
காய்ச்சல் பருவகாலத்தில் உங்கள் குழந்தை விளையாடுவதற்கோ அல்லது படிப்பதற்கோ வெளியே செல்வது கவலை அளிக்கிறது. உங்கள் குழந்தையை கிருமிகளிலிருந்து பாதுகாக்க வெவ்வேறு நபர்களும், தகவல்களும் உங்களுக்கு வெவ்வேறு உதவிக்குறிப்புகளைக் கொடுக்கும்,மற்றும் இவை அனைத்தும் மிகவும் குழப்பமானதாகத் தோன்றலாம். ஆனால், குழந்தைகளின் கேளிக்கையை தடுப்பதற்குப் பதிலாக, இந்த பழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1: தனிப்பட்ட சுகாதாரத்திற்கு
குழந்தைகள் தங்கள் பெரியவர்களைப் பின்பற்றுவதால், நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும். சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள் அல்லது லைஃப் பாயிலிருந்து கிடைக்கும் ஆல்கஹால் சார்ந்த சானிடிசரைப் பயன்படுத்துங்கள். தயவுசெய்து குடும்பத்திற்கு உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், குளியலறையைப் பயன்படுத்திய பிறகு இதைச் செய்யுங்கள்.
அன்பாகவும் பொறுமையுடனும் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் செய்ய கற்றுக்கொடுங்கள். வீட்டிற்கு வந்தபின் கைகளை கழுவும் பழக்கம் (பள்ளி, வகுப்புகள், பூங்கா போன்றவற்றிலிருந்து) அவர்கள் மனதில் பதியும் வரை மெதுவாக அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ, உங்கள் வாயை ஒரு திசு கொண்டோ அல்லது முழங்கையாலோ மூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (ஒரு திசு கிடைக்கவில்லை என்றால்). டஸ்ட்பினில் திசுக்களை போடவும், உங்கள் குழந்தைக்கும் இதைச் செய்ய கற்றுக்கொடுக்கவும். முகப்பு அறை, குளியலறை அல்லது சமையலறை போன்ற பகிரப்பட்ட இடங்கள் காற்றோட்டமாகவும் நன்கு காற்று புக வசதியாக இருந்தால் நல்லது.
2: உங்கள் வீட்டில் உள்ள மேற்பரப்பிற்கு
கிருமிகள் தும்மலுக்குப் பிறகு 3 அடி வரை பயணிக்கலாம், தேவையற்ற தொற்றுநோய்களைப் பரப்பி வெவ்வேறு மேற்பரப்பில் தங்கிவிடலாம். வீட்டில் உள்ள சில மேற்பரப்புகளை நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அடிக்கடி தொடுகின்றனர். அதிகமாக தொடக்கூடிய மேற்பரப்புகள் என்று கருதப்படுபவை, இதில் சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், மோஜைகள், குழாய்கள், கேபினட் கைப்பிடிகள், கழிப்பறை இருக்கைகள், ஃப்லஷ் கைப்பிடிகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அடங்கும். வெளிப்புற விளையாட்டுப் பகுதியுடன் தினமும் இந்த மேற்பரப்புகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்வது நல்லது.

இந்த மேற்பரப்புகளில் இருந்து தூசி அல்லது அழுக்கை சுத்தம் செய்ய வழக்கமான வீட்டு சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். சுத்தம் செய்தபின், கிருமிகளைக் கொல்லும் டொமெக்ஸ் தரை கிளீனர் போன்ற ப்ளீச் அடிப்படையிலான (சோடியம் ஹைபோகுளோரைட்) தயாரிப்பு கொண்ட பொருத்தமான கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள். ஒரு சிறிய மறைவான பகு தியில் எப்போதும் முதலில் சோதிக்கவும், பின் அதன் தன்மையை சரிபார்த்து உபயோகப்படுத்தவும்.
3: சலவைக்கு
கிருமிகள் மேற்பரப்பில் மட்டுமல்ல, ஆடைகளிலும் வசிக்கும். உங்கள் குழந்தைகளின் பள்ளி சீருடைகள், அழுக்குள்ள விளையாட்டு உடைகள், குடும்பத்தினரின் உடைகள் உட்பட அனைத்து ஆடைகளும் நன்கு துவைக்கப்படுவதை உறுதிசெய்யுங்கள். சோப்பினால் துணிகளை நன்கு துவைப்பது கிருமிகளை அகற்ற போதுமானது. விரிப்புகள் மற்றும் துணிகளுக்கு ரின் ஆலா போன்ற ப்ளீச் (சோடியம் ஹைபோகுளோரைட்) பயன்படுத்தலாம். ரின் ஆலா ஒரு சோடியம் ஹைபோகுளோரைட் ப்ளீச் என்பதால் வெள்ளை ஆடைகளில் மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. வண்ண ஆடைகளில் பயன்படுத்த வேண்டாம்.
ஒரு சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தினால், சலவை அல்லது ஆடை பொருட்களின் லேபிள்களில் உள்ள அறிவுரைக ்கு ஏற்ப, பொருத்தமான நீர் வெப்பநிலை அமைப்பைப் பயன்படுத்தி துணிகளைத் துவைக்கவும். துணிகளை வெயிலில் காயவைத்து, பின் அவற்றை மடித்து வைப்பதை உறுதிசெய்யுங்கள்.
4: தனிநபர்க்குறிய வீட்டு உபயோக பொருட்களுக்கு
சாத்தியமானால், ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தனித்தனி உணவு பாத்திரம், கிளாஸ்கள், கட்லரி, டிஃபின் பாக்ஸ்கள் இருக்க வேண்டும் - அவை ஒரு நல்ல பாத்திரங்கழுவி சோப்பை பயன்படுத்தி தவறாமல் நன்கு கழுவப்பட வேண்டும். துண்டுகள் அல்லது படுக்கைகள் கூட குடும்ப உறுப்பினர்களிடையே பகிரப்படக்கூடாது. மற்ற அனைத்து வீட்டு பொருட்களையும் சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் அல்லது ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைகளையும் உங்கள் குடும்பத்தினரையும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இந்த எளிய மற்றும் பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.