
உங்கள் குழந்தைகள் தங்களுடைய பள்ளி பைகளில் அனைத்தையும் திணிக்கிறார்களா? அவர்களுடைய பைகளினுள்ளே பல பொருட்கள் காணப்படுவதுடன், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள், அதோடு அவர்களின் பைகளுக்கு புதிய நறுமணத்தைச் சேர்க்க வேண்டும் என்றும் நினைத்திருப்பீர்கள்.
உங்கள் குழந்தையின் பைகளைத் திறந்து பார்ப்பது அச்சத்தை உருவாக்கலாம் – உள்ளே என்ன கிடக்கிறது என்பது யாருக்கும் தெரியும்– ஆனால் தளர்வாக இருங்கள். நாங்கள் உங்களுக்காக எளிய, வீரியம் வாய்ந்த முறையைப் பெற்றிருக்கிறோம்.
உங்கள் குழந்தையின் பள்ளி பைகளைச் சுத்தம் செய்து புதிய நறுமணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதற்கான சரியான வழி இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
படிநிலை 1: பையை காலி செய்யவும்
முதல் படிநிலை பள்ளி பையை காலி செய்யவும். அனைத்து பைகளையும் காலி செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

படிநிலை 2: பையைச் சுத்தம் செய்யவும்
சுத்தம் செய்ய, 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி டிஷ்வாஷிங் லிக்கியூட் கலந்த கரைசலை உருவாக்கவும். ஒரு தூரிகையை எடுத்து இந்த கரைசலை பயன்படுத்தி பள்ளி பையை மெதுவாகத் தேய்க்கவும். சில நிமிடங்கள் தேய்த்த பின், தண்ணீரை உறிஞ்சும் துணியினால் பையைத் துடைக்கவும்.
படிநிலை 3: பையைக் கழுவவும்
பராமரிப்பு லேபிள் இயந்திரத்தினால் சலவை செய்வதைப் பரிந்துரைத்தால், ஒரு முழு தேக்கரண்டி அளவு உங்களுக்கு பிடித்தமான சலவைத் தூளை (இயந்திரம் என்று வருகையில் அளவீடுகளைப் பயன்படுத்தவும்) சேர்ப்பதன் மூலம் பையைக் குளிரான சுழற்சியில் சலவை செய்யுங்கள். ஆனால் பராமரிப்பு லேபிள் கையால் துவைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தால், 1 வாளி வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் 2 தேக்கரண்டி அளவு உங்களுக்கு பிடித்தமான சலவைத் தூள் அல்லது டிஷ்வாஷிங் லிக்கியூட் கலந்த கரைசலை உருவாக்கவும். இந்த கரைசலைப் பயன்படுத்தி பையைத் தூரிகையினால் தேய்த்து, பின ் அதனை அலசவும். பையின் சில பாகங்கள் மென்மையாக இருந்தால் பஞ்சை பயன்படுத்தலாம், உங்கள் நீர்த்தொட்டியில் பையை கைகளால் கழுவவும்.
படிநிலை 4: பையை உலர்த்தவும்
பையின் உள்புறத்தை வெளியில் எடுத்து ஒரு நாள் முழுவதும் இயற்கையான சூரிய ஒளியில் உலர்த்தப் பையைத் தொங்கவிடவும். சூரிய ஒளி பரவி வரும் பாக்டீரியாக்களை கொல்லும், அதோடு பையின் துர்நாற்றத்தையும் அகற்றும். உங்கள் குழந்தையின் பயன்பாட்டிற்குப் பள்ளி பையை அளிப்பதற்கு முன், அது முழுவதுமாக உலர்த்தப்பட்டது என்பதை உறுதி செய்யவும்.
படிநிலை 5: புதிய நறுமணத்தை சேர்க்கவும்
பள்ளிப் பையில் புதிய நறுமணத்தை சேர்க்க, ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தண்ணீரை எடுத்து, அதில் 3 முதல் 4 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யைச் சேர்க்கவும். அதை நன்கு கலக்கவும். ச ிறிய சுண்ணக்கட்டியை எடுத்து, இந்த கரைசலில் மூழ்கச் செய்யவும். அது கரைசலை முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். சுண்ணக்கட்டியை ஒரு துணியால் மூடி, அதனை உங்கள் குழந்தையின் பள்ளி பையின் ஒரு மூலையில் வைக்கவும். இது பைகளுக்கு புதிய நறுமணத்தைச் சேர்க்கும். நீங்கள் சுண்ணக்கட்டியை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
இந்த எளிய மற்றும் வீரியம் மிகுந்த குறிப்பை உங்கள் குழந்தையின் பள்ளி பைகளில் நல்ல நறுமணத்தை ஏற்படுத்த நினைக்கும் போதெல்லாம் பயன்படுத்துங்கள்!
முக்கிய படிநிலை:
ஒரு கப் சமையல் சோடாவை எடுத்து பையை உலர்த்தும் சமயத்தில் அதன் அடிப்பரப்பில் தூவி விடவும். இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு, பின் அகற்றி விடவும். இது துர்நாற்றத்தை நடுநிலையாக்கும், அதோடு பைகளில் நல்ல நறுமணத்தை உருவாக்குவதற்கான மேற்கண்ட படி நிலைகளை நீங்கள் பின்பற்றுவதற்கு முன், உங்களுக்கான நேரத்தை அளிக்கும்.