்போகுளோரைட்டை செயலில் உள்ள பொருளாகக் கொண்ட டொமக்ஸ் ஃப்ளோர் கிளீனர் மூலம் கிருமி நீக்கம் செய்யுங்கள். பேக்கில் கூறியுள்ளபடி பயன்படுத்தவும்; ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் சோதிக்கவும், முதலில் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க அலசவும். 

அடிக்கடி-தொடும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய, நீங்கள் டொமெக்ஸ் மல்டிபர்பஸ் டிஸ்யின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரேயை பயன்படுத்தலாம். வீட்டிலுள்ள மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வதற்கு முன்னணி சுகாதார அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட சோடியம் ஹைப்போகுளோரைட் இதில் உள்ளது. இது அறைகளில் அடிக்கடி தொட்ட மேற்பரப்பில் கிருமிகளைக் கொன்று பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் இனிமையான மணம் கமழச்செய்கிறது. ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் எப்போதும் சோதிக்கவும், முதலில் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க அலசவும். பயன்பாட்டிற்கான பேக்கில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.     

2) சமையலறை

How to Sanitise and Disinfect Your Home

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல வாரங்களாக வீட்டுக்குள் இருக்கும்போது, உங்கள் சமையலறையை அடிக்கடி பயன்படுத்துவீர்கள், வழக்கத்தை விட அதிகமான உணவை சமைப்பீர்கள். பாத்திரங்கள் மற்றும் மேடையை தினமும் பாத்திரங்களைக் கழுவும் லிக்விட் மூலம் உங்கள் சமையலறை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் சமையலறையில் அடிக்கடி-தொடும் மேற்பரப்புகளில் உங்கள் அடுப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி, கேபினட் கைப்பிடிகள் மற்றும் கவுண்டர்டாப்புகள் போன்றவை அடங்கும். இந்த மேற்பரப்புகளை டொமெக்ஸ் மல்டிபர்பஸ் டிஸ்யின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே மூலம் சுத்தம் செய்யலாம். தயாரிப்புக்கு அறிவுறுத்தப்பட்டபடி பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள், முதலில் அதை ஒரு சிறிய பகுதியில் எப்போதும் சோதிக்கவும்.   

சோடியம் ஹைபோகுளோரைட்டை செயலில் உள்ள பொருளாகக் கொண்ட டொமக்ஸ் ஃப்ளோர் கிளீனர் போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்தை பராமரிக்க சமையலறை தளத்தை நீங்கள் கிருமி நீக்கம் செய்யலாம். சமையலறையில் இதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும், ஏனெனில் இது ஒரு ப்ளீச் மற்றும் உணவில் படக்கூடாது. பேக்கில் அறிவுறுத்தியபடி பயன்படுத்தவும்; முதலில் அதை ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் சோதித்து, பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க அலசவும்.   

3) குளியலறை

How to Sanitise and Disinfect Your Home

பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த ஈரமான இடத்தை முடிந்தவரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறையை சுத்தம் செய்ய, ப்ளீச் அல்லது டொமெக்ஸ் ஃப்ரெஷ் & க்ளீன் போன்ற துப்புரவு திரவத்தை விளிம்பில் மற்றும் கமோடிற்குள் பயன்படுத்துவதற்கு முன்பு ரப்பர் கையுறைகளை அணியுங்கள். தயாரிப்பு பேக்கில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் குளியலறையில் ஃப்ளஷ் கைப்பிடி, கழிப்பறை, இருக்கை, வாஷ்பேசின், குழாய்கள், கதவு கைப்பிடிகள், குளியல் ஃபிட்டிங்க்ஸ் போன்றவற்ற அடிக்கடி–தொடும் மேற்பரப்புகளை நல்ல குளியலறையில் சுத்தம் செய்யும் தயாரிப்புடன் சுத்தம் செய்யுங்கள். அதன்பிறகு, டொமெக்ஸ் மல்டிபர்பஸ் டிஸ்யின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரேயை பயன்படுத்தி அவற்றை கிருமி நீக்கம் செய்யுங்கள். தயாரிப்பின் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி முதலில் ஒரு சிறிய பகுதியில் சோதிக்கவும்.  

கிருமிகளைக் கொல்லக்கூடிய சோப்பு மூலம் கை மற்றும் முக நாப்கின்கள், துண்டுகள் மற்றும் பிற குளியலறை துணிகளை நன்கு துவைக்க மறக்காதீர்கள். பயன்படுத்துவதற்கு முன் பேக் வழிமுறைகளைப் படிக்கவும்.

4) குழந்தைகள் அறை

How to Sanitise and Disinfect Your Home

உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முதலில் செய்ய வேண்டிய ஒன்று, அவர்களின் அறையை தினமும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்வது. உங்கள் குழந்தைகளின் அறையில் கவனிக்க வேண்டிய பல மேற்பரப்புகள் உள்ளன. இதில் அவர்களின் படித்து எழுதக்கூடிய மேஜை, நாற்காலிகள், பலகை விளையாட்டுகள், அலமாரிகள் மற்றும் அவற்றின் கைப்பிடிகள் ஆகியவை அடங்கும். அழுக்கை அகற்ற உலர்ந்த துணியைப் பயன்படுத்தி அறையைத் தூசுதட்டுவதன் மூலம் தொடங்கவும். அதன் பிறகு, ஒரு வழக்கமான வீட்டு சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அறையை சுத்தம் செய்யுங்கள். சிறந்த சுகாதாரத்திற்காக அவற்றை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் முடிக்கவும். கிருமிகளைக் கொல்லும் டொமக்ஸ் மல்டி பர்பஸ் டிஸ்யின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே போன்ற பொருத்தமான கிருமிநாசினி ஸ்ப்ரேயை பயன்படுத்துங்கள். ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் எப்போதும் சோதிக்கவும், முதலில் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க அலசவும். தயாரிப்பில் உள்ள வழிமுறைகளைப் படிக்க மறக்காதீர்கள், மேலும் மென்மையான மற்றும் நுண்ணிய மேற்பரப்புகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறதா என்று சரிபார்க்கவும்.       

5) படுக்கையறை

How to Sanitise and Disinfect Your Home

உங்கள் படுக்கையறை நீங்கள் ஓய்வெடுக்கும் இடம். லாக்டவுனின் போது, இது உங்கள் அலுவலக இடமாகவும் மாறும். இந்த அறையை எவ்வாறு சுத்தம் செய்வது? படுக்கை மற்றும் பக்க டேபுளுடன் தொடங்கவும். நீங்கள் மெத்தை, பெட்ஷீட்கள், தலையணைகள், தலையணை கவர்கள், போர்வைகள், டூவெட்டுகள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு நல்ல சோப்பு, நீர், ப்ளீச், வாக்யூம் க்ளீனர் மற்றும் ஒரு மல்டிபர்பஸ் டிஸ்யின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே ஆகியவை படுக்கை மற்றும் தொடர்புடைய பொருட்களை கிருமி இல்லாததாக மாற்ற வேண்டும். நீங்கள் விரிவான உதவிக்குறிப்புகளை இங்கே படிக்கலாம்.

உங்கள் படுக்கையறையில் அடிக்கடி தொடப்படும் பொருட்களில் உங்கள் அலமாரியும் ஒன்று. நீங்கள் தினமும் அதை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யத் தேவையில்லை என்றாலும், லாக்டவுனின் போது கூடுதல் நேரத்தை நன்றாக சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் அலமாரிகளை காலி செய்து, பின்னர் ஒவ்வொரு அலமாரியையும் டிராயரையும் ஒரு மல்டிபர்பஸ் டிஸ்யின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே பயன்படுத்தி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள். பின்னர் உங்கள் உடைகள், பாகங்கள் போன்றவற்றை மறுசீரமைத்து ஒழுங்கமைக்கவும். விரிவான படிகளை இங்கே பாருங்கள்.

6) பிற பகுதிகள்

How to Sanitise and Disinfect Various Surfaces in Your Home

உங்கள் வீடு அல்லது கார் சாவிகள், பணப்பைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஷாப்பிங் பைகள் மற்றும் சில்லறைகளை சேமிக்க பிரதான வாசலுக்கு அருகில் ஒரு டேபுள், ஸ்டூல் அல்லது நியமிக்கப்பட்ட பகுதி இருந்தால், இந்த பொருட்களையும் பகுதியையும் தினமும் கிருமி நீக்கம் செய்வது முக்கியம். ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் எப்போதும் சோதிக்கவும், முதலில் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க அலசவும். பயன்பாட்டிற்கான பேக்கில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும், பிரதான நுழைவாயிலின் கதவுகள் மற்றும் கைப்பிடிகள், டோர் பெல், சுவிட்ச்போர்டுகள், ரிமோட் கண்ட்ரோல்கள், லேண்ட்லைன் தொலைபேசி போன்ற மேற்பரப்புகளை நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி தொடுவதால், தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.  

முக்கிய உதவிக்குறிப்புகள்

  • கையுறைகளை அணியுங்கள். உங்களிடம் டிஸ்போசபுல் இல்லை என்றால், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு உங்கள் கையுறைகளை நன்கு துவைத்து உலர வைக்கவும்.

  • நீங்கள் அறையின் தரையைத் துடைத்துவிட்டு அடுத்த அறைக்குச் சென்றபின் துடைக்கும் துணி அல்லது தலையை கிருமி நீக்கம் செய்யுங்கள். இது ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு கிருமிகள் பரவுவதை தடுக்கும்.  

  • வெவ்வேறு அறைகளுக்கு தனித்தனியாக துப்புரவு மற்றும் தூசு தட்டும் துணிகளை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு அவற்றை கழுவி உலர வைக்கவும்.

  • உங்கள் குப்பைத் தொட்டிகளுக்கு டிஸ்போசபுல் பைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொட்டிகளையும் தவறாமல் கழுவி கிருமி நீக்கம் செய்யுங்கள்.

  • கிருமி உருவாவதைத் தவிர்க்க உங்கள் தளத்தை தினமும் கிருமி நீக்கம் செய்யுங்கள். பேக்கில் அறிவுறுத்தியபடி எப்போதும் தரை கிளீனரைப் பயன்படுத்துங்கள்; ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் சோதிக்கவும், முதலில் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க அலசவும்.

சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட வீட்டைப் பெற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள், அதனுடன், மன அமைதியும்! நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் வெளியில் இருந்து உங்கள் வீட்டிற்கு வரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதை மனதில் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விரிவான உதவிக்குறிப்புகளை நீங்கள் இங்கே படிக்கலாம்.   

ஆதாரம்:

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/prevent-getting-sick/disinfecting-your-home.html

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது