உங்கள் கைகளை சரியாக கழுவுவது எப்படி

கூட்டு முயற்சி என்பது நம் அனைவருடைய பாரத்தையும் குறைப்பதோடு, வேலைகளை எளிதாகவும் சிறந்த முறையிலும் செய்து முடிக்க உதவும். உங்கள் வீட்டு வேலைகளை உங்கள் குடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து செய்து முடிக்க இதோ சில அருமையான உதவிக்குறிப்புகள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Try These Easy Tips to Get Housework Done as a Family!
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த காலகட்டத்தில், அதுபோக வேலை ஆட்களும் இல்லாத இந்த சூழ்நிலையில், உங்கள் வேலைப்பளு பன்மடங்கு அதிகரித்து விடும். அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் அதிக அளவு உணவு சமைத்தல், அதிக அளவு பாத்திரம் கழுவுதல் , மற்றும் பலவிதமான சிக்கல்கள் உண்டாகும். மேலும்  உங்கள் சிறிய குழந்தைகளை ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தி வைக்க நீங்கள் புதிது புதிதாக யோசிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு ஒரு பெரிய பாரமாக இருக்கலாம்.

இதோ இந்த எளிய உதவிக் குறிப்புகளை பின்பற்றி உங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு உங்கள் வேலை பளுவை குறைக்கலாம். ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருந்தால், ஒத்துழைத்து வேலை செய்தால், அனைவரும் ஒன்றாக நிறைய நேரம் செலவிடலாம்.

1) திட்டமிட்டு வேலைகளை பிரித்து கொள்ளவும்

முதலில் ஒரு பட்டியலிட்டு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதனை நாள் மற்றும் வாரத்திற்கு ஏற்ப தயார் செய்து கொள்ளவும்.இந்தப் பட்டியலில் இருக்கும் வேலைகளுக்கே நீங்கள் முன்னுரிமை தரவேண்டும். எல்லா வேலைகளையும் எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. சுத்தம் செய்வதும், கிருமிகளை நீக்குவதும் தினமும் செய்தாக வேண்டும் ஆனால் அதை தவிர அலமாரியை சுத்தம் செய்வது, மேடைகளை சுத்தம் செய்வது, போன்றவற்றை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

உங்கள் பட்டியல் தயாரானதும் ஒவ்வொரு வேலையை ஒவ்வொரு குடும்ப உறுப்பினரிடம் கொடுக்கலாம். இதுவே சரியான வகையில் வேலையை பகிர்ந்தளிக்கும் முறையாகும். நீங்கள் ஒரு அட்டவணையை தயார் செய்து அதில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் செய்யப்போகும் நபர் ஆகியவை போன்ற விஷயங்களை எழுதி வைத்து வேலை செய்யலாம்.

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

ஆனால் வேலைகளை முடித்ததும் அனைத்து குடும்ப உறுப்பினரும் தங்கள் கைகளை கழுவ வேண்டியது மிகவும் அவசியமாகும். முக்கியமாக, உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்,  இல்லையேல் லைஃப்பாயிலிருந்து வரும் ஆல்கஹால் சார்ந்த சானிடைஸரை பயன்படுத்தலாம்.

2) குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்

உங்கள் வேலையை பகிர்வதற்கு பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும். வேலைகளை அவர்களிடம் அளிப்பது மட்டுமே அவர்களை ஈடுபாட்டோடு செய்து முடிக்க வைக்காது. உதவி செய்யும் அதே சமயத்தில் அவர்களை குதூகலமாக வேலைசெய்ய வைக்க , அதை ஒரு விளையாட்டைப் போல் மாற்ற வேண்டும். அதாவது இவ்வளவு நேரத்திற்குள் ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும், யார் முதலில் முடிப்பது, முதலில் முடிப்பவர்க்கே அதிக மதிப்பெண், அல்லது முதலில் முடிப்பவரே வெற்றியாளர் போன்ற சிறு சிறு விளையாட்டுகள் மூலம் அவர்களை திறம்பட வேலை செய்ய வைக்கலாம்.

இதேபோல் சிறுசிறு எளிய வழிகளை கொண்டு, வீட்டில் இருத்தலையும், மற்றவர்க்கு உதவுதலையும் ஒரு குதூகலமான விளையாட்டாய் உங்கள் குழந்தைகளுக்காக மாற்ற முடியும். அவை என்ன என்பதை இங்கே படிக்கவும்.

3) உதவி செய்வதின் அர்த்தத்தை எளிமையாக புரிய வையுங்கள்

சில சமயங்களில் நம் குடும்பத்தினரிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டால் கோபப்படுவார்கள்  அல்லது மறுப்பார்கள். எனவே அதை எளிய முறையில் தெரியப்படுத்த வேண்டும். எல்லா வேலைகளுக்கும் ஆற்றல் தேவை இல்லை. சில வேலைகளுக்கு நாம் சில விஷயங்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். அதாவது  ஒவ்வொரு முறை சாப்பிடும் போது குறைந்த பாத்திரத்தை பயன்படுத்துவது, பாத்திரம் கழுவும் நேரத்தை மிச்சப்படுத்தும். அதேபோல் வீட்டில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து பயன்படுத்துவது, எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திருப்பி வைப்பது, போன்ற பழக்கங்களால் வேலை பளு மிகவும் குறையும்.

4) ஒரே நேரத்தில் நிறைய வேலைகளை எப்படி செய்யலாம் என்பதனை அவர்களுக்கு காண்பியுங்கள்

வீட்டு வேலைகள் எப்பொழுதுமே ஒரு சலிப்பான மட்டும் கஷ்டமான வேலையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை எவ்வாறு சுவாரஸ்யமாக இதர வேலைகளுடன் சேர்த்து செய்ய வேண்டும் என்பதனை உங்கள் குடும்பத்தினருக்கு புரிய வையுங்கள். அதாவது டிவி பார்த்துக் கொண்டே துணி மடிப்பது, குளிக்கும் போதே குளியலறை தரையை கழுவுவது போல.

ஆகவே, இந்த உதவிக்குறிப்புகள் அனைத்தும் எளிதில் செய்யக்கூடியது மற்றுமின்றி உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்று சேர்ந்து வேலை பார்க்க வைக்க வல்லது.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது