
உங்கள் குழந்தைக்கு சிறப்பானவற்றைத் தருவதற்கு நீங்கள் அதிகம் முயற்சி செய்கிறீர்கள். இதில் முதன்மையானது குழந்தையின் துணியை சரியானபடி துவைப்பது! உங்கள் பச்சிளம் குழந்தையின் சருமம் மிகவும் நாசூக்கானது. அதற்கு பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி போதாது. எனவே குழந்தைகளின் துணிகளைத் துவைக்க மென்மையான டிடெர்ஜென்ட்டை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் இதற்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட மென்மையான டிடெர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். உங்கள் குழந்தையின் துணிகள ை துவைப்பதற்காக டிடெர்ஜென்ட்டை தயாரிப்பதற்கு சுலபமான 5 கட்ட முறை கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 1:
மைக்ரோவேவில் வைக்கக்கூடிய ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் 6கப் பேக்கிங் சோடாவை போட்டு அதை மைக்ரோவேவில் வைத்து 5-6 நிமிடங்கள் சூடாக்கவும்
ஸ்டெப் 2:
பவுடரை மைக்ரோவேவிலிருந்து எடுத்து அது தட்டையாகவும் குருணையாகவுவம் ஆகியுள்ளதா என்று பார்க்கவும். பிறகு அதை ஆற வைக்கவும்.

ஸ்டெப் 3:
3 பேபி சோப் பார் எடுத்து அதை துண்டு துண்டாக வெட்டி க்கொள்ளவும். பிறகு அவற்றை துருவிக் கொள்ளவும்.
ஸ்டெப் 4:
துருவிய சோப்பில் பேக்கிங் சோடாவை சேர்த்து, பிளெண்டரால் நன்கு கலக்கவும். அது ஒரே சீராக கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 5:
இந்த கலவையை இப்போது பயன்படுத்தலாம். இதை ஒரு சுத்தமான கன்டெயினரில் சேமித்து வைக்கவும்.
இவ்வாறு நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக டிடெர்ஜென்ட் தயாரித்து வைப்பதால் அதன் ஆற்றல் குறையாமல் இருக்கும். அவ்வளவு தான் எனவே உங்கள் வீட்டில் புதிய குழந்தை பிறக்கும்போது துணி துவைப்பது என்பது உங்கள் தினசரி வேலையின் ஒரு அங்கமாகிவிடும். ஏனென்றால் குழந்தைக்கு ஒரு நாளில் பல முறை உடை மாற்றியாக வேண்டும். அதனால் உங்கள் சலவைக் கூடையில் ஒவ்வொரு மணி நேரத்திலும் அதிக துணிகள் சேரும். ஆனால் இதைக் கண்டு அசந்து போகாத ீர்கள். இவ்வாறு நீங்களே சுலபமாக செய்யக்கூடிய டிடெர்ஜென்ட் மூலம் உங்கள் குழந்தையின் துணிகளை ஆற்றலுடன் சுத்தம் செய்யலாம். அவ்வாறு துவைத்த துணிகள் குழந்தையின் நாசூக்கான சருமத்திற்கு மிக மென்மையாக இருக்கும்.