உங்கள் வௌ்ளை சோபாவில் உங்கள் குழந்தை சர்பத்தை சிந்திவிட்டதா? இந்த எளிய குறிப்புகளை செய்து பாருங்கள்.

உங்கள் சோபாவில் உங்கள் குழந்தை சர்பத்தை சிந்தும் ஒவ்வொரு முறையும் நீங்கள் சுத்தம் செய்பவரை கூப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்களே இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி அதை சுத்தம் செய்து நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Did your Child Spill Sherbet on your White Sofa? Try these Tips
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

சுத்தமான மற்றும் சொகுசான சோபாவைத் தவிர உங்கள் ஹாலை அழகாக்குவது வேறு எதுவும் இல்லை.  ஆனால் வீட்டில் குழந்தை இருந்தால்,  நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும்கூட உங்கள் சோபாவில் யதேச்சையாக சிந்துதல் மற்றும் கறைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.  அதிலும் குறிப்பாக வௌ்ளை நிற சோபா இருந்தால் அது மிகவும் அசிங்கமாகிவிடும்.  இருந்தாலும் சர்பத் மற்றும் பழச் சாறுகள் போன்ற சில கறைகளை சுலபமாக நீக்கிவிடலாம். எனவே சுத்தம் செய்பவரை ஆண்டிற்கு ஒரு முறை அழைப்பது ஒரு சிறந்த ஐடியாவாகும். இதர நேரங்களில் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். 

1) லெதர் சோபா

ஒரு சுத்தமான பருத்தி துணியை எடுத்து, கறைபட்ட பகுதியை ஒத்தி எடுக்கவும் இதன் மூலம் சோபாவில் இருக்கும் சர்பத் துணியினால் உறிஞ்சப்படும்.  ஒரு கிண்ணத்திலுள்ள தண்ணீரில் 2 டீஸ்பூன் லிக்விட் டிடெர்ஜென்ட் விட்டு நன்கு கலக்கவும். ஒரு மென்மையான ஸ்பாஞ்சை எடுத்து இந்த கரைசலில் நனைத்து உங்கள் சோபாவில் உள்ள கறையை துடைக்கவும். 

அடுத்ததாக 2 கிண்ணம் வெதுவெதுப்பான தண்ணீரை வாளியில் விடவும். இதில் ஒரு சுத்தமான உலர்ந்த டவலை நனைக்கவும்.  இந்த டவலை பயன்படுத்தி, சோபாவில் இருக்கும் க்ளீனிங் கரைசலை நீக்கவும்.  ஒரு உலர்ந்த டவலால் சோபாவை தண்ணீர் கறைகள் இல்லாமல் துடைத்து நீக்கவும். 

2) ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி இருக்கும் சோபா

உங்கள் வௌ்ளை ஃபேப்ரிக் சோபாவில் சிந்திவிட்டால், உடனே ஒரு உலர்ந்த சுத்தமான பருத்தி துணியை எடுத்து அந்த கறைபட்ட இடத்தை ஒத்தி எடுக்கவும்.  பருத்தி துணி பெரும்பாலான சர்பத்தை சோபாவிலிருந்து உறிஞ்சிவிடும். ஒரு கிண்ணத்தில் 2 கப் வெதுவெதுப்பான தண்ணீரியைும், ஒரு கப் வினிகரையும், 1 கப் பேக்கிங் சோடாவையும் 2 டீஸ்பூன் கல் உப்பையும் போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் விட்டுக் கொள்ளவும்.  இப்போது இந்த கரைசலை கறைபட்ட இடத்தில் ஸ்ப்ரே செய்து பிறகு ஒரு மைக்ரோ ஃபைபர் துணியால் அதை ஒத்தி எடுக்கவும். நீங்கள் மைக்ரோ ஃபைபர் துணியிலும் இந்த கரைசலை ஸ்ப்ரே செய்து கறைபட்ட இடத்தை பல முறை ஒத்தி எடுக்கலாம். இதுதான் உங்கள் சோபாவில் பட்ட சர்பத் கறையை சில நிமிடங்களை நீக்கி மற்றும் நறுமணம் பெறுவதற்கான மிக எளிமையான வழி. சர்பத் கறை நீங்கிய பிறகு ஒரு சுத்தமான உலர்ந்த துணியால் கறைப்பட்ட பகுதியை தட்டி உலர வைக்கவும். 

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

நீங்கள் சோப்பாவை ஒரு சுத்தம் செய்யும் தொழிலாளி போல சுத்தம் செய்துவிட்டீர்கள். இனி அடுத்த முறை உங்கள் குழந்தை சர்ப்பத்தை சோபாவில் சிந்தினால், கவலைப்பட வேண்டியது இல்லை., ஏனென்றால் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது